ஆண்ட்ராய்டு சாதனத்தில் தேவையற்றசெய்திகள் வராமல் தடுப்பதெவ்வாறு

நம்முடைய ஆண்ட்ராய்டுதிறன்பேசியில்அல்லது கைபேசியில் உள்வருகை பெட்டியில் குப்பைசெய்திகளும் பொய்யான இணைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்து சேர்ந்து மலைபோன்று குவிந்து நம்முடைய வழக்கமான செயலைசரியாக செய்யபடவிடாமல் நம்மை திக்குமுக்காட செய்துவிடுகின்றன அவ்வாறான குப்பையான செய்திகளை எவ்வாறு நம்முடைய சாதனத்திற்குள்உள்வருகை செய்யாமல்தடுப்பது என்பதற்கான படிமுறை-பின்வருமாறு
1.நம்முடைய திறன்பேசியானது அல்லது கைபேசியானது கூகுளின் stock Android roms என்றிருந்தால் முதலில் app drawer இலிருந்து stock messenger app என்பதை திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் நமக்கு குப்பை செய்தி வரவேண்டாம் எனவிரும்பும் பயனாளர் பெயரை மட்டும் தெரிவுசெய்து ஏதேனுமொருசெய்தி தோன்றிடும் வரை அழுத்தி பிடித்திருக்கவும் பின்னர் blockஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக மீ்ண்டும் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
2.நம்முடைய திறன்பேசியானது அல்லது கைபேசியானது Samsung இன் TouchWiz என்றிருந்தால் முதலில் app drawer இலிருந்து stock Samsung messenger app என்பதை திரையில் தோன்றிடச்செய்திடுக பின்னர் நாம் தடைசெய்திடவிரும்பும் தொடர்பாளர்களின் பெயர்பட்டியலை தெரிவு-செய்திடுக அதில் More என்பதை தெரிவுசெய்திடுக அதன்பின்னர் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தடுக்கவிரும்புவைகளை மட்டும் தெரிவுசெய்து கொண்டுOk என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு பதிலாக More->Settings->Block Messages-> Block Numbers->. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக பின்னர் தோன்றிடும் திரையில் தடுக்க விரும்பும் அனைத்து கைபேசி எண்களையும் உள்ளீடுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
3.நம்முடைய திறன்பேசியானதுஅல்லது கைபேசியானது LG ஆக இருந்தால் கவலையே படவேண்டாம் முதலில் app drawer இலிருந்து stock LG messenger app என்பதை திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் நமக்கு குப்பை செய்தி வரவேண்டாம் எனவிரும்பும் chat threadஐ தெரிவுசெய்து அழுத்தி பிடித்து கொள்க தொடர்ந்து திரையின் மேல வலதுபுற-மூலையில் உள்ள முப்புள்ளியை(three-dot) தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தடுக்கவிரும்பும் கைபேசி எண்களை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.நம்முடைய திறன்பேசியானது அல்லது கைபேசியானது HTC ஆக இருந்தால் முதலில் app drawer இலிருந்து stock messenger app என்பதை திரையில் தோன்றிட செய்திடுகபின்னர் நமக்கு குப்பை செய்தி வரவேண்டாம் எனவிரும்பும் chat threadஐஅழுத்தி பிடித்து கொள்க தொடர்ந்து ஏதேனுமொருசெய்தியும் பல்வேறு வாய்ப்புகளும் திரையில் தோன்றிடும் அவற்றுள் தடுக்கவிரும்புவைகளை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: