ஒரேயொரு செல்லிடத்து பேசியின் பயன்பாட்டினை உருவாக்குவதுஎன்பது மிக எளிதான செயலாகும் ஆனால்இ ந்த செல்லிடத்து பேசிகளில் செயல்படும் ஆண்ட்ராய்டு ,ஐஃபோன், விண்டோ ஆகிய ஒவ்வொரு தளமும் தனக்கே உரிய தனித்தனியான தொகுதியான சொந்த கருவிகளையும் மொழிகளையும் IDEகளையும் ஆண்ட்ராய்டிற்கு ஜாவா, ஆப்பிளிற்கு எக்ஸ்கோடு, விண்டோவிற்கு விண்டோ எஸ்டிகே என்றவாறு கொண்டுள்ளன அதனால் நாம் உருவாக்கிய இந்த பயன்பாட்டின் அதே குறிமுறை-வரிகளைகொண்டுஆண்ட்ராய்டு ,ஐஃபோன், விண்டோ ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்படுமாறு செய்வது என்பதுதான் மிகசிக்கலான கடினமானபணியாகும் ஆயினும் பல்வேறு கட்டற்ற வரைச்சட்டங்களும் அல்லது கருவிகளும் ஒருமுறை எழுதிய அதே குறிமுறைவரியை கொண்டு Ui/Ux இன் பகுதியாக HTML CSS ஆகியவற்றை பயன்படுத்தி செல்லிடத்து பேசியின் அனைத்து தளங்களிலும் செயல்படுமாறு அமைத்து கொள்ள உதவுகின்றன அவ்வகையில் Ionicஎனும் கட்டற்ற வரைச்சட்டம் ஆனது HTML5 , JS,CSS ஆகியவற்றின் துனையுடன் Ui/Ux இன் அடிப்படை உறுப்புகளை கொண்டு ஒருமுறை எழுதிய அதே குறிமுறைவரியை செல்லிடத்து பேசிகளின் அனைத்து தளங்களிலும் செயல்படும் வண்ணம் உருவாக்கிட உதவுகின்றது இது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமை கணினியிலும் செயல்படும் வல்லமை கொண்டதாகும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக http://ionicframework.com/ எனும் இணைய தளத்திலிருந்து இந்த பயன்பாட்டு கருவியை பதிவிறக்கம் செய்து கொள்க முதலில் இதனுடைய மாதிரி செயல்முறை குறிமுறைவரியை செயல்படுத்தி பார்த்தபின்னர் நீங்கள் விரும்பும் செல்லிடத்து பேசியின் பயன்பாடுகளை உருவாக்கி பயன்படுத்தி கொள்க
செல்லிடத்து பேசி பயன்பாடுகளை உருவாக்கஉதவும் Ionicவரைச்சட்டம் ஒரு அறிமுகம்
14 அக் 2016 பின்னூட்டமொன்றை இடுக
in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)
Advertisements