எதையும் சுயமாக கற்றுக்கொள்ள வழிகாட்டிஉதவும்WalkMe எனும் இணையதளம்

புதியவர்கள் தாம் விரும்புவதை படிப்படியாக சுயமாக தானே முயன்றுகற்றுக்கொள்வதற்கு https://www.walkme.com/ எனும் இணையதளம் பேருதவியாக இருக்கின்றது புதியவர்கள் இந்த இணைய பக்கத்திற்கு வந்தவுடன் இதன்முகப்புதிரையில் உள்ள Let’s Go எனும் பொத்தானை சொடுக்குதல் செய்தால் போதும் உடன் நம்மை இந்த தளத்தில் ஒருசுற்றுலா போன்று அழைத்து சென்று இந்த தளத்தில் உள்ள பயன்பாட்டு மென்பொருட்களை எவ்வாறு நாம் பயன்படுத்தி கொள்ளமுடியும் என இதனுடைய அனைத்து செயல்முறை விளக்க காட்சிகளையும் நமக்கு காண்பிக்கின்றது. அதன்பின்னர் நம்முடைய மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்கள் கைபேசிஎண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு ஒரு பயனாளராக பதிவு செய்துகொள்வதற்காக சிவப்புவண்ண Sign Up எனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் இந்த தளத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்ளத் தயாராகிவிடும் இதுஒருமேககணினியின் அடிப்படையில் செயல்படுகின்ற நமக்கு ஒரு வழிகாட்டியாக இணைய அனுபவத்தை நமக்கு வழங்கிடும் சிறந்ததொரு தளமாகும் இதுஒரு பயனாளர் என்னென்ன எதிர்பார்க்கின்றார் எனயூகித்து அவருக்கு தேவையான மிகச்சரியான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் செய்யத்தயாராக இருக்கின்றது புதிய வசதி வாய்ப்புகள்என்னென்ன உள்ளன அவைகளின் மேம்பட்ட தன்மைகள் யாவை பயனாளர்ஒருவர் அவைகளை எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறமுடியும் என பரிந்துரையுடன் நமக்கு இந்த தளம் உதவுவதற்கு தயாராக இருக்கின்றது எல்லாவகையான தொழிலகங்கள் அவைகளின் உற்பத்தி முதல் விற்பனை வரையான செயல்பாடுகள் பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் உற்பத்தி செலவினை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை திரைகாட்சிகள் ,கனொளிபடங்கள் , உரைநடையிலான பயிற்சிகையேடுகள் அடிக்கடிகேட்கபடும் கேள்விகள் அதற்கான பதில்கள் ஆகியவற்றின் வாயிலாக மிகவிரிவாக அறிந்து தெரிந்து கொள்ள இந்த தளம் தயாராக இருக்கின்றது மிகச்சரியான நபர்களுக்கு தேவையான மிகச்சரியான வழிகாட்டுதல்களை மிகச்சரியான நேரத்தில் வழங்குவதை இந்த தளம் உறுதிபடுத்திடுகின்றது இது ஒவ்வொரு பயனாளருக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் ஆன மிகத்துல்லியமான திரையமைவுடன் பயன்படுத்தி கொள்ள உதவுகின்றது .இதற்காக இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் எதுவும் செய்திட தேவையில்லை இது ஐஎஸ்ஓ 27001 சான்றிதழுடன் software-as-a-service (SaaS) எனும் மென்பொருள் வழங்கிடும் சேவையையும் வழங்குகின்றது இந்த தளமானது WalkMe Editor ,WalkMe Player , WalkMe Analyticஆகியமூன்றடுக்கு சேவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது .

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. B.Ramesh
  மே 11, 2017 @ 07:11:54

  மிக அரிதான கணிணி தகவலை என்னை போல் கணினி அறியாதவர்ளையும் எளிய முறையில் விளக்க அளிக்கும் தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. நன்றி நன்றி நன்றி

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   மே 13, 2017 @ 13:54:19

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
   யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதன் அடிப்படையில் எனக்கு தெரிந்து தகவலை பாமரனும் அறிந்து பயன்பெறவேண்டும் என்ற பேரவாவினால் அவ்வப்போது இந்த வலைபூவில் கணினிதொடர்பான தகவல்களை இனிய எளிய தமிழில் எழுதிவருகின்றேன் இந்த தகவல்களை உங்களுடைய நண்பர்களிடம் கூறி பயன்பெறுமாறு செய்திடுக

   என்றும் தங்கள் அன்புள்ள

   முனைவர் சகுப்பன்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: