Master PasswordAppஒரு அறிமுகம்

நாமனைவரும் தற்போது இணையவசதிகொண்ட உலகில் வாழ்ந்து வருகின்றோம் எந்தவொரு தனிநபரும் குறைந்தபட்சம் 20 இணையபக்கங்களுக்காவது உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை கொண்ட கணக்கு கண்டிப்பாக வைத்திருப்பார். அதனால் நாம் மிகவும் வலுகுறைந்த யாராலும் மிகவும்எளிதாக யூகிக்ககூடிய கடவுச்-சொற்களையே பயன்படுத்திடுகின்றோம் அதைவிட நம்மில் 80 சதவிகித மக்கள் அனைத்து கடவுச்சொற்களை-யும் நினைவில் கொள்ளமுடியவில்லையென ஒரேயொரு கடவுச்சொற்களையே அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளும் அபாயத்தையையும் பின்பற்றி வருகின்றனர். அடுத்ததாக அதிக எண்ணிக்கையிலான கடவுச்சொற்களாக இருப்பதால் அவைகளை குறிப்பேட்டிலும் தங்களுடைய இணையஉலாவியிலும் பதிவுசெய்து பாதுகாப்பில்லாமல் சேமித்து வைத்துள்ளனர் இதை தவிர்ப்பதற்காக வென PasswordMangerஎன்பதை பயன்படுத்தி கொள்கின்றனர் அனைத்து கடவுச்சொற்களையும் இதனுடைய ஒரேயொரு மறையாக்கும் செய்த கோப்பில் சேமித்துவைத்து பயன்படுத்திடுகின்றனர் தப்பிதவறி இந்த கோப்பு நீக்கம் செய்யப்பட்டுவிட்டால் அல்லது அழிந்து போனால் மொத்த கடவுச்சொற்களையும் மீட்டெடுக்கமுடியாமல் தவித்திடுவோம் என்பனபோன்ற அபாயங்கள் இதில் உள்ளன அதற்குபதிலாக Random Passwordஎன்றவகையில் உருவாக்கி பயன்படுத்திடுவார்கள் இதுவும் பாதுகாப்பானதாக இல்லை
இந்த Random Passwordஎன்பதையேஅனைத்து கணக்குகளுக்கும் ஆன ஒற்றை.யான மிகவலுவான கடவுச்சொற்களை உருவாக்கி பயன்படுத்தஉதவவருவதுதான் Master PasswordApp ஆகும் இதில் நம்முடைய பெயர் Master Password இல்நாம் கணக்கு உருவாக்கவிரும்பும் இணையத்தின் பெயர் ஆகியவற்றுடன் PasswordCounter இயல்புநிலையில் 1 எனஇருக்கும் நாம் அதிகபடுத்தி எத்தனை இணையதளத்திற்கு தேவையோ அதற்கேற்றவாறு எண்ணிக்கை அமைத்துகொண்டால் போதுமானதாகும் உடன் நாம் கட்டமைத்தவாறு மிகவலுவான முதன்மையான கடவுச்சொற்கள் உருவாகி விடும் இதனை உருவாக்குவதற்கென தனியாக இதில் பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை அதேபோன்று நம்முடைய கடவுச்சொற்களை சேமித்து-வைத்திட தேவையில்லை இணைய இணைப்பு இருக்கவேண்டிய அவசியமில்லை இது கணினிமுதல் கைபேசிவரை இயக்கமுறைமைமுதல் இணையபயன்பாடுவரை எந்தவொரு இடத்திலும் செயல்படக்கூடியதாகும் மேலும் விவரங்களுக்கு https://js.masterpassword.app/ என்ற இணையமுகவரிக்கு சென்றறிந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: