ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றாக திறமூல மென்பொருட்களும் உள்ளன

நம்மில் பெரும்பாலானோர் தனியுடைமை பயன்பாடான இந்த ஜிமெயிலைபயன்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த செய்திதான் இதற்கு மாற்றாக இதைவிட சுதந்திரமாக கூடுதலான வசதிகளுடன் ஏராளமான திறமூல கட்டற்ற மின்னஞ்சல் பயன்பாடுகளும் உள்ளன அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு
1.Roundcube என்பது ஒரு தற்காலத்திற்குரிய இணைய மின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கிடும் கட்டற்ற பயன்பாடாகும் இது ஒரு செந்தர LAMP (Linux, Apache, MySQL, and PHP) அடுக்கின்மீது எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இழுத்துசென்று விடுதல் எழுத்துபிழை சரிபார்த்தல் 70 இற்குமேற்பட்ட மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்தல் தயார்நிலையில்உள்ள மாதிரிபலகங்கள் மிகபாதுகாப்பான முகவரி புத்தக ஒருங்கிணைப்பு பயனுள்ளபல விரிவாக்கவசதிகள் செல்லிடத்து பேசியிலும் பயனாளர் இடைமுகப்பு கொள்ளும் திறன் ஆகியபல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டதுஇது GPLv3எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது இதனுடைய இணைய முகவரி https://roundcube.net/ ஆகும்
2. Zimbraகட்டற்ற இணையமின்னஞ்சல் பயன்பாடாகவும் சிறந்த மின்னஞ்சல் சேவையாளராகவும் பயன்படுகின்றதுஇதனை பயன்படுத்தி பல்வேறு வியாபார நிறுவனங்களும் தங்களுக்கென்ற தனியான மின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி கொள்ளமுடியும் இதனைஎளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
பல்வேறு இணைப்புவிரிவாக்க வசதிகளையும் தற்கால மின்னஞ்சல்களின் அனைத்து வசதிகளையும் கொண்டது இதுGPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளதுஇதனுடைய இணைய முகவரி https://www.zimbra.com/ ஆகும்
3.SquirrelMail இது 1999 இலிருந்து பயன்பாட்டில்உள்ள கட்டற்ற இணையமின்ஞ்சல் பயன்பாடாகும் இதனைஎளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதுஒரு சிறந்த மின்னஞ்சல் வசதியை வழங்கும் கருவியாக விளங்குகின்றதுஇது உற்பத்தி சார்ந்த தொழிலகத்தில் மிகஅதிகஅளவு பயன்பாட்டில் இருந்துவருகின்றது
இதுGPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளதுஇதனுடைய இணைய முகவரி http://squirrelmail.org/index.php ஆகும்
4 Rainloop என்பது மிகசமீபத்திய மின்னஞ்சலின் சேவையாளர் வரவாகும் ஜிமெயில் அல்லது இதர வணிகமின்னஞ்சல்களில் எதிர்பார்க்கப்படும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன மின்னஞ்சல்முகவரியை உள்ளீடுசெய்திடும்போது மிகுதி எழுத்துகளை தானாகவே பூர்த்திசெய்தல் இழுத்துசென்றுவிடுதல், விசைப்பலகை இடைமுகம்செய்தல்,வடிகட்டுதலை ஆதரித்தல் போன்ற வணிகமின்னஞ்சல்களில் எதிர்பார்க்கப்படும் பல்வேறு வசதிகளையும் வழங்க தயாராக இருக்கின்றது பொதுமக்களின்Facebook, Twitter, Google, Dropbox போன்றவைகளின் கணக்குகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்திறன்மிக்கது இதனை எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது AGPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது இதனுடைய இணைய முகவரி http://www.rainloop.net/ ஆகும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: