ஒரு போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலை எவ்வாறு தெரிந்து கொள்வது

தற்போதெல்லாம் வேலை தேடுவோரின் மின்னஞ்சல்முகவரிக்கு ஏராளமான அளவில் போலியான வேலை வாய்ப்புமின்னஞ்சல்களின் வாயிலாக தூண்டில் போடுகின்றனர். அவைகளுள் ஒருசிலவற்றை எளிதாக போலி என வேறுபடுத்த முடியும் , ஆனால் மற்றவைகளை அவ்வாறு எளிதாக வேறுபடுத்த முடிவதில்லை. ஒரு வேலை வாய்ப்பானது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க கீழே தரப்பட்டிருக்கின்ற பட்டியலான கருத்துகள் உங்களுக்கு உதவும் .
1. போலி வேலை வாய்ப்பு மின்னஞ்சலானது மிக மூர்க்கத்தனமாக இருக்க முனைகின்றன மேலும் நாம் படித்த நம்முடைய பாடத்தின்வாரியாக நம்மை வாழ்த்தி தங்களுடைய வலைக்குள் வீழ்த்துகின்றன.
2. நமக்கு அனுப்படும் மின்னஞ்சலானது அனுப்பப்பட்டஇடத்தின் டொமைன் பெயர்கள் ஒரு சிறிது நிழலானதாக இருக்கின்றன. உதாரணமாக, அருகு எனும் உண்மையான ஒரு நிறுவனம் இருப்பதாக கொள்வோம் அந்த நிறுவனம் தன்னுடைய தேவைக்கான பணியாட்களை தெரிவுசெய்வதற்காக வேலை தேடுபவர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்புகின்றது என்றால் அது @ அருகு.com அல்லது @ அருகு.org அல்லது @ அருகு.net போன்றவாறு மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே கொண்டிருக்கும் . ஒரு புகழ்பெற்ற நிறுவனம் வேலை தேடுபவர்களுக்கு ஜிமெயில் அல்லது யாகூமெயில் அல்லது ஹாட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளை கண்டிப்பாக பயன்படுத்தாது (அருகு_recruitment_drive@yahoo.com கண்டிப்பாக இது போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலாகும்). இது போன்ற போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவதை வேலை தேடுபவர் கவனமாக தவிர்த்திடவேண்டும்.
3. பொதுவாக, மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கோப்பானது (.doc / .docx / .pdf போன்றவை) என்ற பின்னொட்டு பெயருடன் “வேலைவாய்ப்பு கடிதம்” அல்லது அது போன்ற பெயர்களுடன் இருக்கும். நீங்கள் இவ்வாறான இணைப்பு வேலைவாய்ப்பு கடிதத்தை திறந்து பார்த்தால் அது மிகவும் வண்ணமயமாக மிகவும் பிரகாசமான எழுத்துருக்களுடனும் படங்களும் இணைந்து பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். பொதுவாக ஆட்சேர்ப்பு நோக்கத்திற்காக மின்னஞ்சல்களை அனுப்பும் போது ஒரு புகழ்பெற்ற நிறுவனம் இது போன்ற பிரகாசமான எழுத்துருக்களையும் நிறங்களையும் பயன்படுத்தாது.
4. மிக முக்கியமாக அந்த மின்னஞ்சலானது பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். பெரும்பாலும் போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சல் அனுப்புநர் உங்கள் வேலை தேடும் மனுவை பரிசீலிக்க விரும்பினால் நீங்கள் மேற்கொண்டு குறிப்பிட்ட வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கோரும். இந்த வலையில் விழ வேண்டாம். பொதுவாக நல்ல புகழ்பெற்ற நிறுவனம் எதுவும் இதுவரை எந்த காரணத்தை கொண்டும் வேலை தேடுபவர்களிடம் பணம் கோரியதில்லை. இவ்வாறு மின்னஞ்சல் அனுப்புநர் பணம் வேண்டும் என்று கோரினால் நீங்கள் இவ்வாறான வேலை வாய்ப்பானது சந்தேகமில்லாமல் போலியானது என முடிவுசெய்து கொள்ளலாம் . பொதுவாக இவ்வாறான மின்னஞ்சலில் தொகையின் அளவு, வங்கி கணக்கு எண், போன்ற விவரங்களானது வழக்கத்தைவிட மிக பிரகாசமான வண்ணங்கள் (சிவப்பு, பிரகாசமான பச்சை, ஆரஞ்சு, போன்ற) உயர்த்திகாண்பிக்கப்பட்டிருப்பதைகாணலாம்
5. நீங்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவராக இருந்தால் உங்களுக்கு வரும் போலியான வேலைவாய்ப்பிற்கான கடிதம் முழுவதிலும் இலக்கண பிழைகளுடனும் அபத்தமான அர்த்தமற்ற சொற்றொடர்களுடனும் இருப்பதை காணலாம் . புகழ்பெற்ற எந்தவொரு நிறுவனமும் இது போன்ற ஆங்கிலத்தில் அப்பட்டமாக தப்பும் தவறுமான மின்னஞ்சல்களை அனுப்பாது. நிறுவனத்தின் புகழ் நிலைப்புதன்மை ஆகியவற்றை பாதித்திடும் இவ்வாறான செயல்களை அவர்கள் செய்ய மாட்டார்கள்.
6. நீங்களே மிகவும் ஆச்சரியப்படும் வகையில் மிக பெரிய பதவிக்கு உங்களை தங்களின் நிறுவனத்தில் தெரிவுசெய்துள்ளதாக நமக்கு அடிக்கடி மின்னஞ்சல்களை அனுப்பிடுவார்கள் இவ்வாறான கடிதத்தை நிச்சயமாக அது போலி என்று வரையறுத்திடலாம். நீங்கள் மிகவும் உயர் கல்வித் தகைமைகள் கொண்டு பல ஆண்டுகளாக பணி அனுபவம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் இவ்வாற ஒரு மிக உயர்ந்த பதவி வாய்ப்பை கண்டிப்பாக பெற முடியாது.
7. பெரும்பாலும் நாம்இவ்வாறான போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலிற்கு உடனடியாக பதில் அனுப்பிடுவோம் இவ்வாறு பதில் எழுதுவது மனித இயல்புதான் ஆனால் அவ்வாறு இவ்வாறான போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலிற்கு மட்டும் பதில் அனுப்பிடாமல் இருக்கும்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறான நீங்கள் போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலை குப்பை மின்னஞ்சல் என குறியீடு செய்து அறவே நீக்கம் செய்திடுக பொதுஅறிவை பயன்படுத்தி இவையிவை உண்மையானவை அல்லது போலியென முடிவுசெய்திடுக
8. பொதுவாக மின்னஞ்சலில் அனுப்படும் போலியான வேலை வாய்ப்பு கடிதத்துடன் ஒரு உருவப்பட படிவத்தை இணைப்பாக அனுப்புவார்கள். ஆனால் புகழ்பெற்ற நிறுவனம் எதுவும் இதுபோன்று மின்னஞ்சலில் அனுப்படும் வேலை வாய்ப்பு கடிதத்துடன் ஒரு உருவப்பட படிவத்தை இணைத்து அனுப்பமாட்டார்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: