விரைவான தட்டச்சு பயிற்சியை பெற Typing Speed Test எனும் தளத்தினை பயன்படுத்தி கொள்க

மனித நாகரிகம் மேலும் வளருவதற்கேற்ப நாமெல்லோரும் மேலும் மேலும் வளர்ந்து வரும் உரைகளுடனான தகவல் தொடர்பிற்காக நம்முடைய கைவிரல்களை வேகமாக தட்டச்சு செய்திட பழக்கபடுத்தி வருகின்றோம் அதனால் நாம் கணினியின் விசைப்-பலகையின் வாயிலாக பயிற்சி பெற்று எவ்வளவு வேகமாக தட்டச்சு செய்கின்றோம் என அறிந்த கொள்வதற்காக இணையத்தில் பல்வேறு கருவிகள் பயன்பாட்டில் உள்ளன அவையனைத்தும் அதற்காக கணினியில் விளையாட்டுகள், தேர்வுகள் போன்றவைகளின் வாயிலாக ஒருநிமிடத்திற்கு நாம் எத்தனை எழுத்துகள் தட்டச்சு செய்கின்றோம் என கணக்கிடுகின்றன
இதற்கு பதிலாக Typing Speed Test எனும் இணையதளமானது ஒருநிமிடத்திற்கு நாம் எத்தனை சொற்கள் தட்டச்சு செய்கின்றோம் என கணக்கிடுகின்றது. மேலும் இது நம்முடைய தகவல்களை வேகமாக உள்ளீடு செய்வதற்கான பயிற்சியை வழங்குகின்றது இந்த பயிற்சியை பெறுவதற்காக இந்த இணையதளத்தில் உள்நுழைவு செய்தவுடன் 10 Fast Fingers எனும் செந்தர தட்டச்சு தேர்வு இருப்பதை காணலாம் இதில் 200 க்கும் மேற்பட்ட பொதுவாக நாம் பயன்படுத்திடும் சொற்கள் உள்ளன இதனை கொண்டு துவக்க-நிலையாளர்கள் ஒருநிமிடத்திற்குஎத்தனை சொற்கள் (WPM)தட்டச்சு செய்யமுடியும் என பயிற்சி செய்துதம்முடைய திறனை மேம்படுத்திகொள்ளலாம் அடுத்தபடிமுறையாக 1000 சொற்கள் கொண்ட பயிற்சியை மேற்கொள்ளலாம். பொதுவாக ஆங்கில மொழியில் 130-140 WPM என்ற தட்டச்சு நிலையில் இருப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆவார்கள்
ஆயினும் துவக்கநிலையாளர்கள் முதலில் இதிலுள்ள 40 சொற்களுக்கான பயிற்சியையும் அதன்பின்னர் இந்த 40 சொற்களுடன் புதிய 10 சொற்களை சேர்த்து 50 சொற்களுக்கான பயிற்சியையும் அதற்கடுத்ததாக மேலும் 10 சொற்களை சேர்த்து 60 சொற்களுக்கான பயிற்சியையும் என்றவாறு நிமிடத்திற்கு100 சொற்கள் வரை நம்முடைய தட்டச்சு வேகத்தினை மேம்படுத்தி கொண்டேவரலாம் இதில் நன்கு பயிற்சி பெற்றபின்னர் நாம் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்காக 1 முதல் 5 நிமிடம் வரை என தட்டச்சு தேர்வு நேரத்தையும் அதற்கான உரையையும் தெரிவுசெய்து கொண்டு ‘Start Typing Test எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து நம்முடைய தட்டச்சு செய்திடும் தேர்வில் கலந்து-கொண்டு நம்முடைய தட்டச்சு பயிற்சியில் வெற்றிபெறுகமேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்திகொள்வதற்குhttps://www.livechatinc.com/typing-speed-test/ எனும் இணையதளத்திற்கு செல்க
9

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: