லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-10-வரைகலை பொருட்களை வடிவமைத்தல்

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் கைவசம் தயாராக உள்ள வரைகலை கருவிகளை கொண்டு இதனுடைய படவில்லையிலுள்ள ஒவ்வொரு வரைகலை பொருளும் அதனுடைய அளவு, சுழற்சி, நிலை ஆகியஅமைவை தவிர கோடு, உரை, காலி இடத்தை நிரப்புதல் ஆகியசெயல்களை வரையறுக்கும் ஏராளமான பண்புக்கூறுகளால் தீர்மாணிக்கபடுகின்றது இந்த பண்புக்கூறுகளே ஒரு வரைகலையின் பாவணையையும் வழங்குகின்றது இந்த தொடரில் நாமே நம்முடைய கைகளால் முயன்று எவ்வாறு இந்த வரைகலை பாவணைகளை உருவாக்குவது ,செயற்படுத்துவது,மாறுதல்கள் செய்வது தேவையற்றதை நீக்கம் செய்வது என காணலாம்
கோடுகளை வடிவமைத்தல்
படவில்லையில் உள்ள ஒரு வரைகலைப் பொருளின் சுற்றெல்லையின் அமைப்பையேஇந்த கோடுகள் தீர்மாணிக்கின்றன இந்த கோடுகளானது கண்ணிற்கு புலப்படும் கோடுகள், விட்டுவிட்டு செல்லும் கோடுகள், கண்ணிற்கு புலப்படாத கோடுகள் ஆகிய பலவகைகளில் உள்ளன மேலும் இந்த கோடுகளின் அகலத்தையும் வண்ணத்தையும் வடிவமைப்பு செய்திடலாம் இந்த கோடுகளை வடிவமைப்பு செய்வதற்காக Line and Filling எனும் கருவிகளின் பட்டை பேருதவியாய் உள்ளன
இந்த Line and Filling எனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்றிடவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Toolbars => Line and Filling =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
அதனை தொடர்ந்து வடிவமைப்பு செய்திடவிரும்பும் கோட்டினை தெரிவுசெய்துகொண்டு Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள கருவிகளுள் நாம் விரும்பும் கருவியை மட்டும் தெரிவு செய்து வடிவமைப்பு செய்துகொள்ளலாம் மேலும் நாம் வடிவமைப்பு செய்திட விரும்பும் கோட்டினை மட்டும் தெரிவு செய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format => Line=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது வடிவமைப்பு செய்திட விரும்பும் கோட்டின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Lineஎனும் கட்டளையை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள எழுதிடும் பேனாமுள் போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

10.1
உடன் Lineஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இந்த உரையாடல் பெட்டியில் Line, Shadow, Line Styles, Arrow Stylesஆகிய நான்கு தாவிப்பொத்தான்களின் திரைகள்உள்ளன இயல்புநிலையில் Lineஎனும் தாவிப்பொத்தானின் திரையானது தோன்றி நாம் பயன்படுத்துவதற்காக தயாராக இருக்கும் இந்த பக்கத்தில் Line properties, Arrow styles, Width, Corner and cap styles ஆகிய பகுதிகளும் இதனுடைய கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த வாய்ப்பிற்கேற்ற உருவம் எவ்வாறு திரையில் தோன்றும் என முன்காட்சியாக காண்பிக்கின்ற previewஎனும்பகுதியும் உள்ளன
இந்தLineஎனும் உரையாடல் பெட்டியில் Shadow எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Shadow எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் நிழலுருவம் எவ்வாறு இருக்கவேண்டும் என தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன இந்த shadow எனும் தாவிப்பொத்தானின் திரையை செயற்படுத்துவதற்கு பதிலாக நேரடியாக Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள Shadowஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்து கொள்ளமுடியும் ஆனால் இந்த வாய்ப்பில் ஏற்கனவே இயல்புநிலையில் உள்ள நிழலுருக்களை மட்டுமே கொண்டுவரமுடியும் என்றசெய்தியை மனதில்கொள்க
இதனை தொடர்ந்து இதே Lineஎனும் உரையாடல் பெட்டியில் Line Stylesஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Line Styles எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் பாவணை எவ்வாறு அமையவேண்டும் என இதிலுள்ள properties எனும் பகுதியின் கீழுள்ள Line Styles ,Type, Number, Length, Spacing ஆகிய பல்வேறு வாய்ப்புகளின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையானவாறு அமைத்தபின்னர்தேவையெனில் Fit to line widthஎனும் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்துகொண்டு ADDஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
ஏற்கனவே உள்ளவையெனில் இதே Lineஎனும் உரையாடல் பெட்டியில் Arrow Stylesஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Arrow Styles எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் அம்புக்குறிகளின் பாவணை எவ்வாறு அமையவேண்டும் என இதிலுள்ள organization arrow styles எனும் பகுதியின் கீழுள்ள Title என்பதன் தலைப்பின் பெயரை உள்ளீடு செய்து கொண்டு Arrow styleஎனும் வாய்ப்பின் கீழிறிங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு இதனுடைய கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த வாய்ப்பிற்கேற்ற உருவம் எவ்வாறு திரையில் தோன்றும் என முன்காட்சியாக காண்பிக்கின்ற previewஎனும்பகுதியில் பார்வையிட்டபின்னர்ADDஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக ஏற்கனவே உள்ளவையெனில் Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
சரியாக இருக்கின்றது எனில் okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குகஇவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட அம்புக்குறிபாவணைகள் மற்ற படவில்லைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Line Stylesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த அம்புக்குறி கோடுகளின் பாவணைகளை திரையில்கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Line Stylesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல்பெட்டியில் தேவையான அம்புக்குறி பாவணையை தெரிவுசெய்துகொண்டு Open எனும் பொத்தானை சொடுக்குக

10.2

திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையை அல்லது இதற்கான உரையால் பெட்டியை அல்லது சூழ்நிலை பட்டியை பயன்படுத்திடுவதற்கு பதிலாக படவில்லையின் வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டபின்னர் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ் திரையின் பக்கப்பட்டையின் (Sidebar) Lineஎனும் பகுயின் Width, Color, Transparency, Style, Arrow, Corner style and Cap styleஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி சரிசெய்து அமைத்து கொள்ளலாம்
காலிஇடத்தை நிரப்புதல்(area fill) எனும் வடிவமைப்பு
ஒரு படவில்லையில் நம்மால் வரையப்படும் rectangle, circle, star, pentagonபோன்ற வரைகலை பொருட்களின் உட்பகுதியை ஒரேமாதிரியான color, gradient, hatching pattern, bitmapஆகியன கொண்டு நிரப்புதல்கள் செய்து அவைகளுக்கு நல்ல தோற்றத்தை வழங்குவதே காலிஇடத்தை நிரப்புதல் (area fill) எனும் வடிவமைப்பு வாய்ப்பாகும் இந்த வாய்ப்பினை கொண்டு வரைகலை பொருளிற்கு பின்புறம் இருக்கும் பொருளை பகுதியாக அல்லதுமுழுமையாக ஊுடுருவி காணுமாறு(transparent) அல்லது நிழலுருவுடன் தோன்றிடுமாறும் அமைத்திட முடியும்
இதனை மிகவிரைவாக செயல்படுத்திடுவதற்காக தேவையான பொருளின் காலி இடத்தினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு திரையின்மேலேLine and Fillingஎனும் கருவிகளின் பட்டையின் இடதுபுறத்திலுள்ள காலி இடத்தினை நிரப்பிடும் பல்வேறு வாய்ப்புகளுடைய உருவப்பொத்தான்களின் கீழிறங்கு பட்டியல்களை பயன்படுத்தி கொள்க அவ்வாறே இதே கருவிகளின் பட்டையின் வலதுபுறத்திலுள்ள வண்ணங்கள் இதரவாய்ப்புகளுக்கான உருவப்-பொத்தான்களின் கீழிறங்கு பட்டியல்களை பயன்படுத்தி கொள்க
இதற்குபதிலாக தேவையான பொருளின் காலி இடத்தினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Area =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையின் Area எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான பொருளின் காலி இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Area எனும் தாவிபொத்தானின் திரையில் Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு வண்ணங்களுக்கான வாய்ப்புகளை கொண்ட color என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான வண்ணத்தைதெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

10.3
இதே காலிஇடத்தில் Gradientஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Gradientஇற்கான வாய்ப்புகளை கொண்ட Gradient என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும்இதன் அருகில் incrementsஎன்பதன் கீழுள்ள Automaticஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இதே காலிஇடத்தில் Hatchingஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Hatchingஇற்கான வாய்ப்புகளை கொண்ட Hatching என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும்இதன் அருகில் colorsஎன்பதன் கீழள்ள Background colorஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க பின்னர் செயலில் இருக்கும் இதனுடைய கிழிறங்கு பட்டியலில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இதே காலிஇடத்தில் Bitmapsஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Bitmapsஇக்கான வாய்ப்புகளை கொண்ட Bitmaps என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதைமட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும் இதன் வலதுபுறத்தில் Size,என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் அவ்வாறேPosition என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் அவ்வாறே Offset என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

10.4
திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையை அல்லது இதற்கான உரையால் பெட்டியை அல்லது சூழ்நிலை பட்டியை பயன்படுத்திடுவதற்கு பதிலாக படவில்லையின் வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டபின்னர் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ் திரையின் பக்கப்பட்டையின் (Sidebar) areaஎனும் பகுயின் Fill என்பதன் கீழுள்ள Color, Transparency போன்ற மேலே கூறியவாறான பல்வேறு வாய்ப்புகளில் நமக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்தி சரிசெய்து அமைத்து கொள்ளலாம் இதே பக்கப்பட்டையைகொண்டு Area எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிட செய்வதற்காக இதனுடைய மேலே வலதுபுறமூலையிலுள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் வழக்கம் போன்று செயல்படுத்தி கொள்க

10.5
புதிய area fills என்பதை உருவாக்கி அதில் வாடிக்கையாளர் விரும்பியவாறுகூடமாறுதல்கள் செய்திடமுடியும் இதற்காக Area எனும் உரையாடல் பெட்டியின் colors எனும் தாவிப்பொத்தானின் திரையில் properties என்பதன் கீழுள்ள Name என்பதில் நாம் உருவாக்கப்போகும் வண்ணத்திற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்துகொள்க பின்னர் RGB என சுருக்கமாகஅழைக்கும் Red (R), Green (G), Blue (B)ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்கள் அல்லது CMYKஎன சுருக்கமாகஅழைக்கும் Cyan (C), Magenta (M), Yellow (Y), Black (K)ஆகிய நான்கு அடிப்படை வண்ணங்கள் ஆகிய இரு வண்ணக்-கலவைகளின் இந்த கலவையானது 0 முதல் 255 வரையுள்ள அளவுகளிலும் 0%முதல்100% வரை சதவிகிதங்களிலும் தெரிவுசெய்து கொண்டு Addஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த வண்ணக்கலவையானது புதியவண்ணமாக கீழிறங்கு பட்டியலில் சென்றமர்ந்துவிடும் அவ்வாறே ஏற்கனவே கீழறங்கு பட்டியலில் உள்ள வண்ணக்கலவையை தெரிவுசெய்து இதில்கலந்துள்ள வண்ணங்களின் அளவுகளையும் சதவிகிதங்களையும் தேவையானவாறு மாற்றி யமைத்துகொண்டு Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மாற்றி யமைத்து கொள்ளலாம்
இதுமட்டுமல்லாது Color Pickerஎனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிட செய்து இந்த RGB அல்லது CMYK அல்லது HSB (Hue,Saturation, Brightness) ஆகியவற்றின் மதிப்பை மாற்றியமைத்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

Colorஎனும் உரையாடல் பெட்டியில் Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Area எனும் உரையாடல் பெட்டியில் okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட வண்ணக்கலவைகள் மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Color Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த வண்ணக்-கலவைகளை திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Color Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான வண்ணக்கலைவையை தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக
இதற்கு பதிலாக திரையின் மேலே Tools => Options => LibreOffice => Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து வண்ணக்கலவைகளை சேர்த்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: