தனிநபர் வருமானவரிபடிவத்தை எவ்வாறு இணையத்தில் நேரடியாக சமர்ப்பிப்பது


2017-18 ஆம் நிதிஆண்டு முடிவடைந்து விட்டது அதனைதொடர்ந்து தனிநபர்கள் தத்தமது வருமான வரிபடிவத்தை31.07.2018 இற்குள் சமர்ப்பிக்கவேண்டும். இதற்காக-வென தனியாக தணிக்கையாளர்களின் உதவியில்லாமலேயே நாமே இந்த படிவத்தை இணையத்தின் வாயிலாக நேரடியாக சமர்ப்பிக்கமுடியும் அதற்காக முதலில் http://www.incometaxindiaefiling.gov.in எனும் இணையபக்கத்திற்குசெல்க அதில் முதன்முதலில் உள்நுழைவுசெய்வதாக இருந்தால் நம்முடைய PAN எண்ணை பயனாளரின் பெயராகவும் நாம் விரும்பியவாறு கடவுச்சொற்களையும் உருவாக்கி பதிவுசெய்துகொள்க பின்னர் இந்த PANஐயும் கடவுச்சொற்களையும் பயன்படுத்தி இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்க அதன்பின்னர் நாம் சமர்ப்பிக்கும் வருமானவரிஆண்டை (assessment year) தெரிவுசெய்திடுக பொதுவாக 2017-18 என்ற நிதியாண்டிற்கான வருமான விவரங்களை நடப்பு ஆண்டான 2018-19 எனும் வருமானவரிஆண்டில் சமர்ப்பிப்பது போன்றதாகும் இந்த தளத்தில் தனிநபர் வருமானவரி படிவத்தைசமர்ப்பிப்பதற்காக ITR-1 ,ITR-2,ITR-3,ITR-4ஆகிய நான்கு வகை படிவங்களை நாம் சமர்ப்பிப்பதற்காக தயாராக உள்ளன இவற்றுள் 1,4உம்நேரடியாக இணையத்தில் சமர்ப்பிக்க-கூடியவையாகும் 2,3 உம் பதிவிறக்கம்செய்து பொறுமையாக பூர்த்திசெய்து அதன்பின்னர் பதிவேற்றம்செய்து கொள்ளமுடியும் இந்த படிவங்கள் அனைத்தும் எக்செல் வடிவமைப்பில் பயனாளர்களின் இனிய நண்பனாக ஜாவா பயன்பாட்டின் உதவியுடன் எளிதாக பூர்த்தி செய்து சமர்ப்பித்திடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன அதனால் இவற்றுள் நமக்கு பொருத்தமான படிவத்தை தெரிவுசெய்து கொள்க உடன் அந்த படிவத்தில் நம்முடைய PANஇன் அடிப்படையிலான சொந்த தகவல்கள் பிரதிபலிக்கும் தேவையெனில் மேலும் விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு முடிவுநாளிற்கு முன்பாகவா அல்லது முடிந்த பின்னரா என்றும் வருமானவரியாண்டில் முதல் படிவமா அல்லது திருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட படிவமா என்றும் தெரிவுசெய்து கொள்க அடுத்துதோன்றிடும் பக்கமானது நம்முடைய மொத்த வருமானம் அதற்கான-வரி போன்றவிவரங்களை குறிப்பிட பயன்படும் மிகமுக்கியமானபடிவமாகும் மாதசம்பளக்காரர் எனில்நாம் பணிபுரியும் நிறுவனத்தால் நமக்கு வழங்கிய படிவம் 16இல் உள்ள விவரங்களை கொண்டு நிகர வருமானத்தை பூர்த்திசெய்தால் ஏற்கனவேநம்முடைய சம்பளத்தில் வருமானவரியாக பிடித்தம்செய்த தொகை அதற்கான கலணில் தானாகவேகாண்பிக்கும் நமக்கு வீடு சொந்தமாக இருந்தால் அதனுடைய வருமானம் அதனை கட்டுவதற்காக கடன் வாங்கியிருந்தால் அதற்காக செலுத்திய வட்டித்தொகையை குறிப்பிடுக மேலும் வேறுவகைகளில் வருமானம் ஏதேனும் பெற்றிருந்தால் அவற்றை குறிப்பிடுக அதற்கடுத்தபக்கத்தில் நம்முடைய வருமானத்தில் என்னென்ன செலவுகளை கழித்து கொள்ளலாம்என்பதாகும் இதில்வருங்கால வைப்புநிதி, ஆயுள்காப்பீடு,மருத்துவக்காப்பீடு போன்ற விவரங்களை வருமானவரி சட்டம்பிரிவு80சி இன்படி அதிகபட்சம் 1.50 இலட்சம்வரை அனுமதிக்கப்- படும் இதனோடு NPS investment என்பதில் முதலீடுசெய்திருந்தால் கூடுதலாக 0.5இலட்சம் அனுமதிக்கின்றது அடுத்து தோன்றிடும்பக்கத்தில் நாம் உள்ளீடுசெய்த வருமான பிடித்தங்கள், முதலீடுகள் ஆகிய விவரங்களின் அடிப்படையில் நாம் செலுத்தவேண்டிய வருமானவரிகணக்கிடப்பட்டு rebate உடன் காண்பிக்கும் நமக்குஅயல்நாட்டிலிருந்து வருமானம் வந்திருந்தால்அதற்கான வருமான கழிவாக relief பிரிவு 89(1)இன்படி குறிப்பிடுக உடன் அடுத்துதோன்றிடும் பக்கமானது நன்கு பகுதியாக பிரிக்கப்-பட்டிருக்கும் இதன் முதல் பகுதிநாம் பணிபுரியும் நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்ட TDS விவரங்களும் இரண்டாம் பகுதி வங்கியில் முதலீடுசெய்து அதற்கான வட்டி பெறப்பட்டிருந்தால்அதில் பிடித்தம்செய்யப்பட்ட TDS விவரங்களும் மூன்றாவது பகுதியில் விற்பணையாளருக்காக பிடித்தம்செய்யப்பட்ட TCS விவரங்களும் நான்காவது பகுதியில் TDS அல்லது TCSவாயிலாக நாம் முன்கூட்டியே வருமானவரி செலுத்தியிருந்தால் அந்தவிவரங்களும் காண்பிக்கும் நாம் வருமானவரி செலுத்தாதபோது நம்முடைய வருமானம் ரூபாய்பத்தாயிரத்திற்கு மேல்இருந்தால் நாமே முன்வந்து முன்கூட்டியே வருமானவரிசெலுத்தவேண்டும் மேலும் நம்முடைய வங்கிகிளையின் பெயர் வங்கி கணக்கின் எண் IFS குறியீட்டு எண் ஆகியவற்றை மிகச்சரியாக உள்ளீடுசெய்து கொள்க இவ்வாறு கணக்கிட்டு காண்பித்த பகுதியின் வருமான வரியானது மிகச்சரியாக செலுத்தியிருந்தால்அல்லதுஅதிகமாக செலுத்தியிருந்தால்அல்லது குறைவாக செலுத்தியிருந்தால் அடுத்துஎன்னசெய்வது என்ற மூன்று நிலைஉருவாகும் முதலிரண்டு நிலைகளில் ஒன்றும் செய்யத்தேவையில்லை மூன்றாவதுநிலையான மிகுதிவருமானவரி செலுத்த வேண்டியிருந்தால் உடன் இணையத்தின் வாயிலாக வருமானவரியை செலுத்திவிடுவது நல்லது என பரிந்துரைக்கப்-படுகின்றது அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றுதெனில் Submit எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் e-verify என்ற செய்தியுடன் நம்முடைய வருமானவரிகணக்கு சரிபார்க்கப்பட்டு கொண்டிருப்பதாக செய்தி தோன்றிடும் அதன்பின்னர் பிரிவு 143(1) இன்கீழ் ஏற்புகைசீட்டு நம்முடைய மின்னஞ்சல் வாயிலாக நமக்குகிடைக்கும் நாம் கூடுதலாக வருமானவரி செலுத்தி-யிருந்தால் இதேபோன்று பிரிவு 143(1) இன்கீழ் கூடுதலாக செலுத்திய தொகை திரும்ப வழங்கவிருப்பதாக அறிவிப்பு கிடைக்கபெறும் அதனைதொடர்ந்து மூன்று மாதங்களுக்குள்அந்ததொகை நம்முடைய வங்கிகணக்கிற்கு வந்துசேர்ந்துவிடும் குறைவாக செலுத்தியிருந்தால் பிரிவு 143(1) இன்கீழ் மிகுதி தொகையைஉடன் செலுத்துமாறு கோரிஅறிவிப்பு கிடைத்திடும் அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள்மிகுதி நாம் செலுத்தவேண்டிய தொகையைசெலுத்தி ஏற்புகை சீட்டினை பெற்றிடுக

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Narayana Ganeshan
  ஜூலை 14, 2018 @ 04:28:50

  மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   ஜூலை 14, 2018 @ 14:38:14

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

   என்றும் தங்கள் அன்புள்ள

   முனைவர்சகுப்பன்

   மறுமொழி

 2. Trackback: தனிநபர் வருமானவரிபடிவத்தை எவ்வாறு இணையத்தில் நேரடியாக சமர்ப்பிப்பது – TamilBlogs
 3. hello-barber.com
  ஜூலை 17, 2018 @ 19:47:35

  Online slot machines. Golden Earring tot aan het heft.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: