கடைசியாக விட்டஇடத்திலிருந்து இணையத்தில் தொடர்ந்து உலாவரலாம்

மிகப்பிரபலமான கூகுளின் குரோம் எனும் இணைய உலாவிதான் தற்போது நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய இணைய உலாவலுக்கு பயன்படுத்திவருகின்றோம் இதில் ஏராளமான வசதிவாய்ப்புகள் இருந்தாலும் நாம்அனைவரும் வழக்கமான செயலை மட்டுமே பயன்படுத்தி கொண்டு இதிலுள்ள மற்ற வசதிகளை பயன்படுத்திடாமல் விட்டுவிடுகின்றோம் நாம் நம்முடைய அலுவலகம் அல்லது வீட்டை விட்டு வெளியில் இருக்கும்போது நம்முடைய கைபேசி வாயிலாக மிகமுக்கியமான இணைய தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தை பார்வையிட்டுவிட்டு வேறு அவசரமான பணி வந்ததால் அப்படியே அந்த பக்கத்தின் மிகுதியை பார்வையிடாமல் விட்டுவிடுவோம் எனக்கொள்வோம் அதன்-பின்னர் நம்முடைய அலுவலகம் அல்லது வீட்டிற்கு வந்தபின்னர் தொடர்ந்து அதே-இணைய தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தை பார்வையிட விரும்புகின்றோம் எனில் முதலில் இந்த கூகுளின் குரோம் எனும் இணைய உலாவியில் பதிவுசெய்துகொண்டு நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவக்கி கொள்க அதன்பின்னர் ஏற்கனவே பார்வையிட்ட இணையதளத்தின் அதே பக்கத்தை பார்வையிடுவதற்காக நம்முடைய கணக்கின் வாயிலாக இந்த கூகுளின் குரோம் எனும் இணைய உலாவியில் நம்முடைய இணைய உலா பணியை துவங்கிடுக பின்னர் இதில்உள்ள பட்டியலையும் தொடர்ந்து History என்பதையும் சொடுக்குக அல்லது விசைப்பலகையில்Ctrl+H என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் நாம் இதற்கு முன் இந்த இணைய உலாவியை பயன்படுத்திய கணினி அல்லது திறன்பேசி அல்லது கைபேசி ஆகியவற்றின் விவரங்களை பட்டியலாக சிறுசிறு உருவப் பொத்தான்களாக திரையின் மேல்பகுதியில் காண்பிக்கும் அவைகளுள் நாம் கடைசியாக பயன்படுத்திய சாதனத்தின் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் இவைகளின் ஒவ்வொன்றிலும் குரோம் எனும் இணைய உலாவியின் நாம் திறந்து பார்வையிட்ட இணையதள பக்கங்களின் விவர பட்டியல் உள்ளடங்கியிருப்பதால் நாம் சொடுக்குதல் செய்த சாதனத்தில் இணைய உலாவந்த விவரபட்டியல் விரியும் இங்கு கணினியில் பயன்படுத்தியது அல்லது கைபேசி சாதனங்களில் பயன்படுத்தியது ஆகிய இருதாவிபொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்கியபின் Open all எனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் இணையஉலாவந்த அனைத்து இணையபக்கங்களும் தாவிபக்களாக விரியும் அவைகளுள் சமீபத்தில் நம்மால் பார்வையிடப்பட்ட இணைய தள பக்கத்தைமட்டும் சொடுக்குதல் செய்துநாம் இணையஉலாவலை விட்ட இடத்திலிருந்து தொடரமுடியும்

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    ஜன 25, 2017 @ 09:16:37

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: