எச்சரிக்கை சிஐஏ எனும் அமெரிக்க உளவுநிறுவனமானது நம்முடைய சொந்த தகவல்கள் அனைத்தையும் அபகரித்து அலசி ஆராய்கின்றது

நம்முடைய ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்(ஸ்மார்ட் போன்) ,ஐபோன்கள் ஆகியவற்றில் செயல்படும் இயக்கமுறைமைகளில் இயங்கும் திறன்மிக்க மால்வேர் எனும் நச்சுநிரல்களை அனுப்பி அவைகளுடன் சேர்ந்து அமர்ந்துகொண்டு நம்முடைய அனைத்து நடவடிக்கைகளையும் தகவல்களையும் தரவுகளாக தமக்கு அனுப்பிவைத்திடுமாறு சிஐஏ எனும் அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவானது செயற்படுத்தி வருகின்றது அதாவது நாம் நம்முடைய தகவல்களை Signal, Telegram, Confide, Cloakman ஆகியவற்றின் வாயிலாக மறைக்குறியீடாக உருமாற்றி அனுப்பிவப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாலும் இவைகளோடு மால்வேர் எனும் நச்சுநிரலானது சேர்ந்து அவ்வாறான தரவுகளை அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது இவ்வாறான மால்வேர் எனும் நச்சுநிரலானது திறன்பேசியில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை மட்டுமின்றி மைக்ரோசாப்ட், மேக், லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளின் அனைத்து பதிப்புகளிலும் நமக்கு தெரியாமல் வந்தமர்ந்து கொண்டு நம்முடைய அத்தனை நடவடிக்கைகளையும் தரவுகளாக அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது அதுமட்டுமா நாம் வீடுகளில் நம்முடைய குரலொலி வாயிலாக இயங்கசெய்திடும் ஸ்மார்ட் டிவிகளிலும் வந்தமர்ந்து கொண்டு நம்முடைய தொலைகாட்சி பெட்டியின் நிகழ்ச்சிகளை பார்த்தபின் நாம் நம்முடைய தொலைகாட்சி பெட்டியை இயங்காமல் நிறுத்தம் செய்தபிறகும் நம்முடைய வீடுகளில் வழக்கமாக நாம் பயன்படுத்திடும் நம்முடைய அனைத்து உரையாடல்களையும் அவற்றின் அத்தனை விவரங்களையும் இந்த மால்வேர் எனும் நச்சுநிரலானது தரவுகளாக அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது இதுமட்டுமா தானியங்கியாக செயல்படும் சமீபத்திய நம்முடைய மகிழ்வுந்துகளில் கூட இந்த மால்வேர்எனும் நச்சுநிரல் வந்தமர்ந்து கொண்டு நாம் செல்லும் இடம் அனைத்தையும் கண்கானிப்பதற்கான தரவுகளை அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது
இவ்வாறு சிஐஏ எனும் அமெரிக்காவின் மின்வெளி உளவாளிகள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற்ற வகையில் நம்மை கண்காணித்தபடியே நிரைந்துள்ளன என்ற தகவலை மனதில் கொண்டு செயல்படுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: