லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-62-ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுதலும் ஆய்வுசெய்தலும்

லிபர் ஆஃபிஸின் ரைட்டர், இம்ப்பிரஸ்,ட்ரா ஆகிய பயன்பாடுகளின் ஆவணங்களை ஒருசமயத்தில் ஒரேயொரு பயனாளர் மட்டுமே திறந்து பணிபுரிய முடியும். ஆனால் இந்த கால்க் விரிதாளினை ஒரேசமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனாளர்கள் திறந்து பணிபுரியமுடியும் என்ற கூடுதலான வசதியை கொண்டதாகும் இதற்காக ஒவ்வொரு பயனாளியும் Tools => Options => LibreOffice => User Data page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில் தங்களுடைய பெயரை உள்ளீடு செய்துகொள்ளவேண்டும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் விரிதாளினை திறந்து பணிபுரிந்திடும்போது ஒருசில கட்டளைகள் செயற்படுத்திட முடியாது அவைகள் சாம்பல் வண்ணத்தில் தோன்றிடும்
இவ்வாறு நம்முடைய கால்க்கின் விரிதாளினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு செயலில் இருக்குமாறு செய்திட Tools => Share Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Share Document என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Share this spread sheet with other users என்ற தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

62-1
62.1

உடன் இந்த விரிதாளானது ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்தால் தற்போது பகிர்ந்தளிக்கும் நிலை செயலில்(activate shared mode) இருப்பதாக செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிநமக்கு அறிவிப்ப செய்திடும் அதில் yesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறு ஏற்கனவே சேமிக்காத விரிதாள் எனில் உடன் இந்த விரிதாளின் பெயரானது (shared) என்ற சொல்லுடன் சேர்ந்து சேமிக்கப்படும்
பொதுவாக இவ்வாறான பகிர்ந்தளிக்கும் விரிதாளில் பணிபரியும்போது Tools => Share Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தனிப்பட்ட பயனாளர் மட்டும் பணிபுரியும் நிலையிலும் தனிப்பட்ட நபர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது இந்த கட்டளைகளை செயற்படுத்தினால் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் பணிபரியக்கூடிய பகிர்ந்தளிக்கும் நிலையிலும் மாறியமையும் .ஆயினும் பகிர்ந்தளிக்கும் நிலையில் உள்ள ஆவணத்தை பகிர்ந்தளிக்காத நிலையில் பயன்படுத்திட விரும்பினால் முதலில் இந்த விரிதாளிற்கு வேறொரு பெயரிட்டு அல்லது வேறொரு இடத்தில் சேமித்து வைத்தபின் பணிபுரியவேண்டும்
இவ்வாறு பகிர்ந்தளிக்கும் நிலையில் ஒரு விரிதாளினை திறந்து பணிபுரிய முனையும்போது செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி இந்த ஆவணம் பகிர்ந்தளிக்கும் நிலையில் திறந்து இருப்பதாகவும் ஒரு சில செயலிகளை அல்லது கட்டளைகளை செயற்படுத்தி கொள்ளமுடியாது என்றும் நமக்கு அறிவிப்பு செய்திடும் அதில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய பணியை தொடரலாம் .
இந்த ஆவணம் பகிர்ந்தளிக்கும் நிலையில் திறந்திருந்தால் பின்வரும் கட்டளைகள் செயற்படுத்திடமுடியாது
1.Edit => Changes=>, (Merge Documentஎன்ற வாய்ப்பினை தவிர),2.Edit => Compare Document=>, 3.Edit => Sheet => Move/Copy & Delete=>, 4.Insert => Cells => Shift Cells Down & Shift Cells Right=>,5.Insert => Sheet from file=>,6.Insert => Names=>,7.Insert => Comment=>,8.Insert => Picture => From File=>,9.Insert => Movie and Sound=>, 10.Insert => Object=>,11.Insert => Chart=>,12.Insert => Floating Frame,=>13.Format => Sheet => Rename, Tab Color=> ,14.Format => Merge Cells => Merge and Center, Merge Cells, Split Cells=> ,15.Format => Print Ranges=>, 16.Tools => Protect Document=>, 17.Data => Define Range=>,18.Data => Sort=> ,19.Data => Subtotals=>, 20.Data => Validity=>, 21.Data => Multiple Operations=>, 22.Data => Consolidate=> ,23.Data => Group and Outline (all)=> ,24.Data => Pivot Table=>.
லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளினை பகிர்ந்தளிக்கும் நிலையில் பணிபுரிந்தபின் சேமிக்க முனையும்போது
1நாம் திறந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது மற்ற பயனாளர் இந்த விரிதாளினை திறந்துள்ளார் ஆனால் திருத்தம் செய்திடவோ சேமித்திடவோ செய்யாத நிலையில் விரிதாளானது சேமிக்கப்படும்
2. நாம் திறந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது மற்ற பயனாளரும் இந்த விரிதாளினை திறந்து திருத்தம் செய்துகொண்டும் சேமித்துகொண்டும் இருந்தால்
2..1.ஒன்றுக்கொன்று முரண்படாத நிலையில் your spreadsheet has been updated with changes saved by other usersஎன்ற செய்தியுடன் செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நம்முடைய பணியை தொடரலாம் ஆயினும் மற்ற பயனாளரால் திருத்தம் செய்த கலணானது சிவப்புவண்ண சுற்றுக்கோட்டுடன் தோன்றிடும்
2.2 ஒன்றுக்கொன்று முரண்பட்ட (conflict),நிலையில் Resolve Conflictsஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் உடன் ஒவ்வொரு முரண்பாட்டையும்keep mine, keep others, keep All mines keep All others ஆகிய பொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்தபின்னர் இந்த விரிதாளானது சேமிக்கப்படும்
3 நாம் திறந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது மற்றொரு நபரும் இவ்வாறே இதே விரிதாளினை சேமித்திடமுயலும்போது தோன்றிடும் முரண்பட்ட (conflict),நிலையில் Resolve Conflictsஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் உடன் ஒவ்வொரு முரண்பாட்டையும்keep mine, keep others, keep All mines keep All others ஆகிய பொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்தபின்னர் இந்த விரிதாளானது சேமிக்கப்படும்
62-2
62.2

பகிர்ந்தளிக்காத நிலையில் விரிதாளில் மாறுதல்களைசெய்தபின்னர் அதனை திறந்து ஆய்வு செய்திடும்போது அம்மாறுதல்களை ஏற்கலாம்(accept)அல்லது மறுத்திடலாம் (reject)
விரிதாளினை பகிர்ந்தளிக்கும் நிலையில் இந்த விரிதாளினை நகல் கோப்பில் திறந்து உண்மை கோப்புடன் ஒப்பீடு செய்து சரிபார்த்திடலாம்
பகிர்ந்தளிக்கும் நிலையில் ஒவ்வொருவரும் சேமித்திடும்போதும் கோப்பிற்கு ஒவ்வொரு பதிப்பெண்ணுடன்(version) சேமித்திடும்
இவ்வாறான பகிர்ந்தளித்திடும்விரிதாளினை திருத்தங்களை ஆய்வுசெய்திடுமாறு மற்றவர்களுக்கு அனுப்பிடும்போது இந்த ஆவணத்தினை கடவுச்சொற்களுடன் அனுப்புவது நல்லது அதனை தொடர்ந்து அந்த விரிதாளினை ஆய்வுசெய்து செய்யப்பட்ட திருத்தங்களை ஏற்கலாம்(accept)அல்லது மறுத்திடலாம் (reject)
இவ்வாறான ஆய்வின்போது Edit => Changes => Record=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மாறுதல்களை பதிவுசெய்து கொள்வது நல்லது அதும்ட்டுமல்லாது File => Properties => Security=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Record changesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
அதற்கு பதிலாக Edit => Changes => Protect Records=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் கடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதும்ட்டுமல்லாது File => Properties => Security=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Protectஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் கடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
விரிதாளானது பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் ஆவணங்களை நகலெடுத்து பயன்படுத்துவதை சரிபார்ப்பதற்காக File => Properties => Description=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துதலைப்பு பட்டையில் கோப்பின் பெயரை பிரதிபலிக்குமாறு செய்திடுக
மாறுதல்களை பதிவுசெய்வதை ஒரு எடுத்துகாட்டுடன் பார்த்திடுவோம் பயனாளர் ஒருவர் தமக்கு தேவையான பொருட்களின்பட்டியலையும் அவற்றிற்கான செலவுகளுடன் பகிர்ந்தளிக்கபடும் நிலையில் விரிதாளினை அனுப்பிவைக்கின்றார் பெறுபவர் Edit => Changes => Record=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரிதாளில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கையை அல்லது விலையை மாற்றியமைத்திடும்போது மாற்றியமைத்த கலண்கள் சிவப்புவண்ண சுற்றுக்கோடுகளுடன் தோன்றிடும்இந்த மாறுதல்களின் வண்ணத்தை தேவையெனில் மாற்றியமைத்திட Tools => Options => LibreOfficeCalc => Changes=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையிள் தேவையான வண்ணத்தை குறிப்பிடுக .உடன் அனுப்பியநபர் குறிப்பிட்ட கலண் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்வார்.
இவ்வாறு மாறுதல்களை செய்திடும்போது அதற்கான காரணத்தையும் அனுப்பிய நபர் தெரிந்து கொண்டால் நல்லது என கருதுவோம் இந்நிலையில் மாறுதல்கள் செய்திடும் கலணில் இடம்சுட்டியை வைத்து Edit => Changes => Comments=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் insert commentsஎன்ற உரையாடல் பெட்டியில் Textஎனும் உரைபெட்டியில் தேவையான கருத்துகளை உள்ளீடு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் கருத்துரைகளை உள்ளீடு செய்த கலணின்மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்தால் குறிப்பிட்ட கலணின் நாம் உள்ளீடு செய்த கருத்துரைகள் பிரதிபலித்திடும் இந்த கருத்துரைகளை Edit => Changes => Comments=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து தேவையெனில் மேலும் திருத்தம் செய்து கொள்க
விரிதாளினை உருவாக்குபவரும் அதனை ஆய்வு செய்பவரும் தங்களுக்குள் கருத்துகளை கால்க்கின் விரிதாளில் பரிமாறிகொள்ளமுடியும்இதனை குறிப்புகள் (notes)எனக்கூறுவர் இதற்காக தேவையான கலணை தெரிவுசெய்து கொண்டு Insert => Comment=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Insert =>Comment=> என்ற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரைப்பெட்டியில் தேவையான கருத்துரைகளை உள்ளீடு செய்து கொண்டு அந்த உரைப்பெட்டிக்கு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் இந்த கருத்துரை உள்ள கலண் மட்டும் சிறிது வித்தியாசமான சிவப்பு வண்ணசிறு கட்டமாக தோன்றிடும் Tools => Options => LibreOffice => Appearance=>.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து தேவையெனில் இதனுடைய வணணத்தையும் மாற்றி யமைத்து கொள்ளலாம்
இவ்வாறான கருத்துரைகளை திருத்தம் செய்வதற்காக தேவையான கலணை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Show commentஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கருத்துரைகளை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு கருத்துரைகளை திருத்தம் செய்தபின்அந்த உரைபெட்டிக்கு வெளியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக
இந்த கருத்துரையை திரையில் தோன்றிடாமல் மறைத்திடுவதற்காக தேவையான கலணை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Show commentஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
பொதுவாகஇந்த கருத்துரைகள் இருக்கும் கலணின் மீதுசிறிய கூட்டல்குறி அல்லதுஅம்புக்குறி போன்று இருப்பதை கொண்டு குறிப்பிட்ட கலணில் கருத்துரை உள்ளது என தெரிந்து கொள்ளலாம்
விரிதாளினை பகிர்ந்தளிக்கும் நிலையில் மற்ற பயனாளர்கள் திருத்தம்ஏதும் செய்தனரா என காண்பதற்கும் ஆய்வுசெய்வதற்கும் Edit => Changes => Show=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Show Changesஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Show Changes in spread sheet என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

62-3
62.3
உடன் செய்த மாறுதல்கள் விரிதாளில் பிரதிபலிக்கும் அவற்றை ஆய்வுசெய்தபின்னர் Edit => Changes => Accept or Reject => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Accept or Reject Changesஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Accept , Reject Accept All ,Reject All ஆகிய பொத்தான்களில் தேவையான பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக
இவ்வாறு திருத்தம் செய்த ஆவணங்களை ஒன்றாக ஒன்றிணைத்திட திருத்தத்திற்கு முந்தைய ஆவணத்தை திறந்து கொண்டு Edit => Changes => Merge Document=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் file selectionஎனும் உரையாடல் பெட்டியில் திருத்தம் செய்த கோப்பினை தெரிவுசெய்து கொண்டுokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதனை தொடர்ந்துAccept or Reject Changesஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Accept , Reject Accept All ,Reject All ஆகிய பொத்தான்களில் தேவையான பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக அனைத்து திருத்தங்களும் தனித்தனிவண்ண சுற்றுக்கோடுகளுடன் விரிதாள் தோன்றிடும் திருத்தங்கள் அனைத்தையும்ஏற்பதாயின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

62-4
62.4

ஒருசில நேரங்களில்ஆய்வாளர்கள் தங்களுடைய மாறுதல்களை பதிவுசெய்திடாமல் விட்டிடுவார்கள் இந்நிலையில் இந்த விரிதாட்களை ஒப்பீடுசெய்து சரிபார்த்திடலாம் இதற்காக திருத்தப்பட்ட ஆவணத்தில் Edit => Compare Document=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் open documentஎனும் உரையாடல் பெட்டியில் திருத்தம்செய்வதற்கு முந்தைய ஆவணத்தை தெரிவுசெய்து கொண்டு Insert என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதனை தொடர்ந்துAccept or Reject Changesஎன்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிடசெய்து அதில் Accept , Reject Accept All ,Reject All ஆகிய பொத்தான்களில் தேவையான பொத்தானைமட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
ஏற்கனவே இருக்கும் விரிதாளும் வேண்டும் மாற்றம் செய்தபின்னர் உள்ள விரிதாளும் வேண்டும் என்ற நிலையில் அதே கோப்பின் பதிப்பெண்ணை மாற்றி சேமித்திடவேண்டும் இதற்காக File => Version=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் உரையாடல் பெட்டியில் Save New Versionஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதனை தொடர்ந்து விரியும் உரையாடல் பெட்டியில்இந்த புதிய பதிப்பெண் கோப்பினை பற்றிய கருத்துரையை பார்வையிடுபவ்ரகளுக்கு புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளீடு செய்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் பழைய கோப்பும் புதிய கோப்பும் ஒன்றாக சேர்ந்து அதே பெயரில் புதிய பதிப்பெண்ணுடன் சேமிக்கப்படும்
அதன்பின்னர் File => Versions=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது தேவையான கோப்புகளை தெரிவுசெய்து கொண்டுCompareஎனும் பொத்தானை தெரிவுசெய்து இரு கோப்பகளை ஒப்பீடு செய்வது தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Openஎனும் பொத்தானை தெரிவுசெய்தபின்னர் தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Showஎனும் பொத்தானை தெரிவுசெய்து அதற்கான கருத்துரைகளை காண்பது ஆகிய செயல்களை செய்திடலாம்
62-5
62.5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: