போலியான முன்மாதிரி செயல்பாடுகளின் மூலம் கணிப்பதற்கு உதவும் NetLogoஎனும் கருவி

நாம்வாழும் இந்தஉலகில் பறவைகள் கூட்டமாக பறந்து செல்லும்போது Vஎனும் ஆங்கில எழுத்தான வடிவில் பறந்து செல்வதை கண்டிருப்போம் அவை எவ்வாறு அவை Vஎனும் ஆங்கில எழுத்தான வடிவில் பறந்து செல்கின்றன என ஆச்சரியபடுவோம் மேலும் எவ்வாறான சூழலில் அதிக மழைபொழியும், காடுகளில் தீ பரவும் என்பனபோன்ற நிகழ்வுகளை கணினியில் போலியான முன்மாதிரி செயல்பாடுகளை செயற்படுத்தி அதனடிப்படையில் இவ்வாறு இருக்கும் என அறிவிப்பார்கள் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்பன போன்ற கணிப்பதற்குகூட கருவிகள் உள்ளன மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு பொருளாதாரம் ,உயிரியல், வேதியியல் ,இயற்பியல் போன்ற அனைத்து துறைகளுக்கான புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை செயற்படுத்துவதற்கான கருவிகள் உள்ளன ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கீழ்நிலையிலிருந்து முடிவெடுத்திடும் மேல்மட்ட நிருவாகிவரை இடைமுகம்செய்து சிறந்த மாதிரியை தெரிவுசெய்து கொள்வதற்கான கருவிகளும் உள்ளன இவ்வாறான செயலிற்கு உதவுவதுதான் NetLogoஎனும் திறமூலமென்பொருள் கருவியாகும் இது லினக்ஸ் ,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகும் StarLogo and StarLogoT ஆகியவை உள்ளடங்கிய பல்வேறு முகவர்களின் மாதிரி கணினிமொழியின் அடிப்படையில் இது செயல்படுகின்றது இதனை அமைவு செய்வதற்கான Setup செயல்படுத்திடுவதற்கானGo ஆகிய இரு தாவிப்பொத்தான்களின் வாயிலாக இதனை செயல்படுத்திடலாம் இதனை பற்றி நன்கு அறிந்து பயன்பெறுவதற்கு https://ccl.northwestern.edu/netlogo/எனும் இணைய முகவரிக்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: