புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு-பகுதி-3 ஆண்ட்ராய்டின் கட்டமைவு

ஆண்ட்ராய்டு எனும் இயக்கமுறைமையானது படம்-1இல் உள்ளவாறு இதன் கட்டமைவானது ஐந்து பிரிவுகளாகவும் அவற்றுள் நான்குமுதன்மை அடுக்கு-களாகவும் இதனுடைய மென்பொருள் உள்ளடக்கங்கள் பிரித்து கட்டமைக்கப்-பட்டுள்ளன
1
படம்-1
லினக்ஸ் கெர்னல்
இந்த கட்டமைவு அடுக்குகளின் அடிப்படையான கீழ்பகுதியில் சுமார் 115 இணைப்புகளுடன் லினக்ஸ் 2..6 – எனும் அடுக்கு உள்ளது. இந்த அடிப்படை லினக்ஸ் அமைவு செயல்முறையானது செயல்மேலாண்மை, நினைவக மேலாண்மை, ஆகியவற்றுடன் படப்பிடிப்பு, விசைப்பலகை, காட்சிப்படுத்துதல் போன்ற சாதனங்களின் மேலாண்மையையும் கட்டுப்படுத்திடுகின்றது, மேலும் திரைக்காட்சி போன்ற அடிப்படை கணினி செயல்பாடுகளையும் வழங்குகிறது, அதற்கடுத்தாக இந்த கெர்னலானது லினக்ஸ் வலைபின்னல், ஒரு பரந்துபட்ட சாதன இயக்கிகள் போன்றவைகளில் வன்பொருள் இடைமுகம் செய்வதில் பிரச்சினை எதுவும் இல்லாமல் அனைத்து செயல்களும் லினக்ஸில் நன்றாக அமையுமாறு எல்லாவற்றையும் கையாளுகின்றது
நூலகங்கள்
இந்த லினக்ஸ் கெர்னலின் அடுத்துதொகுதியாக நூலகங்களின் அடுக்கு அமைந்துள்ளது இந்த நூலகங்களில் WebKit எனும் திறமூல வலை உலாவி இயந்திரம் , libc எனும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நூலகம், SQLite எனும் ஒரு பயனுள்ள களஞ்சியமான சேமிப்பு பயன்பாட்டு தரவு பகிர்தல், விளையாடு-வதற்கும் கானொளிப்பதிவு செய்வதற்குமான வசதிகள், இணைய பாதுகாப்பு பொறுப்பு நூலகங்களாக SSL ஆகியவை உள்ளன
ஆண்ட்ராய்டு இயக்கநேரம்
இந்த கட்டமைவின் கீழிருந்து இரண்டாவது அடுக்கில் மூன்றாவது பகுதியாக Android Run time என்பது நாம் இதனை பயன்படுத்தி இயக்குவதற்காக தயாராக இருக்கின்றது. இந்த பகுதியில் மிகமுக்கியகூறாக Dalvik Virtual Machine என்பது உள்ளது இது ஒரு ஜாவா மெய்நிகர் இயந்திரமாகும் இது ஆண்ட்ராய்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகும்
இந்த டால்விக் மெய்நிகர் இயந்திரமானது நினைவக மேலாண்மை, ஜாவா மொழியின் உள்ளார்ந்த பல்லடுக்கு செயல் போன்ற லினக்ஸின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்திடும் வசதியளிக்கின்றது இந்த டால்விக் மெய்நிகர் இயந்திரமானது ஆண்ட்ராய்டு பயன்பாட்டினுடைய சொந்த செயல்முறையில் அதாவது தன்னுடைய சொந்த டால்விக் மெய்நிகர் இயந்திரத்தில் செயல்பட உதவுகின்றது
மேலும் இந்த Android Run time ஆனது செந்தரமான ஜாவா நிரலாக்க மொழியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு பயன்பாட்டு உருவாக்கு-பவர்களுக்கு எழுதுவதற்கான வசதியை இந்த மைய நூலகங்களின் ஒரு தொகுப்பினை வழங்குகிறது.
பயன்பாட்டு வரைச்சட்டம்
இந்த பயன்பாட்டு வரைச்சட்டம் எனும் மூன்றாவது அடுக்கில் ஜாவா இனங்களில் பயன்பாடுகளுக்கு பல உயர் மட்ட சேவைகளை வழங்குகிறது.அதுமட்டுமல்லாது பயன்பாடு உருவாக்குநர்களை தங்களுடைய பயன்பாடுகளில் இந்த சேவைகளை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது.
பயன்பாடுகள்
கடைசியான மேல் அடுக்கில் பல்வேறு ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் இருப்பதை காணலாம். நாம் நம்முடைய பயன்பாட்டினை இந்த அடுக்கில் மட்டுமே பயன்பாடுகளை உருவாக்கி நிறுவுகை செய்திட வேண்டும் Contacts , Browser, Games போன்ற பல்வேறு . பயன்பாடுகளில் இதில் உள்ளதை காணலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: