ஆண்ட்ராய்டு சாதனத்தில் தானியங்கியாக அமைவைசெய்து அதற்காக நாம் செலவிடும் நம்முடைய நேரத்தை சேமித்திடலாம்

பொதுவாக நம்மில் பலர் ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியில் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான அமைவை நாமே நம்முடைய கைகளால் முயன்று அமைத்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள் இதற்குபதிலாக ஆண்ட்ராய்டில் பல்வேறு அமைவுகள்நாம் தெரிவுசெய்தால் மட்டும் போதும் தானாகவே அவை கட்டமைக்கபட்டுவிடும் அவ்வாறான அமைவுகள் பின்வருமாறு
1. கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொண்டிருக்கும்போது அதனுடைய சமீபத்திய மேம்பாட்டு பதிப்புகளை அவ்வப்போது அதற்கான வாய்ப்புகளை தெரிவுசெய்து தானியங்கியாக நிகழ்நிலைபடுத்தி கொள்க
2. கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொண்டிருக்கும்போது அதில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கின்றதாவென தானியங்கியாக scans your apps and phone for harmful content. என்ற வாய்ப்பின் வாயிலாக அவ்வப்போது சரிபார்த்திடசெய்திடுக
3. திரையின் ஒளிரும் அளவை சூழலிற்கு ஏற்றவாறு தானாகவே அமைத்து கொள்ள Settings > Display என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Adaptive brightness என்ற வாய்பினை இயலுமை செய்து கொள்க
4. நம்முடைய திறன்பேசியில் அல்லது கைபேசியில் போதுமானநினைவகம் இல்லை என்ற எச்சரிக்கை செய்தி வருகி்ன்றநிலையில் தேவையற்ற கோப்புகளை நீக்கம்செய்து நினைவகத்தினை ஏற்படுத்தி கொள்வதற்கு பதிலாக Settings > Storage என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Smart Storage என்ற வாய்பினை தெரிவுசெய்து கொண்டு 30 ,60 ,90 ஆகிய குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்பட்ட கானொளி படகோப்புகளைதானாகவே நீக்கம்செய்து காலிநினைவகத்தினை ஏற்படுத்திடுமாறுசெய்துகொள்க
5. நம்முடைய சாதனம் அருகலை வலைபின்னல் சூழலிற்குள் செல்லும்போது தானாகவே அந்த அருகலை வலைபின்னலுடன் இணைந்திடுமாறுசெய்திட Settings > Network & Internet> Wi-Fi என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில்Wi-Fi preferences.என்பதையும் Turn on Wi-Fi automatically என்பதை இயலுமை தெரிவுசெய்து கொள்கஅவ்வாறே Connect to open networks என்பது செயலில்இருக்குமாறு பார்த்து கொள்க
6. VPNஎன்பது எப்போதும் செயலில் இருக்குமாறுசெய்து கொள்கஇதற்காக Settings > Network & Internet > VPNஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில்Always-on VPNஎன்பதை தெரிவுசெய்து கொள்க
7. நாம் மிகமுக்கிய பணியில் ஆழ்ந்திருக்கும்போது நம்மை திசைதிருப்பாமல் இருப்பதற்காக Settings > Sound > Do Not Disturb preferenceஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Automatic rules.என்பதன்கீழ் நம்முடைய பணிகளை பட்டியிலி்ட்டுவிட்டால் (Event schedule) அந்த நேரம் முடியும்வரை நம்மை தொந்திரவுசெய்திடாமல் பார்த்து கொள்ளும்

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: ஆண்ட்ராய்டு சாதனத்தில் தானியங்கியாக அமைவைசெய்து அதற்காக நாம் செலவிடும் நம்முடைய நேரத்தை சேம

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: