புதியவர்களுக்கு லினக்ஸ்எனும் இயக்கமுறைமை

லினக்ஸ் இயக்கமுறைமையை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடும்போது அதனோடு நமக்குஅத்தியாவசிய தேவைகளை நிறைவுசெய்திடும் பயன்பாடுகளும் சேர்ந்தே கிடைக்கின்றன அவைகளுள் தேவையற்றதை நீக்கம் செய்து தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளலாம் அதனால் திரைதோற்றமும் சூழலும் மாறாது தேவையெனில் புதிய பயன்பாடுகளைகூட நிறுவுகை செய்து கொள்ளலாம் இவ்வாறு செயல்படுத்திடுவதற்காக திரைச்சூழலிலிருந்து வெளியேறி புதிய சூழலில் பணிபுரியலாம் மீண்டும் வெளியேறி பழையசூழலிற்கு உட்புகுந்து பணியாற்றலாம் பொதுவாக அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளும் இயல்புநிலையில் நாம் அனைவரும் வழக்கமாக பயன்படுத்திடும் அலுவலக பயன்பாட்டிற்கான லிபர் ஆஃபிஸ் போன்ற பயன்பாடுகளின் சூழலுடனேயே இருக்கின்றன இந்த லினக்ஸ் இயக்கமுறைமையானது தனிநபர் பயன்பாடுமுதல், சிறிய குழு, பேரளவு வியாபார நிறுவனங்கள் வரை மிககுறைந்த செலவில் நம்மிடம் கைவசமிருக்கும் வன்பொருட்களை மட்டுமே கொண்டு நம்முடைய தேவையை நிறைவு செய்து கொள்ளமுடியும் மேலும் அவ்வப்போது லினக்ஸின் LTS பதிப்பின் வாயிலாக நிகழ்நிலை படுத்தி கொள்ளமுடியும் தற்போது 300 அதிகமான லினக்ஸ் இயக்க-முறைமைகள் பயன்பாட்டில் உள்ளன அவைகளுள் 10 லினக்ஸ் இயக்க-முறைமைகளானவை புதியவர்களுக்கு பெரியஅளவில் கைகொடுக்கின்றன அவைகளுள் மின்ட், உபுண்டு ஆகிய இரண்டும் புதியவர்களுக்கு உதவுவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன அதுமட்டுமல்லாது இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடாமல் ஒரு குறுவட்டிலிருந்து செயல்படுத்தி பார்த்து திருப்தியடைந்தபின் முழுவதுமாக நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்ளுமாறும் கிடைக்கின்றன அதைவிடஇந்த குறுவட்டில் நிறுவுகை செய்வதற்கு பதிலாக 4 ஜிபி கொள்ளளவு கொண்ட யூஎஸ்பி வாயிலாக கூட UNetbootinஎனும் பயன்பாட்டின் வாயிலாக நிறுவுகை செய்து பயன்படுத்தி சரிபார்க்கமுடியும் மேலும் நம்முடைய கணினியில் மெய்நிகர் கணினியை நிறுவுகை செய்து அதில் லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்தி சரிபார்க்கலாம்

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    பிப் 20, 2017 @ 05:32:02

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: