சமூகவலைதளத்தினால் உருவாகும் நம்முடைய கவணச்சிதறலை தடுத்தல்

தற்போது கட்செவி(வாட்ஸ்அப்) என்றும்,முகநூல் (ஃபேஸ்புக்) என்றும் ,இரகசியம் (ட்விட்டர்) என்றும்,இன்ஸ்டாகிராம் என்றும் பொதுமக்களின் அதுவும் குறிப்பாக கல்லூரிமாணவர்கள் ,அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு கவணச்சிதறலை உருவாக்கி இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பையே இவைகள் தட்டிபறிக்கின்றன. பொதுவாக எதுவும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவைகளை பயன்படுத்துபவர்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையின் பாதையையே தவறவிடுகின்றார்கள் இந்த நிலையில் இவைகளை பயன்படுத்து-வதற்கு குறிப்பிட்ட வரையறை அல்லது கட்டுத்திட்டம் எதுவும் செய்திடமுடியாதா இவைகளை எவ்வாறு கட்டுபடுத்தி நம்முடைய வாழ்வை பாதுகாத்து கொள்வது இவைகளை எவ்வாறு கட்டுபடுத்துவது என ஏங்குபவர்-களுக்காகவே கைகொடுக்க வந்துள்ளது Distract Offஎனும் கூகுள்குரோமின் கூடுதலான நீட்சி பயன்பாடுஆகும். இதனை பயன்படுத்திகொள்ள விரும்புவோர்கள் முதலில் இதனுடைய http://codebite.xyz/distractoff/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க அங்கு உள்ள Get it for Chrome எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்மை இந்த கூகுள்குரோமின் இணைய உலாவி கடைக்கு அழைத்து செல்லும் அதில் இந்த பயன்பாட்டினை தெரிவுசெய்துகொண்டு Add to Chromeஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் இந்த நீட்சி பயன்பாடானது நம்முடைய கணினியின் நிறுவுகை செய்யப்பட்டு குரோம் இணைய உலாவியின் மேலே வலதுபுறமூலையில் DO எனும் உருவப்பொத்தானாக அமர்ந்திருப்பதை காணலாம் பொதுவாக நாம் மிகமுக்கியமான பணிசெய்துகொண்டிருக்கும்போது இவை திரையில் வந்து நம்முடைய கவணச்சிதறலை ஏற்படுத்திடும்போது கூகுள்குரோமின் திரையின் மேலே வலதுபுறமூலையில் உள்ள DO எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Start/Stop, Add this Site, Settingsஆகிய வாய்ப்புகளுடன் விரியும் கீழிறங்கு பட்டியிலில் இவைகளை தடுப்பதற்கு முதலில் Add this Site எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நம்முடைய பணியை முடித்தபின்னர் இதில் உள்ள Startஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த சமூக-வலை-தளத்தினை பயன்படுத்திடுக. போதும் எனும்போது Stopஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த செயலை முடிவிற்கு கொண்டுவருக Settings எனும் வாய்ப்பானது நாம் எந்தெந்த நேரங்களில் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம் என தானியங்கியாக கட்டுபாட்டினை அமைத்து கொள்ளப் பயன்படுகின்றது வாருங்கள் இதனை பயன்படுத்தி நம்முடைய கவணச்சிதலை கட்டுபடுத்தி நம்முடைய வாழ்வை மேம்படுத்திகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: