இணைய பயன்பாடுகள் சரியாக செயல்படுகின்றதாவென பரிசோதிக்கும் கட்டற்ற கருவிகள்

இணையத்தில் உலாவரும்போது நாம் குறிப்பிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்காக உடனடியாக பணம் செலுத்தினால் 50%கழிவுத்தொகை வழங்குவதாக கூறும் விளம்பரத்தை பார்த்தவுடன் நாமனைவரும் அதிலுள்ளMake Payment என்ற பொத்தானை சொடுக்குதல் செய்திடுவோம் அதனை தொடர்ந்து அந்த இணைய பயன்பாடானது ஏராளமான நபர்கள் ஒரேநேரத்தில் இந்த பொத்தானை சொடுக்குவதால் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மிகநீண்டநேரம் எடுத்துகொண்டு not in stockஎன மிகமெதுவாக நமக்கு அறிவிப்பு செய்யும்ஏனெனில் இந்த பயன்பாட்டினை செயல்படுத்திடுமுன் இவ்வாறு ஏராளமான நபர்கள் ஒரேசமயத்தில் இந்த பொத்தானை சொடுக்குதல் செய்திடும்போது பொருத்தமானLoad testing, performance testingஆகிய பரிசோதனைகளை செயல்படுத்தி சரிபார்க்கவில்லை என்பதால் இவ்வாறான மெதுவான நிகழ்வு ஏற்படுகின்றது இதனை தவிர்க்க எந்தவொரு இணைய பயன்பாடுகளையும் உருவாக்கியவுடன் அதனை பயன்பாட்டிற்கு செயல்படுத்திடுவதற்குமுன் functional testing integration testing, system testing acceptance testing , Load testing, performance testing ஆகிய பல்வேறுவகையான பரிசோதனைகளையும் செய்து சரிபார்த்திடவேண்டும் மேலும் ஒரு சிறந்த இணைய பயன்பாடானது இணைய இணைப்புகளை ஏற்புகை செய்தல், பல்வேறு வாடிக்கையாளர் இடைமுகத்தினை சரியாக செயல்படுத்துதல் ,அவைகளை சரியாக செயல்படச்செய்தல்,தரவுதளதரவுகளை சரிபார்த்தல் , பல்வேறு இணைய உலாவியிலும் சரியாக செயல்படுமாறு அமையச்செய்தல் அதிலும் ஒரேசமயத்தில் ஏராளமான பயனாளர்கள் செயல்படுத்திடும்போதும் மிகச்சரியாக செயல்படச்செய்தல் மேலும் மிகமுக்கியமாக பாதுகாப்பான சூழலை வாடிக்கையாளருக்கு உருவாக்கித் தருதல் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைந்திடுமாறு செய்திடவேண்டும் இவ்வாறான பரிசோதனைகளை இணைய பயன்பாட்டு மென்பொருட்களில் செய்வதற்காக ஏராளமான கருவிகள் உள்ளன அதிலும் கட்டற்றமென்பொருட் கருவிகளும் பல உள்ளன அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு
1Seleniumசெலினியம் இது உரைநிரல்மொழி பரிசோதனை பற்றி நாம் கற்றறிந்து கொள்ளாமலேயே இணைய பயன்பாட்டினை பரிசோதிக்கும் வசதியைநமக்கு வழங்குகின்றது இதனை C#, Java, Groovy, Python, Ruby ஆகிய வெவ்வேறு நிரல்தொடர்-மொழிகளிலும் பரிசோதிப்பதாற்கான குறிமுறைவரிகளை எழுதிடமுடியும் சமீபத்திய அனைத்து இணைய உலாவிகளிலும் நாம் உருவாக்கிய இணைய பயன்பாடு செயல்படுமா என தானியங்கியாக பரிசோதிக்கமுடியும் அதுமட்டுமல்லாது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
2 watir -வாட்டர் என அழைக்கப்படும் இந்த கட்டற்றகருவியானது ரூபி எனும் கணினிமொழியின் அடிப்படையில் செயல்படும் இணைய உலாவிகளின்தானியங்கியாக செயல்படுகின்றதாவென பரிசோதிக்கபயன்படுகின்றது இது இணையத்தில்உலாவரும் பயனாளர் ஒருவர் பயன்பாடு ஒன்றினை செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்து சொடுக்குதல்செய்த பின்னர் இணையத்தில் விரியும் படிவத்தில் தேவையான விவரங்களைஇட்டு நிரப்புதல் அதன்பின்னர் பொத்தானை அழுத்துதல் பின்னர் இவைகளிலிருந்து தேவையான தரவுகளை பெறுதல் ஆகிய பல்வேறு வகை செயல்களை தானியங்கியாக பரிசோதிக்கின்றது
2.3 SoapUiஇது மிகவும் பிரபலமான பரவலாக அனைவராலும் பயன்படுத்தபடும்இணைய சேவையை பரிசோதிக்கபயன்படும் மிகச்சிறந்த கட்டற்ற கருவியாகும் இது ~ஒரு இணைய பயன்பாட்டில் functional testing .SOA UI integration testing, Security testing , Load testing, ஆகிய பல்வேறு பரிசோதனைகளையும் செய்து சரிபார்த்திட பயன்படுகின்றது இதுGroovy Script, JavaScriptஆகிய உரைநிரல்மொழி பரிசோதனையை ஆதரிக்கின்றது
4Sahiஇது தனியடைமை கருவியாக,கட்டற்ற கருவியாகஆகிய இருவழிகளிலும் இணைய பயன்பாட்டு மென்பொருட்களை பரிசோதிக்க தயாராக இருக்கின்றது குரோம், ஃபயர்ஃபாக்ஸ், சபாரி,ஓப்ரா இன்டெர்நெட்எக்ஸ்ப்ளோரர் ஆகிய அனைத்து இணைய உலாவிகளிலும் செயல்படும் பயன்பாடுகளையும் இதனை கொண்டு பரிசோதிக்கமுடியும் இதனை கொண்டு ஒரு இணைய பயன்பாட்டில் ஒரேசமயத்தில் பல்வேறு பரிசோதனைகளையும் இணையாக செயல்படுத்தி சரிபார்த்திடமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: