லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-5

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் உரையை உள்ளீடு செய்வதற்கு பயன்படும் பகுதியையே உரைப்பெட்டி என அழைப்பர் இந்த உரைப்பெட்டியை செயல்பலகத்தின் Layoutsஎனும் பகுதியிலிருந்து லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் AutoLayoutஎனும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட புறவமைப்பை தெரிவுசெய்வது , படம் வரையும் கருவிபட்டையிலிருந்து அல்லது உரையின்கருவிபட்டையிலிருந்து, நெடுமட்டஉரையின்கருவியை அல்லது கிடைமட்ட உரையின்கருவியை பயன்படுத்தி ஒரு பெட்டியை உருவாக்குவது ஆகிய இருவழிகளில் ஒரு படவில்லையில் உரைப்பெட்டியை உருவாக்கிடமுடியும்
இந்த AutoLayoutஎனும் உரைப்பெட்டியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதனை சாதரண காட்சியில் திரையில் தோன்றிடுவதை உறுதிபடுத்திகொள்க. இவ்வாறு தோன்றிடும் உரைப்பெட்டியில் தேவையான உரையை நேரடியாக தட்டச்சு செய்தல் அல்லது வேறு இடத்திலிருந்து நகலெடுத்து ஒட்டுவது ஆகிய வழிமுறைகளில் தேவையானவாறு உள்ளீடு செய்து கொள்க
மேலும் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் திரைதோற்றமானது சாதாரணமாக இருப்பதை உறுதிபடுத்தி கொண்டு படம்வரையும் கருவிபட்டைஅல்லது உரையின்கருவிகளின் பட்டை கண்ணிற்கு புலப்படவில்லையெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையில்View => Toolbars => Drawing=> அல்லது Text =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

1
1
பின்னர் இந்த கருவிகளின் பட்டையில் உள்ளநெடுமட்டஉரையின்கருவி அல்லது கிடைமட்ட உரையின்கருவிகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் படவில்லையை தெரிவுசெய்து சுட்டியை இழுத்து சென்று அகலவாக்கில் உரைப்பெட்டியை வரைந்தபின்னர் பிடித்திருந்த சுட்டியின் பிடியை விட்டிடுக உடன் உரைப்பெட்டியொன்று உருவாகிவிடும் அதனை தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொண்டு இந்த உரைப்பெட்டிக்குள் இடம்சுட்டியை வைத்து நேரடியாக உரையை தட்டச்சு செய்தல் அல்லதுவேறு இடத்திலிருந்து நகலெடுத்து ஒட்டுவது ஆகிய வழிமுறைகளில் உரையை தேவையானவாறு உள்ளீடு செய்து கொள்க
இந்த உரைப்பெட்டியின் அளவு சிறியதாக இருந்தால்அதனை பெரியதாக செய்திடுவதற்காக அதில்இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவு-செய்துசொடுக்குக உடன் இடம்சுட்டியானது Iஎனும் ஆங்கில எழுத்துபோன்று தோன்றிடும் அதனோடு இந்த உரைபெட்டி ஓரம் மேம்படுத்தப்பட்டு நான்கு மூலையும் கைப்பிடிபோன்று தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசெல்லுதல் அல்லது ஓரப்பகுதியை பிடித்து இழுத்துசென்று விட்டிட்டு இடம்சுட்டியை இந்த உரைபெட்டிக்கு வெளியில் வைத்து சொடுக்குக.

2
2
இதற்கு பதிலாக சரிசெய்திடவேண்டிய உரைபெட்டியை சுட்டியால் தெரிவுசெய்து-கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Position and Sizeஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் F4எனும் பொத்தானை சொடுக்குக அல்லது பக்கப்பட்டையிலுள்ளPosition and Size எனும் துனைப்பகுதியில் உள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லது திரையின் மேலே வலதுபுற மூலையில் Position and Sizeஎனும் தலைப்பு பட்டையில் உள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் இதில்position and Zize, rotation ஆகியவைகளின் தாவிபொத்தானின் திரையை தோன்றிடச்செய்து தேவையானவாறு சரிசெய்துகொண்டு Protectஎனும் பகுதியில்உள்ள வாய்ப்பினை தெரிவுசெய்து கைதவறி மாறுதல்கள் ஆகாமல் காத்திடுமாறு அமைத்துகொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக

3
குறிப்பு லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் தோன்றிடும் உரைப்பெட்டியின் வாயிலாக அமைத்திடும் உருவஅளவை திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Tools => Options => LibreOffice Impress => General=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் திரையில் அமைத்து கொள்க
இந்த உரைபெட்டியின் விளிம்பு பகுதியை இடம்சுட்டியால் தெரிவுசெய்தபின் தோன்றிடும் கைப்பிடிபோன்ற உருவை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Delஎனும் விசையை அழுத்தி நீக்கம் செய்திடுக
வடிவமைப்பு செய்யாத உரையை இந்த படவில்லையின் உரைப்பெட்டியில் கொண்டு வந்து ஒட்டுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து நகலெடுத்தபின்னர் Control+Shift+Vஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் உரையாடல் பெட்டியல் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டையில் Paste எனும் உருவப்பொத்தானின் வலதுபுற பகுதியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சிறுபட்டியில் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகUnformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுதிரையின் மேலே கருவிகளின் பட்டையில்Edit => Paste Special=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தபின் விரியும் உரையாடல் பெட்டியில் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தெரிவுசெய்த உரையானது வடிவமைப்புசெய்யப்படாமல் படவில்லையின் உரைப்பெட்டியில் ஒட்டப்பட்டுவிடும்
வடிவமைப்பு செய்த உரையை இந்த படவில்லையின் உரைபெட்டியில் கொண்டு வந்து ஒட்டுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து நகலெடுத்தபின்னர் Control+V என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டையில் Paste எனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லதுதிரையின் மேலே கருவிகளின் பட்டையில்Edit => Paste=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
உள்ளீடு செய்யப்பட்ட உரையின் தோற்றத்தை மாற்றியமைத்திடுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Default formatting=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தபின் விரியும் உரையாடல் பெட்டியின் துனைகொண்டு தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க இந்த உரைப்பெட்டியில் உள்ள உரைகளுடன் சிறப்பு குறியீடுகளை கொண்டுவந்த சேர்த்திடுவதற்காக தேவையானஇடத்தில் இடம்சுட்டியை வைத்து கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Insert => Special Character=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில் Special Characterஎனும் உருவப்பொத்தனை சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான சிறப்பு குறியீட்டை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக அல்லது ஒருமுறைமட்டும் சொடுக்கியபின்okஎனும் பொத்தானை சொடுக்குக
வடிவமைக்கப்பட்ட குறிகள் என்பது ஒருவகை சிறப்பு எழுத்துருவாகும் உரைகளுக்கு இடையில் இதனை வைத்து உரையின் தோற்றத்தை சரியாக வடிவமைத்திட இது பயன்படுகின்றது உரைப்பெட்டியின் உரையில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Insert => Formatting marks=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Non-breaking space (ctrl_shift+Space), Non-breaking hyphen,Optional hyphen, No-width optional break(ctrl + Slash),No-width no break,Left-to-right mark, Right-to-left mark ஆகியவற்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து அமைத்து கொள்க
உரைப்பெட்டியின் உரையின் பாவணையைமாறுதல்கள் செய்திடுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format =>Styles and Formattingஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது செந்தர கருவிகளின் பட்டையில் Presentation Stylesஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லது F11எனும் செயலி விசையை அழுத்துக உடன் விரியும் Styles and Formattingஎனும் உரையாடல் பெட்டியின் உதவியுடன் தேவையானவாறு மாறுதல்கள் செய்து அமைத்து கொள்க 4

5

உரையின் எழுத்துருக்களை வடிவமைப்பு செய்திடுவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Characterஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில்Character எனும் உருவப்பொத்தானை சொடுக்குகஅல்லது பக்கப்பட்டையிலுள்ளCharacter எனும் துனைப்பகுதியில் உள்ள Propertiesஎனும் உருவபொத்தானை சொடுக்குக அல்லது திரையின் மேலே வலதுபுற மூலையில் Character எனும் தலைப்பு பட்டையில் உள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் Characterஎனும் உரையால் பெட்டியின் துனையுடன் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக இந்த Characterஎனும் உரையாடல் பெட்டியில் ஆசிய மொழிகளின் எழுத்துருக்களை இயலுமை செய்வதற்காக முன்னதாக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Tools => Options => Language Settings => Languages=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
பத்தியானஉரையை வடிவமைப்பு செய்வதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Paragraph=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில்Paragraph எனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் விரி்யும் Paragraphஎனும் உரையாடல் பெட்டியின் Indents and Spacing; Alignment , Tabsஆகிய தாவிப்பொத்தான்களின் திரையின் துனைகொண்டு தேவையானவாறு மாறுதல்கள்செய்து அமைத்துகொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக
6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: