நம்முடைய தேவைக்கேற்ப மிகச்சரியான கட்டற்ற கணினி மொழியை தெரிவுசெய்திடுக

போட்டிமிகுந்த உலகில் நாமனைவரும் தற்போது வாழ்ந்து வருகின்றோம் அதிலும் தகவல்தொழில்நுட்பமானது அவ்வப்போது மிகவேகமாக மாறிக்கொண்டே வருவதால் தகவல்தொழில் நுட்ப சேவைநிறுவனங்கள் நிரல்தொடர்களை உருவாக்குதல் இணைய பக்கத்தை மேம்படுத்துதல் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துதல் ஆகிய பல்வேறுபணிகளுக்கான மிகத்திறனுடைய நிரலாளர்களை தத்தமது நிறுவனங்களில் தக்கவைத்து தங்களுடைய நிறுவனத்தின் செயலை உறுதி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டற்ற அல்லது வியாபார கணினிமொழிகளை பயன்படுத்தி அவ்வப்போது புதியபுதிய பயன்பாடுகளையும் இணைய பக்கங்களையும் தேவையானவாறு உருவாக்குதலையும் மேம்படுத்துதலையும் செய்கின்றன இந்த மென்பொருட்களுக்கு முதுகெலும்பாகவும் அடிப்படையாகவும் அமைவது மூலக்குறிமுறைவரிகளாகும் இந்த மூலக்குறிமுறை-வரிகளை உருவாக்குவதற்காக ஏறத்தாழ 80 சதவிகிதம் நிறுவனங்கள் கட்டற்ற கணினி மொழிகளையே பயன்படுத்தி வருகின்றனர் என ஆய்வு ஒன்று கூறுகின்றது அவ்வாறான கட்டற்ற கணினிமொழிகளை பற்றிய ஒரு பறவை பார்வையாக இந்த கட்டுரையில் காண்போம்
1.1.கோ(Go) எனும் கட்டற்றமொழி இதனை கூகுள்நிறுவனம் வெளியிட்டு பராமரித்து-வருகின்றது இதில் குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்போதும் பின்னர் செயற்படுத்திடும்போதும் மிகத்திறனுடனும் வெளிப்-படைத்தன்மையுடனும் செயல்படுகின்றது இது சி மொழியை போன்றதன்மையுடன் மிகச்சிறப்பாக நமக்கு உதவுகின்றது . இதனுடைய சமீபத்திய பதிப்பு 1.6.3 ஆகும் இதனை கொண்டு மிகவிரைவாக இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடலாம் அதனை தொடர்ந்து உருவாகும் செயலிகோப்பின் செயல்வேகமானது மிகவிரைவாக அமைகின்றது இதுஒரு மேம்பட்டமொழியாகும் இதனை பயன்படுத்திடும்போது நமக்கு ஏதேனும் பிரச்சினை உருவானால் அதனை உடனுக்குடன் சரிசெய்துஉதவுவதற்கு இணையத்தில் தனியாக குழுவொன்று எப்போதும் தயாராக உள்ளது
இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
package main
import “fmt”
func main(){
fmt.printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.2 ஸ்விப்ட்(Swift) இது ஒரு பொதுநோக்கு IOS, OSX, Linuxபோன்ற பல்வேறு இயக்கமுறைகளிலும் பல்வேறு சூழலிலும் செயல்படும் திறன்கொண்ட கட்டற்ற கணினிமொழியாகும் இது ஆப்ஜெக்ட் சி, சி மொழிபோன்ற திறனுடன் செயல்படும் திறன்கொண்டது இதனுடைய சமீபத்திய பதிப்பு 3.2 ஆகும் இதனை மிகஎளிதாக கற்று இதில் நிரல்தொடர்கட்டளைவரிகளை மிகவிரைவாக எழுதிடமுடியும் ஏனெனில் இதில்மிககுறைந்த கட்டளைவரிகளே இருப்பதால் மிகவிரைவாக உருவாக்கமுடியும் இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்வதும் பிழைஇல்லாமல் உடனுக்குடன் சரிசெய்வதில் மிகஎளியதாக உள்ளது
இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
Import Cocoa
/* My first program in Swift*/
var mystring = “அனைவருக்கும் வணக்கம்!”
printIn(mystring)
1.3 ஹெக்(Hacke) இது ஒரு பொதுபயன்பாட்டு கட்டற்றகணினிமொழியாகும் இதனை முகநூல் நிறுவனத்தால் பிஹெச்பியின் மெய்நிகர் கணினிக்காக உருவாக்கப்பட்டதொரு கணினி மொழியாகும் இது ஹெச்டிஎம்எல்லுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனுடன் இணையமேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கணினிமொழியாகும் இதனுடைய குறிமுறை வரிகளானது பிஹெச்பியின் குறிமுறை வரிகளுடன் கலந்து உருவாக்கப்படுவதாகும் இதுமிகசிக்கலான இணைய பக்கங்களையும் மிகவிரைவாக பாதுகாப்பாக செயல்பட செய்திடும் திறன்மிக்கது இதனுடைய மாதிரி நிரல்தொடர்-குறிமுறைவரிகள் பின்வருமாறு
Hhvm -m server -p 8080
<?hh
Echo “அனைவருக்கும் வணக்கம்!”;
1.4ரஸ்ட்(Rust) இதுவும் ஒரு பொதுபயன்பாட்டு பல்திறன்வாய்ந்த கட்டற்றகணினி மொழியாகும் இது மிகப்பாதுகாப்பாகவும் நிலைத்தன்மையுடனும் உள்ள பயன்பாடுகளை உருவாக்கபயன்படுகின்றது. இது மிகபுத்திசாலித்தனமுள்ள கணினிமொழியாகும் இது விண்டோ, ஆண்ட்ராய்டு போன்ற அனைத்து தளங்களிலும் செயல்படும் தன்மைகொண்ட பயன்பாடுகளை உருவாக்க உதவுகி்ன்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு 1.10 ஆகும் இதனுடைய மாதிரி நிரல்தொடர்-குறிமுறைவரிகள் பின்வருமாறு
fn main() {
printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.5.ஸ்கேலா(Scala) இதுவும் ஒரு பொதுபயன்பாட்டு கட்டற்றகணினி மொழியாகும் இது ஜாவாவை போன்ற மிகமேம்ப்பட்ட திறனுடைய கணினிமொழியாகும் ஜாவாவைவிட குறைந்த கட்டளைவரிகளையும் நாம் படிப்பதற்கு எளிய நேரடி கட்டளை சொற்களை கொண்டதாகும் இதுமிகவிரைவாக செயல்படக்கூடியதாகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு 2.11.8 ஆகும்இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
object HelloWorld extends App{
printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.6டார்ட்(Dart) இது ஒரு இனஅடிப்படையிலான பொருள்நோக்குபொதுப்பயன்பாட்டு கட்டற்ற மொழியாகும் இது புதியசமீபத்திய இணையபக்கங்களைஉருவாக்குவதற்கான மிகச்சிறந்த கணினிமொழியாகும் இது mixins, inplicit interfce, lexicalclosure, lexical this, named constructions, string interpolation, online fucntion ஆகியபல்வேறு வசதிகளை கொண்டதாகும் இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு

void main() {
print(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.7.ஹேஸ்கல்(Haskel) இதுஒரு புதிய செந்தர கடுமையற்ற செயலிநிரல் தொடர்கணினி மொழியாகும் இதுஒருமிகவலுவானநிலையான வகையைசேர்ந்ததாகும் இதுசமீபத்திய மேம்படுத்துதல்கள் அனைத்தும் தன்னகத்தே கொண்டுள்ளது இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
module Main where
main : : IO ( )
main = pustrLn “அனைவருக்கும் வணக்கம்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: