கணினியில் பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்கான நிரல்தொடர் எழுதும் புதியவர்களுக்கு உதவிடும் CURL எனும் எளிய கட்டளைவரி கருவி

தற்போது வளாக பிணையம் ,இணையம் ஆகிய கணினிகளாலும் கையடக்க கருவிகளாலும் இணைக்கப்பட்ட பல்வேறு வலைபின்னல் வாயிலாக மின்வெளியில் தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது என்பதே மிகப்பெரிய சிக்கலான தலைவலிபிடித்த செயலாகும் அதிலும் தற்போது நாமனைவரும் GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகப்பு பயன்பாட்டு மென்பொருள் கருவிகளை நம்முடைய தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பிடவும் பெறுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம் இவ்வாறான GUI கருவிகள் இல்லாமல் தனியான பணியகத்தில் நாம் பணிபுரிந்து வரும்போது கட்டளை வரிகளின் வாயிலாக மட்டும் தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பிடவும் பெறுவதற்கும் முடியும் அதற்காக CURL எனும் எளிய கட்டளைவரி கருவியானது அருமையான தோழனாக விளங்குகின்றது இந்த CURL எனும் எளிய கட்டளைவரி கருவியை Unix/Linux, Network, Device Drivers, Perl scripts போன்ற பல்வேறு பயன்பாட்டு நிரல்தொடர்களில் உள்பொதிந்து தரவுகளை கையாளும் தீர்வாக அமையுமாறு Haxxஎனும் கட்டற்ற பயன்பாட்டு கருவிகளை உருவாக்கிடும் குழுவானது உருவாக்கி வழங்கியுள்ளது இந்த CURL எனும் எளிய கட்டளைவரி கருவியானது DICT, FILE, FTP, FTPS, GOPHER, HTTP, HTTPS, IMAP, IMAPS, LDAP, LDAPS, POP3, POP3S, RTMP, RTSP, SCP, SFTP, SMTP, SMTPS, TELNET and TFTP ஆகிய மரபொழுங்கினை ஆதரிக்கின்றது இதனை நம்முடைய shell scriptsஎனும் உறைபொதி உரைநிரலில் எளிதாக பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த கட்டளைவரி கருவியை கொண்டு நாம் இணையத்தில் இருந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும்போது தற்காலிகமாக அந்த செயலை நிறுத்தம் செய்திடவும் பின்னர் மீண்டும் பதிவிறக்கம செய்திடும் பணியை தொடரவும் பயன்படுத்தி கொள்ளலாம் இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் அதாவது ஏறத்தாழ 40 இற்கும் மேற்பட்ட இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது $curl -u username:password URL , $curl -k https://www.abc.com , $ curl http://www.centos.org>file.txt , $ curl http://www.centos.org -o file.txt போன்ற 120 இற்கு மேற்பட்ட கட்டளைவரிகளின் வாய்ப்புகளை நமக்கு வழங்க தயாராக இருக்கின்றது இது cookies, forms SSL ஆகிய வற்றை ஆதரிக்கின்றது இந்த curl எனும் கருவியும் இதனுடைய libcurlஎனும் நூலகமும் கட்டற்ற மென்பொருளாக இருப்பதால் நாம் புதியதாக உருவாக்கிடும் நம்முடைய எந்தவொரு நிரல்தொடர்களிலும் தேவைக்கேற்ப அவ்வப்போது பயன்படுத்தி கொள்ளலாம் இதனை கொண்டு Progress bar, rate limiting, download time ஆகிய விவரங்களை பதிவிறக்க செயலின் போது எளிதாக அறிந்து கொள்ளலாம் இது ipv6ஐ ஆதரிக்கின்றது இது $curl -o http://ftp.open.com/pub/act.html -o http://ftp.gnu.com/pub/bxy.html -o http://ftp.lkj.com/pub/c.html எனும் ஒரேயொரு ஒற்றையான கட்டளைவரியை கொண்டு ஒன்றிற்குமேற்பட்ட இணைய பக்கங்களிலிருந்து கோப்புகளை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்
மேலும் விவரங்களை அறிந்து இந்த CURL எனும் எளிய கட்டளைவரி கருவியை நம்முடைய நிரல்தொடர்களில் தேவைக்கேற்ப அவ்வப்போதுபயன்படுத்தி கொள்வதற்காக http://curl.haxx.se/docs/features.htmlஎனும் இணையமுகவரிக்கு செல்க

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. nagendra bharathi
    மே 16, 2017 @ 11:41:19

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: