லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-8 வரைகலை பொருட்களை நிருவகித்தல்

இந்த தொடரில் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின்ஒரு படவில்லையில் உள்ள வரைகலை பொருட்களை எவ்வாறு சுழலச்செய்வது, திருத்துதல் செய்வது, வரிசை படுத்துவது ,நிலைநிறுத்துவது ஆகிய விவரங்களை காணலாம் இந்த செயல்கள் அனைத்தும் ஒரு படவில்லைக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்ட உருவப்படத்திற்கும் பொருந்தும் என்ற செய்தியை மனதில் கொள்க இயல்புநிலையில் வரைகலை கருவிப்பட்டையானது அதற்காக திரையின் மேலே தோன்றவில்லையெனில் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் View =>Toolbars =>Drawing=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றிட செய்க அதனை தொடர்ந்து திரையில் தோன்றிடும் இதில் உள்ள கருவிகள் போதுமானதாக இல்லாதிருந்தால் இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Visible Buttons என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் உரையாடல் பெட்டியில் நமக்குகூடுதலாக தேவையான கருவிகளை தெரிவுசெய்து நிறுவுகை செய்து கொள்க அல்லது தேவையற்றதை நீக்கம் செய்து கொள்க
இதன்பின்னர் இந்த வரைகலை கருவிகளின்பட்டையில் தேவையான கருவிகளின் உருவப்பொத்தானை இடம்சுட்டியால்தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் படவில்லையில் உருவப்படம் வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து கொண்டு சுட்டியை இழுத்துவந்து போதுமானஉருவம் கிடைத்தவுடன் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக
இந்த கருவிகளின் பட்டையில் வழக்கமான உருவங்களாக Rounded rectangle, rounded square, Circle pie,Cylinder , cube போன்ற அடிப்படை உருவங்களும் Smiley face,Sun, moon , heart,Left brace, right brace போன்ற குறியீட்டு உருவங்களும் Left arrow, right arrow, up arrow, down arrow, left and right arrow, up and down arrow,போன்ற தொகுப்பான அம்புக்குறிகளும் நாம் பயன்படுத்துவதற்காக தயார்நிலையில் உள்ளன
வளைவுகளை வரைதல்
இதற்காக இந்த வரைகலை கருவிகளின் பட்டையிலுள்ள Curve filled அல்லது Curveஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின்உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டு படவில்லையில் வளைவினை வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து இழுத்துவந்து போதுமானஉருவம் கிடைத்தவுடன் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக
பலகோணங்களை வரைதல்
மேலே கூறியதை போன்றே இந்த வரைகலை கருவிகளின் பட்டையிலுள்ள Polygon filled அல்லது Polygonஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துகொண்டு படவில்லையில் பலகோணம் வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து இழுத்துவந்து போதுமான கோட்டினை வரைந்தபின்னர் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக பின்னர் மீண்டும் அந்த புள்ளியிலிருந்து மற்றொரு கோட்டினை வரைக இவ்வாறே போதுமானபலகோணகோடுகள் வரைந்தபின்னர் முடிவுபுள்ளியில் சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல்செய்து விட்டிடுக
இதேபோன்று 45 பாகை பலகோணத்தையும் இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் உள்ள Polygon (45°) filled அல்லது Polygon (45°) ஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து வரைந்திடுக
அதுமட்டுமல்லாது தனியான சுதந்திரமான கோடுகளை இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் உள்ள Free form line filled அல்லது Freeform line. ஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து வரைந்திடுக

1
வரைகலை பொருட்களை குழுவாக தொகுத்தல்
இவ்வாறு படவில்லையில் நம்மால் வரையப்பட்ட வரைகலை பொருட்களை குழுவாக தொகுத்திடமுடியும் இதற்காக முதலில் படவில்லையிலுள்ள குழுவாக தொகுத்திட விரும்பும் பொருட்களை selection tool எனும் கருவியின் உருவப்பொத்தானின் உதவியுடன்தெரிவுசெய்து கொண்டபின்னர் அதனைசுற்றி ஒரு செவ்வகத்தை வரைந்து கொள்க அல்லது Shift key எனும் விசையை பிடித்து கொண்டு படவில்லையில் குழுவாக தொகுத்திட விரும்பும் பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Edit => Select All=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+A.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் தெரிவுசெய்திடும் கைப்படியானது இவைகளை சுற்றி தெரிவு-செய்தவாறு திரையில் பிரிதிபலிக்கும் அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Shift+G.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களை திருத்தம் செய்தல் அல்லது வடிவமைப்பு செய்தல்
இவ்வாறு தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை அல்லது தனித்தனி பொருட்களை திருத்தம் செய்திடலாம் அல்லது வடிவமைப்பு செய்திடலாம் இதற்காக தேவையான தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Enter Group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F3எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Enter Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களின் குழுவிலிருந்து வெளியேறுதல்
இவ்வாறு திருத்தம் அல்லது வடிவமைப்பு செய்தபின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Exit group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+F3ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துகஅல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Exit Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களின் குழுவிலிருந்து தனித்தனியாக பிரித்தல்
இவ்வாறு குழுவாக தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை பிரித்து விடுவித்திடலாம் அதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Format =>Group =>Ungroup=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Alt+Shift+Gஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Ungroupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
வரைகலை பொருட்களை நாம் வேண்டும் நிலையில் நிலைநிறுத்துவதற்காக
இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்து சரிசெய்திடலாம் அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Size எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Position and Sizeஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில் கிடைமட்டஅளவிற்கு Position-X என்பதில் தேவையான பாகையையும் செங்குத்து அளவிற்கு Position-Y என்பதில் தேவையான பாகையையும் அமைத்து கொள்க Size என்பதில் நீள அகலத்தின் அளவுகளையும் அமைத்து கொள்க Protectஎன்பதில் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை சொடுக்குக

2
இதே செயலை பக்கப்பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் X(horizontal) எனும் உரைப்பெட்டியில் கிடைமட்டஅளவையும் Y (vertical)எனும் உரைப்பெட்டியில் செங்குத்து அளவையும் குறிப்பிடுக அவ்வாறே நீள அகலத்தின் அளவுகளையும் அமைத்து கொள்க குறிப்பு இந்த பக்கப்பட்டையின் moreஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
வரைகலை பொருட்களின் அளவை சரிசெய்தல்
இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து சரிசெய்திடலாம் அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Sizeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Position and Sizeஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில் அடிப்படை அளவையும் மேல்பகுதி அளவையும் தெரிவுசெய்து கொள்க அதைவிடSize என்பதில் நீளத்தின் அளவையும் உயரத்தின் அளவையும் தேவையானவாறு அமைத்து கொள்க இவ்வாறு மாறுதல்கள் செய்திடுமுன் Keep ratioஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க இதனால் அடிப்படை அளவை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று மேல்பகுதியும் அகலத்தை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று உயரத்தையும் தானாகவே சரிசெய்துகொள்ளும் பின்னர்Protectஎன்பதில் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை சொடுக்குக
இதே செயலை பக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப்-பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Size என்பதில் நீளத்தின் அளவையும் உயரத்தின் அளவையும் தேவையானவாறு அமைத்து கொள்க இவ்வாறு மாறுதல்கள் செய்திடுமுன் Keep ratioஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க இதனால் அடிப்படை அளவை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று மேல்பகுதியும் அகலத்தை சரிசெய்தல் அதற்கேற்றார் போன்று உயரத்தையும் தானாகவே சரிசெய்துகொள்ளும்

3
குறிப்பு இந்த பக்கப்பட்டையின் more எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
இவ்வாறான அடிப்படை செயலைத்தவிர ஏராளமான சிறப்பு செயல்களுக்கான கருவிகளும் இந்த கருவிகளின் பட்டையில் உள்ளன அவைகள் கண்ணிற்கு புலப்படவில்லையெனில் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் View =>Toolbars =>Mode=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றிடசெய்திடுக இதனை பற்றி மேலும் விரிவாக பின்வரும் பகுதிகளில் காணலாம்
வரைகலை பொருட்களை சுழலச்செய்தல்
சுழலச்செய்திடவிரும்பும் வரைகலை பொருட்களை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு வரைகலை கருவிகளின் பட்டையில்உள்ள Rotateஎனும் கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டவுடன் கைப்பிடிபோன்ற உருவம் அந்த வரைகலை பொருளை சுற்றி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு நகர்த்தி சுழற்றி அமைத்து கொள்க

4
அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Sizeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Rotationஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில்Pivot point எனும் பகுதியின் கீழுள்ள Position X எனும் உரைபெட்டியில் கிடைமட்டஅளவையும் Position Y எனும் உரைப்பெட்டியில் செங்குத்து அளவையும் குறிப்பிடுக மேலும் Rotation angleஎனும் பகுதியில் சுழலும் கோணத்தையும் குறிப்பிட்டபின்னர் OKஎனும் பொத்தானை சொடுக்குக
இதே செயலைபக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப் பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Rotationஎனும் பகுதியில் சுழலும் கோணத்தை Rotation angleஎனும்சுட்டுதலை பிடித்து இழுத்து தேவையானவாறு அமைத்து கொள்க அல்லது Rotation angleஎனும் உரைப்பெட்டியில் தேவையான சுழலும் கோணத்தின் அளவை அமைத்து கொள்க அல்லது இதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான சுழலும் கோண அளவினை தெரிவுசெய்து அமைத்து கொள்க
வரைகலை பொருட்களை ஏற்றுதல் இறக்குதல் செய்தல்
தேவையான வரைகலை பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Flip =>Horizontally=>அல்லது Flip =>Vertically=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

5
இதற்கு பதிலாக வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள இதற்கான கருவிகளை கொண்டும் செயற்படுத்திடலாம் அதற்காக தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டு வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள Flipஎனும் கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டவுடன் கைப்பிடிபோன்ற உருவம் அந்த வரைகலை பொருளை சுற்றி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு நகர்த்தி அமைத்து கொள்க
இதே செயலைபக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப்பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Rotationஎனும் பகுதியில் Flip Verticalஅல்லது Flip Horizontal ஆகியஇரண்டில் தேவையான உருவப்பொத்தானை மட்டும் தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி சரிசெய்து கொள்க
இதே செயலை கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் நகலான பொருட்களிலும் செயற்படுத்துவதற்காக காலியான இடத்தில் இந்த பொருளை நகலெடுத்து ஒட்டியபின்னர் அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Alignment எனும்வாய்ப்பினை தெரிவுகொள்க பின்னர் விரியும் படுக்கைவசமானது எனில் Top, Center, அல்லது Bottomஆகியத் துனை வாய்ப்புகளிலும் செங்குத்து வசமானது எனில் Left, Centered, அல்லது Right ஆகியத் துனை வாய்ப்புகளிலும் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
உருவத்தை திரி்த்து அமைத்தல்
இந்த செயலை வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள Distort,Set to Circle (slant), Set in Circle (perspective)ஆகிய மூன்று கருவிகளின் உருவப்பொத்தான்களின் வாயிலாக செயற்படுத்திடமுடியும் இதற்காக தேவையான வரைகலை பொருட்களை தெரிவுசெய்து கொண்டு வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள இந்த கருவிகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் Yesஎனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்ததற்கேற்ற உருவாக திரிந்து உருமாறிவிடும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: