புதிய நிரலாளர்களாக ஆவது எவ்வாறு ?

தம்முடைய வாழ்க்கையில் கணினிமொழியறிந்த சிறந்த நிரலாளர்களாக வளர்வது எவ்வாறு என்பதுதான் பெரும்பாலானவர்களின் தற்போதைய மிகப்பெரிய கேள்விகுறியாகும் தற்போதைய தகவல்தொழில்நுட்ப புரட்சியினால் இந்த துறையை பின்பற்றுபவர்கள் அதிலும் கணினிமொழியறிந்த சிறந்த நிரலாளர்கள் என தான் வளர்ச்சியடையவேண்டும் என்பவர்களுக்கு கைநிறைய சம்பளம் சமூகத்தில் கௌரவமான இடம் வசதியான வாழ்க்கை ஆகியவை கிடைப்பதால் அனைவரும் மிகஆவலுடன் விரும்பும் துறையாகவும் வாழ்க்கையின் கனவாகவும் மாறிவிட்டது. இவ்வாறான இன்றைய காலகட்டத்தில் நான் எவ்வாறு ஒரு கணினிமொழியை கற்று சிறந்ததொரு நிரலாளராக உயர்வது என்பதே மிகப்பெரிய கேள்விக்கு குறியாகும் நிற்க
கணினிமொழியை நேரடி வகுப்பிற்கு சென்று காதால் கேட்டு கற்க விரும்புகின்றோமா அல்லது புத்தகம் மட்டும் போதும் அதனை படித்துஅறிந்து கொள்ள விழைகின்றோமா அல்லது சிறந்த கணினிமொழியறிந்த நிபுணர் ஒருவரிடம் சென்று செய்முறைபயிற்சியாக அறிந்து கொள்ளபோகின்றோமா ஆகிய வழிமுறைகளில் ஒன்றினை நம்முடைய வசதிக்கு தக்கவாறு முடிவுசெய்து கொள்க
அடுத்துதாக இவ்வாறான நம்முடைய கணினிமொழியாளராக வளரவிரும்புவது நம்முடைய பதவி உயர்விற்காகவா அல்லது புதியதான வாழ்க்கைபாதையை அடைவதற்காகவா அதெல்லாம் இல்லை சாதாரணமாக கணினிமொழியை அறிந்து கொண்டால் போதும் என்பதற்காகவா என்பனபோன்றவற்றில் நாம் எதற்காக இதனை தெரிவுசெய்கின்றோம் என முடிவுசெய்து கொள்க
கணினிமொழியை கற்பதற்கு போதுமான பணவசதி நம்மிடம் உள்ளதா நல்ல தரமான கணினிமொழிஅறிவை எங்கு பெறமுடியும் ஆகிய நிபந்கனைகளில் எதனை பின்பற்றபோகின்றோம் என தெரிவுசெய்துகொள்க
மேலும் மிகப்பிரபலமான JavaScript, Java, PHP, Python போன்ற மொழிகளில் ஒன்றையா அல்லதுPerl , Swift , Rust.,Rupy போன்ற மொழிகளில் ஒன்றையா அல்லது இவைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளையாவென முடிவுசெய்து கொள்க
பொதுவாக இவைகளனைத்தினுடைய வழிமுறைகள் ,இனங்கள் ,செயலிகள் நிபந்தனைகள், ஆகியவை அடிப்படையில் ஏறத்தாழ ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் ஆயினும் இவைகளின் இலக்கணம் ,இணையத்தின் உதவிக்குழுக்கள் மட்டுமே ஒவ்வொன்றிலும் வேறுபடும் என்ற செய்தியை மனதில் கொள்க
அடுத்ததாக ஏதேனும் ஒரு கணினிமொழியை தெரிவுசெய்து கற்றுகொள்ள ஆரம்பித்தவுடன் உடனடியாக ஆழமான கிணற்றில் தடாலடியாக குதிப்பதை போன்று முழ்கி தடுமாறி வெறுத்து வெளியேறவேண்டாம் முதலில் எளிய நிரல்தொடரை எழுதி செயல்படுத்தி சரிபார்த்தபின்னர் அடுத்த சிறிது கடினமானதையும் அதற்கடுத்த மிககடினமானதையும் என்றவாறு படிப்படியாக உயர்த்திகொண்டேவந்தபின்னர் மிகப்பெரிய செயல்திட்டத்தினை எழுதி வெற்றிபெற்றால் மனத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும் அதன்பின்னர் நாம் வாழ்க்கையில் இதனை பின்பற்றிமுன்னேற முயற்சிசெய்திடுவது நன்று என பரிந்துரைக்கப்படுகின்றது

1 பின்னூட்டம் (+add yours?)

  1. www.tripoto.com
    ஜூலை 13, 2017 @ 03:47:57

    The %BT% topic matter have been through completely ears prolonged.
    What can it exactly denote? Plainly looking to information them in my content can I
    have some help?

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.