புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு- பயிற்சி கையேடுபகுதி-7 செயல்பாடுகள்

ஒரு செயல்பாடு என்பது ஒரு பயனாளரின் இடைமுகத்துடனான ஒரு ஒற்றையான திரைக்-காட்சியின் செயலாகும் உதாரணமாக ஒருமின்னஞ்சல் பயன்பாடானது ஒரு செயலாகும் இது நமக்கு வந்த புதிய மின்னஞ்சல்களை பட்டியலாக திரையில் காண்பிக்கின்றது .நாம் உருவாக்கும் புதிய மின்னஞ்சல் அடுத்த செயலாகும் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியில் வந்த மின்னஞ்சல்களில் ஒன்றினை திறந்து படித்தல் மற்றொரு செயலாகும் ஒரு பயன்பாடு ஒன்றிற்கு மேற்பட்ட செயலில் இருந்தால் அவைகளுள் ஒரு செயல்மட்டும் குறிப்பிட்ட பயன்பாடு செயல்படத்-துவங்கியவுடன் செயலில் இருக்கவேண்டும் என குறித்து வைத்துகொள்ளும்
நாம் சி, சி++ அல்லது ஜாவாஆகிய நிரல்தொடர்கணினிமொழிகளுடன் பணிபுரிந்து கொண்டிருந்தால் நம்முடைய நிரல்தொடர்குறிமுறைவரிகள் அனைத்தும் main() எனும் செயலிலிருந்து மட்டுமே துவங்குவதை கண்டிப்பாக காணலாம் அவ்வாறே ஆண்ட்ராய்டு அமைவானது அதனுடைய நிரல்தொடர் குறிமுறைவரிகளை Activityஎன்பதுடன் துவங்கி Create() callbackஎனும் ஒரு வழிமுறையை அழைப்பதுடன் செயலினை துவங்குவதை காணலாம் இந்தcallbackஎனும் வழிமுறைகளானது ஒரு வரிசைமுறையாக இருப்பதை காணலாம் இந்த வரிசைமுறையானது ஒரு செயலில் துவங்கி ஒரு வரிசைமுறையான callbackஎனும் வழிமுறைகளை பின்பற்றிசென்றுமற்றொரு செயலில் முடிவதையும் அடுத்து ஒரு செயலில் துவங்கி அடுத்து ஒரு வரிசைமுறையான callbackஎனும் வழிமுறைகளில் முடிவதையும் பின்வரும் வாழ்க்கை சுழற்சிமுறை வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது

1
இந்த செயல் இனமானது பின்வரும் நிகழ்வுகளான callbacksஎனும் வழிமுறையில் வரையறுக்கப் படுகின்றது நாம் இந்த அனைத்து callbacks வழிமுறைகளையும் செயல்படுத்திடத் தேவையில்லை ஆயினும் பயனாளர் எதி்ர்பார்த்த வழியில் நம்முடைய பயன்பாடு பின்பற்றுவதை அவை ஒவ்வொன்றும் செயல்படுத்திடும்போதும் நன்கு புரி்ந்து கொண்டு உறுதிபடுத்திகொள்க

1.1
எடுத்துகாட்டு இந்த உதாரணமானது எளிய படிமுறைகளின் மூலம் ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் செயல்பாடுகளுடைய வாழ்க்கை சுழற்சிமுறையை காட்டுவதற்கு நம்மை கொண்டு செல்லும். நாம்உருவாக்கிய “அனைவருக்கும் வணக்கம்” எனும் பயிற்சி வழிகாட்டி பகுதியில் உள்ள ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாற்றியமைப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக:

1.2
rc / com.example.அனைவருக்கும் வணக்கம் / MainActivity.java எனும் மாறுதல் செய்த முக்கிய செயல்பாட்டின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு உள்ளன. இந்தக் கோப்பானது ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகளை உள்ளடக்கமாக கொண்டதாகும். இந்த Log.d() எனும் வழிமுறையானது Log எனும் செய்திகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது:

package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.util.Log;
public class MainActivity extends Activity {
String msg = “Android : “;
/** Called when the activity is first created. */
@Override
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
Log.d(msg, “The onCreate() event”);
}
/** Called when the activity is about to become visible. */
@Override
protected void onStart() {
super.onStart();
Log.d(msg, “The onStart() event”);
}
/** Called when the activity has become visible. */
@Override
protected void onResume() {
super.onResume();
Log.d(msg, “The onResume() event”);
}
/** Called when another activity is taking focus. */
@Override
protected void onPause() {
super.onPause();
Log.d(msg, “The onPause() event”);
}
/** Called when the activity is no longer visible. */
@Override
protected void onStop() {
super.onStop();
Log.d(msg, “The onStop() event”);
}
/** Called just before the activity is destroyed. */
@Override
public void onDestroy() {
super.onDestroy();
Log.d(msg, “The onDestroy() event”);
}
}
இந்த செயல்திட்டத்தின் res/layoutஎனும் கோப்பகத்தில் தயாராக உள்ள XML எனும் கோப்பினை பயன்படுத்தி அனைத்து UI எனும் பயனாளர் இடைமுகப்பின் ஆக்கக்கூறுகளை ஒரு செயல்பாட்டு இனமானது மேலேற்றம் செய்கின்றது . res/layout/activity_main.xmlஎனும் கோப்பிலிருந்து இந்த UI இன் ஆக்கக்கூறுகளை பின்வரும் அறிக்கையானது மேலேற்றம் செய்திடுகின்றது
setContentView(R.layout.activity_main);
எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு பயன்பாடானது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செயல்பாடுகளை கொண்டிருக்கும்.நம்முடைய பயன்பாடுகளுக்காக நாம் வரையறுத்த ஒவ்வொரு செயல்பாட்டினையும் நம்முடைய AndroidManifest.xmlஎனும் கோப்பில் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் அதனை தொடர்ந்து நம்முடைய பயன்பாடுகளுக்காக இந்த முக்கிய செயல்பாட்டினை பின்வருமாறு உள்ள இந்த MAINஎனும் செயல்பாடும் LAUNCHERஎனும் வகையும் சேர்ந்தவொரு எனும் குறிச்சொல்லுடன் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்

நம்முடைய எந்தவொரு செயல்பாட்டிலும் இந்த MAINஎனும் செயல்பாட்டினை அல்லது LAUNCHER எனும் வகையை அறிவிக்கவில்லை என்றால், இந்த Home screen’sஎனும் திரையின் பயன்பாடுகளின் பட்டியலில் நம்முடைய பயன்பாட்டின் உருவப்பொத்தான் தோன்றிடாது என்ற செய்தியை மனதில் கொள்க
நம்முடைய சற்றுமுன்பு மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்” எனும் பயன்பாட்டினை இயக்குவதற்கு முயற்சி செய்வோம். சூழ்நிலை அமைவை செய்திடும்போது நம்முடைய AVD ஐ உருவாக்கிவிட்டோம் என கருதி(எடுத்து)கொள்க . , Eclipse -இலிருந்து பயன்பாட்டை இயக்குவதற்கு நம்முடைய செயல் திட்டத்தின் செயல்பாட்டு கோப்புகளில் ஒன்றினை திறந்துகொள்க அதனை தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன்Eclipse ஆனது நம்முடைய AVD இல் இந்த பயன்பாட்டினை நிறுவுகை செய்து நம்முடைய அமைப்பிலும் பயன்பாட்டிலும் அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் செயல்படத்துவங்கிடும், இது முன்மாதிரி சாளரத்தில் காண்பிக்கப்படும் அதனை தொடர்ந்து Eclipse IDE: இன் LogCatஎனும் சாளரத்தில் பின்வரும் Log எனும் செய்தியை காணலாம்
07-19 15:00:43.405: D/Android :(866): The onCreate() event
07-19 15:00:43.405: D/Android :(866): The onStart() event
07-19 15:00:43.415: D/Android :(866): The onResume() event

படம்-2
ஆண்ட்ராய்டு முன்மாதிரியின் மீது உள்ள சிவப்பு உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்து இதனை செயற்படுத்திட முயற்சிசெய்திடுவோம் அதனை தொடர்ந்து Eclipse IDE: இன் LogCatஎனும் சாளரத்தில் பின்வரும் நிகழ்வுகளின் செய்திகள் உருவாகும்
07-19 15:01:10.995: D/Android :(866): The onPause() event
07-19 15:01:12.705: D/Android :(866): The onStop() event
மீண்டும் ஆண்ட்ராய்டு முன்மாதிரியின் மீது உள்ள Menuஎனும் உருவப்- பொத்தானை சொடுக்குதல் செய்து இதனை செயற்படுத்திட முயற்சி செய்திடுவோம் அதனை தொடர்ந்து Eclipse IDE: இன் LogCatஎனும் சாளரத்தில் பின்வரும் நிகழ்வுகளின் செய்திகள் உருவாகும்
07-19 15:01:13.995: D/Android :(866): The onStart() event
07-19 15:01:14.705: D/Android :(866): The onResume() event
அடுத்து, ஆண்ட்ராய்டு முன்மாதிரியின்மீது உள்ள Backஎனும்உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்து இதனை செயற்படுத்திட முயற்சிசெய்திடுவோம் தொடர்ந்து Eclipse IDE: இன் LogCatஎனும் சாளரத்தில் பின்வரும் நிகழ்வுகளின் செய்திகள் உருவாகும் அதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான Acitivity என்பதன் வாழ்க்கைசுழற்சிமுறை முடிந்துவிடும்
07-19 15:33:15.687: D/Android :(992): The onPause() event
07-19 15:33:15.525: D/Android :(992): The onStop() event
07-19 15:33:15.525: D/Android :(992): The onDestroy() event

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: