USB Not Recognized என்ற செய்தி திரையில் தோன்றினால் என்ன செய்வது

இவ்வாறான நிலையில் உடன் யூஎஸ்பி சாதனத்தை கணினியில் துண்டித்து வெளியில் எடுத்துவிட்டு கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்கவும் மேலும் நம்முடைய கணினி, சாதனங்களை இயக்குவதற்கான மென்பொருட்களை நிகழ்நிலை படுத்திகொள்க நம்முடைய கணினியுடன் விசைப்பலகை, சுட்டி,அல்லது கையடக்க நினைவகம் ஆகியவற்றை சார்ந்த நிலையிலேயே நம்முடைய கணினியின் இயக்கம் இருக்கின்றது எனில் முதலில் இவைகளின் இயக்கத்தை நிறுத்தம் செய்தபின்னர் கணினியுடனான இவைகளின் இணைப்பை துண்டித்துவிட்டு கணினியின் இயக்கத்தையும் நிறுத்தம் செய்திடுக பின்னர் மின்னிணைப்பிற்கான அட்டையை கழட்டி எடுத்தபின்னர் மீண்டும் அதனை செருகியபின் கணினியின் இயக்கத்தை மறுதுவக்கம் செய்திடுக இவ்வாறான நிலையில் யூஎஸ்பி சாதனத்தை துண்டிப்பதற்காக திரையின் கீழே வலதுபுறமூலையில் உள்ளஅம்புக்குறிபோன்று உள்ளதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Disconnect.என்ற வாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதுவக்கம் செய்திடுக அதன்பின்னர் நம்முடைய யூஎஸ்பி சாதனத்தை அதற்கான வாயிலில் பொருத்திடுக
அதற்கு பதிலாக கணினியின் திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ளStart எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியின் தேடிடும் உரைப்-பெட்டியில்Windows Update என தட்டச்சு செய்து கொண்டு Check for Updatesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் விண்டோவின் நிகழ்நிலை படுத்தி கொள்க
அதற்கு பதிலாக கணினியின் திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ளStart எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியின் தேடிடும் உரைப்-பெட்டியில்Device Manager என தட்டச்சு செய்து கொண்டுஉள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் Device Managerஐ தேடிபிடித்து திரையில் தோன்றிட செய்திடும் அதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் என திரையில் காண்பிக்கும் அதனை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் Propertiesஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உரையாடல்பெட்டியில் Driverஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Update Driver எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் யூஎஸ்பி சாதனத்தின் இயக்கும் மென்பொருளை நிகழ்நிலை படுத்தி கொள்ளும்
5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: