இணையத்தின் வாயிலானவங்கிசேவையை பயன்படுத்திடுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள்

நாமெல்லோரும் தற்போது முகநூல்(facebook)என்றும்,காதோடுதான்(twitter) என்றும் கட்செவி(whatsup) என்றும் பல்வேறுசமூதாய இணையபக்கங்களை பயன்படுத்திவருகின்றோம்அதுமட்டுமல்லாமல் நமக்குத்தேவையான அனைத்தையும் இணையம் எனும் மின்வெளியில் தேடிபிடித்து பயன்படுத்தி கொள்கின்றோம் அவ்வாறே நம்முடைய வங்கிகணக்குகளையும் இணையத்தின் வாயிலாக கையாளும் வசதியை பயன்படுத்தி வருகின்றோம் இவ்வாறாக இணையத்தின் வாயிலாக நம்முடைய வங்கி கணக்குகளை கையாளும் வசதியை பயன்படுத்திகொள்ளும்போது பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது
1. மின்னஞ்சல்களுடன் நமக்கு வருகின்ற வங்கி கணக்குகள் தொடர்பான சந்தேக படக்கூடிய இணைப்புகளை கண்டிப்பாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடாதீர்கள் உதாரணமாக நம்முடைய வங்கிகணக்கின் கடவுச்சொற்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அதனால் இந்த இணைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் மிகவலுவான கடவச்சொற்களுடன் நம்முடைய வங்கிகணக்கினை கையாளலாம் என வேண்டி விரும்பி அழைக்கும் இணைப்பினை கண்டிப்பாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடவேண்டாம்
2 நம்முடைய கையடக்க சாதனத்தின் இணைய இணைப்பில்லாமல் பொதுமக்கள் பயன்படுத்திடும் WiFi வலைபின்னல் வாயிலான இணைய இணைப்பில் கண்டிப்பாக நம்முடைய இணைய வங்கி கணக்கினை கையாளவேண்டாம் இவ்வாறான நிலையில் நம்முடைய வங்கிகணக்கில் இருக்கும் தொகைகளை நமக்கு தெரியாமல் மற்றவர்கள் அபகரித்திடும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன
3 வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட வங்கிகளின் திறன்பேசிகளின் பயன்பாடுகளை மட்டும் இணைய வங்கிகணக்குகளை கையாள பயன்படுத்திடுக வங்கிகளால் அனுமதி்க்கப்படாத திறன்பேசி பயன்பாடுகளை கொண்டு நம்முடைய கையடக்கசாதனத்தின் வாயிலாக இணைய வங்கிகணக்குகளை கண்டிப்பாக கையாளவேண்டாம்
4 நம்முடைய இணைய வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை பாதுகாத்து வைத்துள்ள நம்முடைய திறன்பேசி(smartphone), கைபேசி(cellphone), ,கைக்கணி( tablet) ஆகிய கையடக்க சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்அல்லது அவைகளை தவறவி்ட்டுவிடாதீர்கள் அவ்வாறு காணாமல் போய்விட்டால் உடன் ஆண்ட்ராய்டுசாதனமேலாளரைகொண்டு அல்லது Find My Phone எனும் பயன்பாட்டினை கொண்டு நம்முடைய சாதனத்தினை தேடிபிடித்து அதிலுள்ள நம்முடைய முக்கியமான விவரங்களை முடக்கம் செய்திடுக மேலும் இணையவங்கி கணக்குகளின் கடவுச்சொற்களை குரலொலிவாயிலாகவோ உரைவாயிலாகவோ நம்முடைய கையடக்க சாதனத்தில் சேமித்து வைத்திடவேண்டாம்
5. நம்முடைய இணைய வங்கி கணக்கினை கையாளுவதற்கான கடவுச்சொற்களை எளிதாக யூகிக்கூடிய வகையில் அதாவது நம்முடைய பிறந்ததேதி நம்முடைய வளர்ப்பு மிருகங்கள் பறவைகள் குழந்தைகளின் பெயர்போன்றவைகளை பயன்படுத்திடவேண்டாம் இவைகளை எளிதாக யூகித்திடுவதற்கான நிரல்தொடர் ஏராளமானவகையில் உள்ளன அதற்குபதிலாக பெரிய எழுத்துகள் சிறிய எழுத்துகள் எண்கள் குறியீடுகள் ஆகியவைகளுடன் கூடிய மிகவலுவான கடவச்சொற்களை பயன்படுத்திடுக இதற்கான LastPass or 1Passwordஎனும் சேவையை பயன்படுத்தி கொள்க
6 நம்முடைய கையடக்க சாதனத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களை அவ்வப்போது மேம்படுத்தி நிகழ்நிலைபடுத்திகொள்க
7 நம்முடைய வங்கி கணக்கினை பயன்படுத்தி முடிந்தவுடன் நம்முடைய சாதனந்தானே என எப்போதும் அலட்சியமாக பணிமுடிந்தபின்னர் logoutசெய்திடாமல் அப்படியே விட்டுவிடாதீர்கள்
8. சமூக வலைதளங்களை பயன்படுத்திடும்போது நம்முடைய சொந்த தகவல்களுடன் வங்கிகணக்குதொடர்பான எந்தவொரு தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்
9நம்முடைய கையடக்க சாதனங்களை கையாளதுவங்கிடும்முன் நம்முடைய கைவிரல்ரேகை, ஆறு இலக்க கடவுச்சொற்களை ஆகியவர்றை கொண்டு அந்த சாதனங்களின் இயக்கம் துவங்கிடுமாறு செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: