மின்பகிர்மான வலைபின்னலை ஆய்வுசெய்து செயற்படுத்தஉதவிடும் GridLAB-Dஎனும் கட்டற்ற பயன்பாட்டுமென்பொருள்

மின்சாரவாரியம் போன்றவை வைத்துள்ள மின்பகிர்மான வலைபின்னலில் மில்லியன் கணக்கான சாதனங்களும் முனைமங்களும் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளில் ஏற்படும் மின்ஏற்றதாழ்வுகள் திடீரென இயங்காமல் நின்றுபோதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் அவைகளை ஒருங்கிணைத்து மனிதமுயற்சியால் ஆய்வு செய்திடும்போது உயிர் ஆபத்து போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளன அதனை தவிர்த்திடுவதற்காக எளிய கணித சமன்பாடுகளின் வாயிலாக மின்பகிர்மான வலைபின்னலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்வுசெய்திட பல்வேறு தனியுடமை பயன்பாட்டு மென்பொருட்கள் உள்ளன அவைகளுக்கு ஈடாக GridLAB-Dஎனும் கட்டற்ற பயன்பாட்டுமென்பொருளும் தற்போது கிடைக்கின்றது இந்த GridLAB-Dஎனும் கட்டற்ற பயன்பாட்டுமென்பொருளின் ஆய்வுவழிமுறையின் நன்மைகள் பின்வருமாறு:
1) இது மிகவும் துல்லியமாக அசாதாரண சூழல்களையும் மிகஎளிதாக கையாளுகிறது;
2) இதுபல்வேறுபட்ட கால கட்டங்களிலும் ஒருசில விநாடிகளிலிருந்து பல ஆண்டுகள் வரை கையாளுகிறது;
3) புதிய தொகுதிகள் , மூன்றாம் தரப்பு அமைப்புகள் ஆகியவற்றை இதன்வாயிலாக ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது.
4.இது ஒவ்வொரு மின்விநியோக முறையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக ஆய்வுசெய்கின்றது
5இதுமின் விநியோகத்திற்கான தொழில்துறையிலும் அரசாங்கத்திலும் திட்டமிடுபவர்கள் பயனுள்ள வகையில் திறமையான திட்டங்கள் வடிவமைக்க உதவிடும் ஒரு அத்தியாவசிய கருவியாக உள்ளது
6 மின் விநியோகத்தின் சில்லரை விற்பனையில் தொடர்பு கருவிகள் உருவாக்கவும் விகித அமைப்புகளை பரிசோதிக்கவும், நுகர்வோர் எதிர்வினை களை ஆராயவும் பிற தொழில்நுட்பங்கள் மற்றும் மொத்த விலை சந்தையில் தொடர்பு மற்றும் சார்புகளை சரிபார்க்கவும் உதவுகின்றது
7.மும்முனை வாயிலாக செல்லும் மின்சார ஓட்டத்தின் அளவை ஆய்வுசெய்திடவும் முனைமத்தில் பயன்படுத்தபடும் ஆயிரக்கணக்கான சாதனங்களினால் ஏற்படும் மின்சார கூடுதல் சுமைகளையும் ஏற்றஇறக்கங்களையும் ஆய்வுசெய்திடவும் மின்விநியோகத்தை தானியங்கியாக கட்டுபடுத்தி வடிவமைத்து மதிப்பிடவும் மின்விநியோக சுமையை நிறுவுகை செய்திடவும் மின்விநியோகத்தின் உற்பத்தி தேக்குதல் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை மிகச்சரியாக கட்டுபடுத்திடவும் இந்த GridLAB-Dஎனும் கட்டற்ற பயன்பாட்டுமென்பொருள் பேருதவியாக உள்ளது
8. இது மின்னழுத்த கட்டுப்பாட்டு அமைப்பாகவும் சூரிய ஒளியிலிருந்த மின்னாற்றலை தயார்செய்திடும் அமைவிலும் மின்னாற்றலை தேக்கி பயன்படுத்திடும் மின்கலன்களின் கட்டமைவு அமைவிலும் இந்த GridLAB-Dஎனும் கட்டற்ற பயன்பாட்டுமென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது
இன்றைய சூழலில் மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கையே இல்லையெனும் நிலையில் அவ்வாறான மின்சாரத்தினை விநியோகிக்கும் வலைபின்னலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளையும் போலியான மாதிரி செயல்பாட்டின் வாயிலாக ஆய்வுசெய்து தீர்வுசெய்வதற்காக இந்த GridLAB-Dஎனும் கட்டற்ற கருவிதயாராக இருக்கின்றது இது BSDஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு http://www.gridlabd.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: