விற்பணை முனைம அமைவு (Point of sale (POS) systems)ஒரு அறிமுகம்

ஆரம்பகாலத்தில் எளிய ரொக்க பட்டியலின் வாயிலாக பொருட்கள் விற்பணை செய்யப்பட்டன நாகரிக வளரச்சியினாலும் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளினாலும் தற்போது விற்பணை முனைம அமைவாக வளர்ந்து அதிலும் விற்பணைக்கான பணபறிமாற்றம், சரக்குகளை கையாளுதல் , சந்தையிடுதலுக்கான கருவிகள் எனபல்வேறு செயல்களும் உள்ளடங்கிய ஒரு மாபெரும் அமைவாகஇது உயர்ந்துள்ளது சாதாரண சில்லறை வியாபாரிகள் கூட செல்லிடத்து பேசி சாதனத்தின் வாயிலாக தன்னுடைய வியாபாரநடவடிக்கைகளுக்கான ரொக்கஓட்ட அறிக்கை, பணியாளர்களின் செலவு அறிக்கை போன்ற அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் இந்த விற்பணை முனைம அமைவு (Point of sale (POS) systems) வாயிலாக பெற்று உடனுக்குடன் மிகச்சரியாக முடிவெடுக்கமுடியும் இந்த விற்பணை முனைம அமைவே தற்போதைய வியாபார உலகில் மிகவும் அத்தியாவசிய இரத்தஓட்டமாக அமைகின்றது அதாவது தற்போதைய சூழலில் மிகவும் கவணமாக முடிவெடுத்து செயல்படவேண்டிய நிலையில் இது எந்தவொரு சில்லறை வியாபாரிகளுக்கும் பேருதவியாக உள்ளது இதனை செயல்படுத்திடுவதற்காக ஏராளமான வாய்ப்புகளுடன் பல்வேறு தனியுடமை பயன்பாட்டு மென்பொருட்கள் உள்ளன அவைகளுக்கு இணையாக கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்களும் உள்ளன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து செயல்படுத்திகொள்வது பயனுள்ளதாக அமையும் என பரிந்துரைக்கப்படுகின்றது இவ்வாறான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளை இந்த விற்பணை முனைம அமைவிற்காக ஏன் பயன்படுத்திடவேண்டும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும் நிற்க அதற்கான காரணங்கள் பின்வருமாறு
1 நாம் விரும்பியவாறான நெகிழ்வுதன்மையுடையது அதாவது நெகிழ்வு-தன்மையுடன் இது இருப்பதால் சாதாரண சில்லறைவியாபாரி இந்த விற்பணை முனைம அமைவை பயன்படுத்தி தன்னுடைய வியாபரா நடவடிக்கைகளில் செயல்பட்டுவருகின்றபோது அவருடைய வியாபாரமானது மேலும்மேலும் வளர்ச்சியடைவதற்கேற்ப தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் இதன்வாயிலாக ஒருங்கிணைத்து மேம்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்
2 மிகவிரைவான மேம்படுத்திடும் வசதி ஒரு சில்லறைவியாபாரி தன்னுடைய வியாபார நடவடிக்கை-கள் அனைத்தையும் இதன்கீழ் கொண்டுவருவதற்காக உடனடியாக இதனை மேம்படுத்தி கொள்ளமுடியும்
3 செலவே இல்லாதது இந்த விற்பணை முனைம அமைவை செயல்படுத்திடுவதற்காக எந்தவொரு சில்லறை வியாபாரியும் செலவேதும் செய்யத்தேவையில்லை அதாவது கட்டணமில்லாமல் இந்த பயன்பாட்டுமென்பொருள் கிடைக்கின்றது
4 மிகவும் பாதுகாப்பானது இந்த கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடும்போது உருவாகும் எந்தவொரு பாதுகாப்பு சிக்கல்களையும் தீர்வுசெய்வதற்காக ஏராளமான தன்னார்வாளர்கள் அல்லும்பகலும் அயராது உதவதயாராக இருக்கின்றனர்
இவ்வாறான விற்பணை முனைம அமைவிற்காக Chromis ,Drupal POS , Floreant , Odoo ,Open Source Point of Sale , Unicenta ஆகிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் உள்ளன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை மட்டும் அதற்கான இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: