சேவையாளர் கணினியை நிருவகிப்பதற்காக Salt Stack எனும்கட்டற்ற கருவியை பயன்படுத்திகொள்க

முன்பெல்லாம் கணினியின் அமைவை நிருவகிப்பதற்காக ஒவ்வொரு சேவையாளர் கணினிக்கும் நேரடியாக சென்று அதில் தேவையான பயன்பாட்டினை தனித்தனியாக நிறுவுகை செய்து கட்டமைவு செய்திடவேண்டும் இவ்வாறான நிலையில் கணினியின் அமைவை நிருவகிப்பது என்பது அதிககாலவிரையமும் அதிக கடிணமான பணியாகவும் இருந்துவந்தது அதன்பின்னர் Secure Shell(SSH)என்தன் அடிப்படையில் எங்கிருந்தும் கணினியின் அமைவை நிருவகிப்பதற்காக கட்டுப்படுத்தலாம் என மாறியபின்னர் சிறிது பளு குறைந்தாலும் ஒவ்வொரு சேவையாளர்கணியிலும் தேவையான பயன்பாட்டினை தனித்தனியாக நிறுவுகை செய்து கட்டமைவு செய்திடவேண்டும் என்ற நிலையே தொடர்ந்துவந்தது தற்போதைய மேககணினி எனும் புதிய மாறிய சூழலில் மிக எளிதாக ஒரேசமயத்தில் அனைத்து சேவையாளர் கணிணியையும் ஒரே கட்டளைவரிவாயிலாக தானியங்கியாக செயல்பட்டு தேவையான பயன்பாட்டினை நிறுவுகை செய்து கட்டமைவு செய்து கொள்ளலாம் என்ற வசதிக்கு மேம்படுத்தப்பட்டு விட்டது இதற்காக Salt Stack, Pubbet, Chef போன்ற கட்டற்ற கருவிகள் பயன்படுகின்றன அவற்றுள் இந்த Salt Stack ஆனது பைத்தான் மொழியால் உருவாக்கப்பட்ட கணினியின் அமைவை நிருவகிப்பதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும் இது பயன்படுத்துவதற்கு ஒரு எளிய ஆனால் மிகத்திறனுடைய கணினியின் அமைவை நிருவகிப்பதற்கான மிகச்சிறந்து கட்டற்ற கருவியாகும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான சேவையாளர் கணினியை ஒருசில நொடிகளிலேயே செயல்டபடுத்தி கட்டுபடுத்திடமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் https://docs.saltstack.com/en/latest/topics/installation/ எனும் முகவரிக்கு சென்று அங்கிருந்துSaltMasterஎன்பதைசேவையாளர் கணினிக்காகவும் SaltMinion என்பதைவாடிக்கையாளர் கணினிக்காகவும் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க இதன்பின்னர் Pingஎனும் பரிசோதனை இயக்கத்தை சரிபார்த்து பாதுகாப்பிற்கான Firewall அமைவையும் சரிபார்த்து கொள்க இதன்பின்னர் பல சேவையாளர் கணினிகளை எளிதாக கட்டுபடுத்தி நிருவகிக்கமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: