புதியவர்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமையின் கோப்புஅமைவும் கோப்பக கட்டமைவு ம்

கோப்பமைவு(file system) என்றால் பல்வேறு வரையறைகளை அர்த்தங்களை பலரும் பல்வேறு விதமாக கூறுவார்கள் அதனை மனதில் கொண்டு குழப்பமடையவேண்டாம் பொதுவாக லினக்ஸ் இயக்கமுறைமையில்அனைத்து கோப்பகங்களும் ( / ) எனும் மூலக்கோப்பமைவை அடிப்படையாக வைத்தே துவங்கிடும் இதுவே முதன்மையான கோப்பகமாகும் அதற்கடுத்ததாக லினக்ஸ் இயக்கமுறைமையானது EXT3, EXT4, BTRFS, XFS, என்பன போன்ற நூற்றுக்கும் அதிகமானகோப்பு வகைகளை ஆதரிக்கின்றது இவைகள் மிகபழைய கோப்புகளின் வகையிலிருந்து சமீபத்திய கோப்புகளின் வகைவரை பல்வேறு வகைகளில் இருக்கின்றன அதிலும் ஒவ்வொரு கோப்பு அமைவும் தனக்கேயுரிய சொந்த தரவுகளுக்கெல்லாம் தரவான(metadata) விவரங்களை கொண்டிருக்கும்
அடிப்படை கோப்பமைவின் கட்டமைப்பு
இந்த லினக்ஸ் இயக்கமுறைமை கணினியில் கோப்பகளின் கட்டமைவானது முதல் அடிப்படை அடுக்காக வண்தட்டும் அடுத்த அடுக்கில் EXT3, EXT4, HPFS, VFAT, FreeBSD ஆகியவையும் அமைந்துள்ளன அதற்கடுத்த அடுக்கில் virtual File System என்பது அமைந்துள்ளது அதற்கடுத்த மேல் அடுக்காக kernel அமைந்துள்ளது
10

லினக்ஸின் கோப்பக கட்டமைவு
முதலில் ( / ) எனும் மூலக்கோப்பகமும் அதற்கடுத்து /bin என்பதும் அதற்கடுத்து /bootஎன்பதும் அதற்கடுத்து /devஎன்பதும் அதற்கடுத்து /etcஎன்பதும் அதற்கடுத்து /homeஎன்பதும் அடுத்தாக /lib, /media , /usr ,/tmp , /var என்பன போன்றவைகளும் அமைந்துள்ளன பொதுவாக லினக்ஸ் இல்லாத விண்டோ இயங்கிடும் கணினிகளில் C, D,E என்றவாறு இந்த கோப்பகங்கள் வண்தட்டுகளில் பிரிக்கப்பட்டிருக்கும்
லினக்ஸின் கோப்பமைவு
லினக்ஸில் btrfs ,cramfs ,ext2 ,ext3 ,ext4 ,fat ,gfs2 ,hfsplus ,minix ,msdos ,ntfs ,reiserfs ,vfat ,xfs என்றவாறு பல்வேறு வகையான கோப்பமைவு இருக்கின்றன
அதுமட்டுமல்லாது command line interface (CLI) ,SSH,GUI ஆகிய செயல்களை ஆதரிக்கும் வகையில் லினக்ஸ் கோப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    ஜன 19, 2017 @ 06:25:01

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: