தற்போதைய தொழிலநுட்ப வளர்ச்சியினால் கல்வி கற்பிப்பதில் ஏற்பட்ட மாறுதல்கள் யாவை?

வரலாற்றுமுந்தைய ஆரம்பகாலத்தில் மாணவர்கள் யாராவது ஒரு குருவின் இல்லத்திற்கு சென்று அவருடனேயே தங்கி அவருக்கு தேவையான பணிவிடைகள் செய்து கல்விகற்றுவந்த நிலையானது நாகரிக வளரச்சியினால் மாறுதலாகி கல்வி நிலையங்களுக்கு சென்று வகுப்பறையில் ஆசிரியர்களிடம் கல்விகற்கும் நிலைக்கு மாறியது கரும்பலகையில் ஆசிரியர்கள் எழுதுவதை கற்றறிந்து கொண்டிருந்த நிலையானது SMARTBoardஎனும் பலகையில் படவில்லைகாட்சியாக கல்வி கற்பதற்கான நிலைக்கு வளர்ச்சி பெற்றது அதன்பின்னர் அனைவரும் நேரடியாக கல்விநிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இடைநிற்பவர்கள் ஆகியோர்களும் கல்விகற்கும் வசதிக்காக தொலைநிலை கல்வியாக உருமாற்றம் பெற்றது இந்த தொலை கல்வியில் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி வகுப்புகளும் சொற்பொழிவுளும் நடத்தப்பட்டன ஆயினும் நேரடி கல்வி கற்பதை போன்ற அறிவியல் ,தொழில்நுட்ப கல்விகள் தவிர்த்த கலைப்பிரிவுமட்டும் கற்பிப்பதில் இது சிறந்து விளங்கியது தற்போதைய கணினியும் இணையமும் கொண்ட புதிய தொழில்நுட்ப வளரச்சியினால் மெய்நிகர் கல்வி என்ற புதிய பரிணாமம் கொண்டுள்ள இன்றைய நிலையில் வகுப்பறைக்கு நேரடியாக சென்று கற்பதை போன்ற சூழலை ஆசிரியரின் சொற்பொழிவுகளை காணொளி காட்சியின் வாயிலாக காணவும் Chatஎன்ற வசதியின்வாயிலாக சகமாணவர்களுடன் சந்தேகங்களை விவாதித்து நிவர்த்தி செய்துகொள்ளவும் Webminar என்ற வசதியின் வாயிலாக ஆசிரியரிடம் நேரடியாக கேள்வி கேட்டு சந்தேகத்தை தீர்வுசெய்து கொள்ளும் வசதியும் கொண்ட புதிய மேம்பட்டநிலையில் கலை ,அறிவியில், தொழில்நுட்பம் ஆகிய அனைத்து வகை கல்வியையும் பெறமுடியும் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது மிகமுக்கியமாக ஆங்கிலமொழியில் இவ்வாறான மெய்நிகர் கல்வி வசதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உலகில் எங்கிருந்தாலும் தாம் இருந்த இடத்திலிருந்த இருந்தவாறே தமிழ்மொழி.யில் கல்வி கற்கும் வசதியை தமிழக அரசின்தமிழ்இணைய பல்கலைகழகம் வழங்குகின்றது வகுப்பறையில் படவில்லைகாட்சியின் வாயிலாக ஆசிரியர்திரையில் கற்பிப்பதை போன்ற வசதி இந்த இணையவழிகல்வியிலும் மாணவர்கள்தங்களுடைய மடிக்கணியின் வாயிலாக பெறமுடியும் எனமேம்படுத்தப்பட்டுள்ளதுஅடுத்ததாக வகுப்பறை கல்வியில் ஆசிரியர் தன்னிடம் பயிலும் வகுப்பு மாணவர்களை குழுவாக பிரித்து அந்தந்த குழுவிற்குஎன தனித்தனியாக தான்கூறும் கேள்விக்கான பதிலைகாணும் பயிற்சியை கூட்டாகமுயற்சிசெய்திடுவார்கள் அவ்வாறே இந்த இணையவழி கல்வியிலும் மாணவர்களும் தங்களுக்குள் குழுவாக இணைந்து ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கான விடையை காண்பதற்கு Chat, Webminar ஆகிய வசதியின் வாயிலாக கூட்டாக முயற்சிசெய்து வெற்றிபெறமுடியும் அவ்வாறே குழுவிவாதம் செய்வதற்கும் இந்தChatஎன்ற வசதிபேருதவியாக இருக்கின்றது கல்விகற்க விழையும் எந்தவொருநபரும் தாம்விரும்பும் கலை ஆறிவியல் தொழில்நுட்பம் ஆகிய எந்தவொரு கல்வியையும் நேரடியாக கல்விநிலையத்திற்கு செல்லாமலேயே தாம் இருந்த இடத்திலிருந்தவாறு இந்த மெய்நிகர் கல்வி என்ற வசதிவாயிலாக கற்கமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: