வாருங்கள் அப்இன்வென்டர் 2 ஐ கொண்டு நம்முடைய சொந்த இணைய தரவுதளத்தினை உருவாக்கலாம்

இதற்காக ஃபயர்பேஸ் தரவுதளத்தினை அடிப்படையாக எடுத்துக் கொள்கின்றோம் அதனை பற்றிய ஒரு அறிமுகம் ஃபயர்பேஸ் தரவுதளமானது ஒரு வரைகலையை அடிப்படையாக கொண்ட தரவுகளின் மையமாக விளங்குகின்றது. அதனால் தரவுகள்தொடர்பான அனைத்து உள்ளீடுகளும் இதன்வாயிலாக நம்மால் செய்துகொள்ளமுடியும் இது மேககணினியின் அடிப்படையில் செயல்படுவதால் எந்தவொரு சாதனத்திலிருந்தும் இதனை அனுக முடியும். மேலும் பயனாளர்களுள் அத்தாட்சி பெற்றவர்கள்மட்டுமே இதனை அனுகமுடியும் என்பதால் இது மிக பாதுகாப்பாக அனுகுவதற்கான அடிப்படையை பெற்றுள்ளது . இதிலுள்ள தரவுகளை மற்ற நன்பர்கள் உறவினர்கள் ஆகியோருடன்பகிர்ந்து கொள்ளமுடிவதால் அனைவரும் இந்த தரவுதளத்தினை எளிதாக அனுகமுடியும் இதில் தனியாக தரவுகளை பெறுவதற்கென்றும் அடுக்குவதற்கென்றும் குறிமுறை கட்டளைவரிகள் எதுவும் எழுதத்தேவையில்லை
ஃபயர்பேஸ் தரவுதளத்தில் புதிய செயல்திட்டத்தினை உருவாக்குதல்
இந்த தளத்தினை பயன்படுத்திகொள்வதற்காக நமக்கு ஏற்கனவே கூகுளை பயன்படுத்திடும் கணக்கு ஒன்று இருக்கவேண்டும் முதலில்https://console.firebase.google.com/ என்ற இணைய தளமுகவரிக்கு செல்க பின்னர் கூகுள் கணக்கின் அடிப்படையான விவரங்களை உள்ளீடுசெய்து இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்திடுக தொடர்ந்த தோன்றிடும் திரையில்கூறும் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றிடுக அதன் பின்னர்விரியும் திரையில் Create New Projectஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்திடுக. பின்னர் விரியும் திரையில் இந்த புதிய செயல்திட்டத்திற்கென ஒரு பெயரினை உள்ளீடு செய்திடுக அதனை தொடர்ந்து புதிய செயல்திட்டம் திரையில் தோன்றி நம்மை வரவேற்றிடும் அதன்பின்னர் இந்த திரையின் இடதுபுறபலகத்தின் Database என்பதைதெரிவுசெய்தபின்னர் விரியும்திரையில் Rules என்பதைதெரிவுசெய்திடுக இந்த தரவுதளத்தினை அனைவரும் அனுகுவது போன்று இந்த Rulesஇல் மதிப்புகளை மாற்றியமைத்திட்டு Publishஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இப்போது நம்மால் நம்முடைய புதிய செயல்திட்டத்திற்காக காலியானதொரு தரவுதளத்தினை இந்த ஃபயர்பேஸ் தரவுதளத்தினை வெற்றிகரமாக உருவாக்கி விட்டோம்
அடுத்ததாக நம்முடைய தரவுதளத்தினை எவரும் அனுகுமுன் SignUp எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் அவரை பற்றிய விவரங்களையும் உள்ளீடு செய்தபின்னர் அவருக்கு என தனியான அனுமதிஎண் ஒன்றினை உருவாக்கி அளித்தபின்னரே அனுமதிக்கவேண்டும்
இதற்காக இதன் முதல்படிமுறையாக வரைகலைபயனாளர் இடைமுகம்(GUI) என்பதை அமைவுசெய்திடவேண்டும்தொடர்ந்து Label, Button,Horizontal Arrangement,Notifier,FirebaseDB ஆகிய இந்த பயன்பாட்டிற்கு தேவையான உள்ளுறுப்புகள் தேவையாகும் இவைகளை பிடித்து இழுத்துவந்து நம்முடைய புதிய செயல்திட்டபகுதியில் விட்டிட்டு அவைகளை சரிசெய்து அமைத்து அ்வைகளுக்கு தேவையான பண்பியல்களை அமைத்து பெயர்களை மாற்றியமைத்திடுக
இதன்பின்னர் பயனாளர் தங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்வதற்கான உரைபெட்டியை அதற்கான பெயரையும் அமைத்திடுக அதனை தொடர்ந்து பயனாளர் தங்களைபற்றிய விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு SignUp எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் அவரால் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சேமிக்கபடுவதுடன் அவருக்கென தனியான அடையாள எண் உருவாக்கி ஒதுக்கீடு செய்திடவேண்டும் இந்த அடையாள எண் Notifier எனும்பகுதியில் காண்பிக்கப் படவேண்டும் இதற்காக பிளாக் எடிட்டர் எனும் பகுதிக்கு சென்று அதன் இடது புறபலகத்தில் இருந்து பயனாளர் உள்ளீடு செய்வதற்கான உரைபெட்டிகளை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்துவந்து விட்டிடுக இதனை தனியானதொரு கோப்பகமாக இந்த தரவுதளம் பராமரித்திடும்
தொடர்ந்துSignUp எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்ததிடுக பின்னர் build எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த பயன்பாடு நம்முடைய கணினியில் பதிவிறக்கம் ஆகும்இந்த பயன்பாட்டினை தனியானதொரு கோப்பகத்தில் வைத்திடுக SDஅட்டையை நிறுவுகை செய்வதன் வாயிலாக இந்த பயன்பாட்டினை செயல்படுத்திடுவதற்கான apk எனும் கோப்பினை வைத்திடவேண்டும் அதனை செயல்படுத்தியவுடன் தோன்றிடும்SDஅட்டையை நிறுவுகை செய்வதற்கான திரையில் கூறும் அறிவுரைகளை பின்பற்றிடுக உடன் ஒரு உருவபொத்தானுடன் நம்முடைய பயன்பாடு அமைந்திருக்கும் அதனை செயல்படுத்தி சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: