எம்எஸ்பெயின்ட் எனும் பயன்பாட்டினை கொண்டுமின்னூலின் மேலட்டையை நாமேஎளிதாக உருவாக்கலாம்

சாதாரண ஆஃபிஸ் பயன்பாடுகளில் எழுத்துகளை பயன்படுத்துவதற்கும் வரைபட பயன்பாட்டில் எழுத்துகளை கொண்டுவருவதற்கும் ஏராளமானவித்தியாசம் உள்ளன அதனால் மின்னூலை உருவாக்குபவர்கள் அந்தமின்னூலின் மேலட்டையை சரியாக உருவாக்காமல் தவறவிட்டுவார்கள்
அதற்காக இந்த எம்எஸ்பெயின்ட் எனும் பயன்பாட்டினை செயல்படுத்தி திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் இந்த திரையின் மேல் இடதுபுறமூலையில் உள்ள பட்டியில் New என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துபுதிய திரையை தோன்றிட செய்திடுக அதன்பின்னர் திரையின் கீழே வலதுபுறமூலையில் உள்ள திரையின் அளவை காட்டிடும் ஸ்லைடரை நகர்த்தி நாம் மேலட்டையை உருவாக்குதற்கேற்ப அமைத்துகொண்டு Shape என்பதில் உள்ள உருவங்களில் ஒன்றினை தெரிவுசெய்து நீள்செவ்வகத்தை நெடுக்கை வசமாக வரைந்து கொள்க பின்னர் color என்பதில் நாம் விரும்பும் பின்புல வண்ணத்தை தெரிவுசெய்துகொண்டு Toolsஎன்பதில் உள்ள வாளி போன்ற கருவியை பயன்படுத்தி நெடுக்கைவசமானசெவ்வகத்தில் நாம் தெரிவுசெய்த வண்ணத்தை நிரப்பிகொள்க அல்லது நாம் விரும்பும் படத்தை நகலெடுத்து கொண்டு வந்து ஒட்டிகொள்க அதன்பின்னர் color என்பதில் நாம் விரும்பும் எழுத்துருவிற்கான வண்ணத்தை தெரிவுசெய்துகொண்டு Toolsஎன்பதில் உள்ளAஎன்ற ஆங்கில எழுத்துரு கொண்டஎழுத்துருவிற்கான கருவியை தெரிவுசெய்து மேலட்டையில் நாம் விரும்பும் தலைப்பை தட்டச்சு செய்திட துவங்கிடும்போது மற்ற பயன்பாடுகளை போன்று எழுத்துருவின் வகையை அதற்கான கீழிறங்கு பட்டியிலிருந்தும் எழுத்துருவின் அளவை அதற்கான கீழிறங்கு பட்டியிலிருந்தும் தெரிவுசெய்து கொண்டு நாம் விரும்பும் தலைப்பை தட்டச்சு செய்திடுக திரையின் மேல் இடதுபுறமூலையில் உள்ள பட்டியலை விரியச்செய்து அதில் Save As என்ற வாய்ப்பினைதெரிவவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Save Asஎனும் உரையாடல் பெட்டியில்Save As எனும் கீழிறங்கு பட்டியலிலிருந்து JPG, PNG, TIFFஆகிய வடிவமைப்புகளில் நாம் விரும்பும் வடிவமைப்பை தெரிவுசெய்து கொண்டு இந்த கோப்பிற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்துகொண்டு Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க இதன்பின்னர் மேலட்டை படத்தினை நாம்மின்னூலாக உருவாக்க விரும்பும் கோப்பின் முதல் பக்கமாக அமைத்துகொள்க
6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: