லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-3

ஒரு படவில்லையின் பின்புலத்திலும் உரையிலும் என்னவகையான வண்ணக்கலவை பயன்படுத்தவேண்டும்?
பார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கேற்ப உள்ளிணைத்த படங்கள் இதில் அமைந்துள்ளனவா?
குறிப்பிட்ட உரை அல்லது படம் ஆனது அனைத்து படவில்லைகளிலும் உள்ளிணைக்கப்-பட்டுள்ளதா?
நாம் காண்பிக்கும் படவில்லைகாட்சியை பார்வையாளர்கள் மேற்கோள்-செய்வதற்கு ஏற்ப அதற்கென படவில்லைகளில் எண்களை குறிப்பிட்டுள்ளோமா?
படவில்லையின் பின்புல வரைபடங்கள் சரியாக அமைத்துள்ளோமா ?
நாம்கூறவிழையும் கருத்துகளை தெரிந்து கொள்ளுமாறு தொடர்ச்சியான ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகள் அமைக்கப்பட்டுள்ளவா ?
ஆகிய கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் படவில்லை காட்சிகளை நாம் வடிவமைத்திடவேண்டும் இந்நிலையில் நாம் படவில்லை மேலாளர்(slide master) என்ற கருத்துருவை நம்முடைய கவணத்தில் கொள்ளவேண்டும் உடனடியாக அப்படியாயின் படவில்லை மேலாளர் என்றால் என்ன?என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க

1
1

லிபர் ஆஃபிஸின் ரைட்டரின் ஒரு பக்க பாவணை போன்று லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் மற்ற படவில்லைகளை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்தி கொள்ளும் துவக்க-புள்ளியையே படவில்லை மேலாளர்(slide master) என அழைப்பர். இந்த அடிப்படையி-லிருந்தே அனைத்து படவில்லைகளின் அடிப்படை வடிவமைப்புகளையும் கட்டுபடுத்தும் அமைவாக இதுவிளங்குகின்றது பொதுவாக ஒரு படவில்லை காட்சியானது ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லை மேலாளர்(slide master)களை கொண்டிருக்கும் மிகமுக்கியமாக இந்த லிபர் ஆஃபிஸ்5.2 இல் ஸ்லைடு மாஸ்டர், மாஸ்டர் ஸ்லைடு, ,மாஸ்டர் பேஜ் ஆகிய மூன்று பெயர்கள் ஒரே கருத்துருவிற்காக பயன்படுத்தப் படுகின்றன ஆயினும் நாம் இங்கு ஸ்லைடு மாஸ்டரை பற்றி மட்டுமே காணவிருக்கின்றோம்
பின்புல வண்ணம், வரைகலை படங்கள் போன்ற உருவங்கள்ஆகியவை சேர்ந்த பின்புலம்..தலைப்பும் முடிவும் , உரைகளின் வரைச்சட்ட அளவு ,உரைகளின் வடிவமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுதியான பண்பியல்புகளின் வரையறை கொண்டதே ஒரு ஸ்லைடு மாஸ்டராகும். இந்த ஸ்லைடு மாஸ்டரின் அனைத்து பண்பியல்புகளையும் அதனுடைய ஸ்டைல்கள் கட்டுபடுத்துகின்றன.இந்த ஸ்டைலின் அடிப்படையிலேயே நாம் உருவாக்கிடும் எந்தவொரு புதிய படவில்லையின் வடிவமைப்பும் அமைந்திருக்கும் ஆயினும் தனிப்பட்ட படவில்லையை ஸ்லைடு மாஸ்டரில் பாதிப்படையாத வண்ணம் அதன் உள்ளடக்கங்களை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து கொள்ளமுடியும் இந்த ஸ்லைடு மாஸ்டரில் காட்சி பாவணை, உருவப்படபாவணை ஆகிய இரண்டுவகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட படவில்லையின் காட்சியில் பாவணையை திருத்தம் செய்திடமுடியும் ஆனால் புதிய படவில்லையில் அவ்வாறு காட்சி பாவணையை திருத்தம் செய்திடமுடியாது
இம்ப்பிரஸானது ஒரு தொகுதியான ஸ்லைடு மாஸ்டர்களுடன் நாம் பயன்படுத்திடு-வதற்காக தயாராக உள்ளது இந்த மாஸ்டர் பேஜ் ஆனது Used in This Presentation, Recently Used, Available for Useஆகிய மூன்று பகுதிகளாலானதாகும் இந்த பெயர்களுக்கு அடுத்துள்ள குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதிலுள்ள கட்டைவிரல்அளவேயுள்ள படவில்லைகளை காட்சியாக விரியச்செய்திடலாம் அல்லது தேவையில்லையெனில் அவைகளை மறையச்செய்திடலாம் நாம் புதியதாக படவில்லையை உருவாக்கி கொள்வதற்கு தயாராக மாதிரி பலகங்ளானது பட்டியலாக இந்த Available for Use என்ற பகுதியில் உள்ளன அவற்றுள் நாம் விரும்பியதை மட்டும் தெரிவு செய்து சொடுக்குதல் செய்து நம்முடைய புதிய படவில்லை காட்சியை உருவாக்கிடுவதற்காக துவங்கிடலாம் நல்ல அனுபவம் பெற்றபிறகு நாமே புதிய படவில்லைகளின் மாதிரி பலகங்களை உருவாக்கி இந்த பட்டியலில் சேர்த்திடமுடியும்
புதிய ஸ்லைடு மாஸ்டரை உருவாக்கிடுதல்
இதனை முதன்முதல் உருவாக்கிடுவதற்காக திரையின்மேலே கட்டளை பட்டையில் View ==> Master ==> Slide Master==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது View ==> Tool bars ==> Master View==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
2
2

அதற்குபதிலாக பக்கப்பட்டையின் மாஸ்டர்பேஜ் பகுதியிலுள்ளவைகளுள் நாம் விரும்புவதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit Masterஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Master Viewஎனும் கருவிகளின் பட்டி திரையின் மேல்பகுதியில் தோன்றிடும் அதில் New Masterஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லை பலகத்தில் புதியபடவில்லை மேலாளர் ஒன்று தோன்றிடும் பின்னர் இந்த படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Rename master எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் இந்த படவில்லைக்கு புதிய பெயரை உள்ளீடு செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டியில் Close Master View என்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்ஸின் வழக்கமான பதிப்பு திரைக்கு கொண்டு வருக அனைத்து படவில்லை-களிலும் இந்த ஸ்லைடு மாஸ்டரை செயற்படுத்திடுவதற்காக பக்கப்பட்டையிலுள்ள Master Pages எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Master Pages எனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to All Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
ஒவ்வொரு படவில்லையிலும் தனித்தனி ஸ்லைடு மாஸ்டரை செயல்படுத்திடு-வதற்காக தேவையான படவில்லைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டபின்னர் ஒவ்வொரு முறையும் பக்கப்பட்டையிலுள்ள Master Pagesஎனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to Selected Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
3
3
ஒருசில நேரங்களில் ஒரே படவில்லையில் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்லைடு மாஸ்டர்களை செயற்படுத்திட விரும்புவோம் அந்நிலையில் திரையின் மேலே கட்டளை பட்டையில் Format => Slide Design=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Slide Design என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் ஏற்கனவே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஸ்லைடு மாஸ்டர்கள் தோன்றிடும் மேலும்ஸ்லைடு மாஸ்டர்களை தோன்றிட செய்வதற்காக இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Loadஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Load Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் templateஎனும் பகுதியின் கீழுள்ள வைகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Slide Designஎனும் உரையாடல் பெட்டியிலும் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாஸ்ட்ர் பேஜ் என்பதில் Available for useஎனும் துனைப்பகுதியில்அனைத்தும் சென்று வீற்றிருக்கும் நாம் நம்முடைய படவில்லையில் செயல்படுத்திய இந்த ஸ்லைடு மாஸ்டரில் பின்புல வண்ணம் பின்புல பொருட்கள் உரையின் பண்பியல்புகள்,தலைப்பு அடிப்பகுதியின் அளவுகள் படவில்லையின் அளவுகள் ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும் இவ்வாறு மாறுதல்கள் செய்துகொள்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில் View => Master => Slide Master=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் நாம் மாறுதல் செய்திட விரும்பும் படவில்லை பலகத்தின் ஸ்லைடு மாஸ்டரை தெரிவுசெய்து கொள்க பின்னர் இந்தஸ்லைடு மாஸ்டரின் பணிபுரியும்காலிஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் மாறுதல்கள் செய்திட விரும்பும் படவில்லையின் பொருளின் மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் தேவையானவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல் செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டையில் Close Master Viewஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் View=> Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இந்த வழக்கமான திரைக்காட்சியில் படவில்லைகளில் செய்யப்படும் மாறுதல்கள் ஸ்லைடு மாஸ்டரில் பின்னர் மாறுதல்கள் செய்திடமுடியாது அதனால் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்காக படவில்லை-யில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Default Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குகஅல்லது படவில்லையில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Default எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கு
4
4

அதன் பின்னர் படவில்லையின் பின்புலத்தினை மாறுதல்கள் செய்திடுவதற்காக தேவையான படவில்லையை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளை பட்டையில் Format => Page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் Slide =>Page Setup=> என்றவாறு கட்டளை-களை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் விரியும் Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப்பொத்தானின் திரையை விரியச்செய்க பின்னர் Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் தேவையான பொருட்கள் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது விசைப்-பலகையில் F11எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது Line and Fillingஎனும் கருவிகளின் பட்டியலில் உள்ள Styles and Formattingஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
5
5

அல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formattingஎனும்பகுதியிலுள்ள Styles and Formatting எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் பட்டியில் Background style என்பதை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Modify எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Background எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இது ஏறத்தாழ Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப் பொத்தானின் திரையை போன்றதேயாகும் இதிலுள்ள Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் None, Color, Gradient, Hatching, or Bitmap. ஆகியவற்றில் தேவையான பொருளை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக உடன்நாம் தெரிவுசெய்ததற்கேற்ற பட்டியில் விரியும் அவற்றுள் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
6
6

படவில்லையில் உருவப்படத்தை உள்ளிணைத்தல்
இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Master => Slide Master=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் ஸ்லைடு மாஸ்டர்களில் நாம் உள்ளிணைக்க விரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Image => From File என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் கோப்புகளை தேடிபிடித்திடும் உரையாடல் பெட்டியில் தேவையான உருவப்படம் இருக்கும் கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு முன்காட்சி பகுதியில் அது சரியாக இருக்கின்றது எனில் Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படம் ஸ்லைடு மாஸ்டரில் உள்ளிணைந்து விடும் இந்த உருவப்படம் பின்புலமாக இருந்தால்தான் நாம் கூறவிரும்பும் செய்திக்கான உரையை பார்வையாளர்கள் படித்திடுமாறு அதன்மீது எழுதமுடியும்இதற்காக ஸ்லைடு மாஸ்டரில் உள்ளஇந்த உருவப்படத்தினை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Arrange => Send to Back => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொள்க அதற்கடுத்ததாக இந்த படவில்லையில் உள்ள ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து திருத்தம் செய்து சரிசெய்வது எனும் செயல் அதிக நேரம் எடுத்துகொள்வதாக அமையும் அதனால் ஒட்டுமொத்தமாக இந்த ஸ்லைமாஸ்டருக்கு என தனியான ஸ்டைலை அமைத்திட்டால் விரைவாக அனைத்தும் அதற்கேற்ப அமைந்துவிடும் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையில் Styles and Formatting எனும் உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ளF11, எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formatting எனும் பகுதியிலுள்ள Styles and Formattingஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Styles and Formattingஎனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Presentation Styles எனும் உரையாடல் பெட்டியானது திரையில் விரியும் அதில் background,background objects,text ஆகிய மூன்றுமுக்கியமான உறுப்புகளின் பாவனைகள் உள்ளன இந்த text Styles என்பதில் Notes, Outline 1 through Outline 9, Subtitle, Title ஆகிய இதனுடைய பாவணைகள் உள்ளன இவைகளின் வாயிலாக Presentation Styles ஐ மாறுதல்கள் செய்து அமைத்து கொள்ளலாம் ஆனால் புதியதை உருவாக்கமுடியாது Image styles என்பது உருவப்-படங்களுக்கு ஆனதாகும்
ஸ்லைடு மாஸ்டரை திருத்தம் செய்வதற்காக அதனை திறந்தால் அதில் Title area for AutoLayouts , Object area for AutoLayouts , Date area , Footer area , Slide number area ஆகிய ஐந்து பகுதிகள் இருப்பதை காணலாம்

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    ஜன 22, 2017 @ 06:26:12

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: