இணைய தளபக்கங்களை வடிவமைத்திட பயன்படும் Dreamweaver எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றாக கட்டற்ற பயன்பாடுகள் உள்ளனவா?

ஆரம்பகாலத்தில் இணையத்தின் இணைய பக்கங்களை வடிவமைப்பு செய்வது என்பது HTML ,CSS ஆகியவற்றின் உதவி கிடைப்பதற்கு முன்பு கைகளால் உருவாக்கிடும் மிகவும் கடினமான பணியாக இருந்துவந்தது ஆயினும் சில வடிவமைப்பாளர்கள் துவக்கநிலை HTML இன் கோப்புகளை கையாளத் தேவையான அதிக திறமை இல்லாததால் அதனை கொண்டு நாம் திரையில் என்ன காண்-கின்றோமோ அதனை மட்டுமே பெறமுடியும் (what you see is what you get) என்பதை சுருக்கமாக WYSIWYG என அழைக்கபடுவதற்கேற்ப வடிவமைத்து வெளியிட்டனர் அதனை தொடர்ந்து CoffeeCup, HotDog, FrontPage, GoLive என்பன போன்ற இணைய பக்கங்கள் அனைத்தும் இந்த WYSIWYG என்ற அடிப்படையில் உருவாக்கபட்டவையாக இருந்தன அதன்பின்னர் Dreamweaver எனும் தனியுடைமை கருவிப்பயன்பாடு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தபோது இது WYSIWYG என்ற அடிப்படை மட்டுமல்லாது HTML,CSS ஆகியவற்றின் பயன்களை முழுவதும் நேரடியாக பயன்படுத்தி மாதிரி பலக-கட்டுப்பாட்டாளராகவும் கோப்புகளின் சிறந்த நிருவாகியாகவும உள்ளடக்க மேலாண்மையாளராகவும் விளங்கி இணைய பக்கங்களை வடிவமைத்திடும் வடிவமைப்பாளரின் உற்ற நண்பனாக இருந்து வருகின்றது இணையபக்கங்களின் உள்ளடக்க மேலாண்மையில் Drupal ,Wordpress ஆகியவை மிகச்சிறப்பாக விளங்குகின்றன இவ்வாறான உள்ளடக்க மேலாண்மை எனும் வசதியானது கைகளால் எழுதி உருவாக்கப்படும் HTML இன் குறிமுறைகளை அறவே தவிர்க்கின்றது தற்போது ஒவ்வொரு பயன்பாட்டு மென்பொருளும் சேவைப்பயன்பாடாகவும் , ஒவ்வொரு சமூகவலைதளசேவையும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளும் இந்த HTML,CSS ஆகியவற்றின் உள்ளடக்க மேலாண்மையின் அடிப்படையில் செயல்படுகின்றன ஏராளமான செந்தரமான நூலகங்களும் இணயபக்கங்களின் மேன்மைபடுத்திடும் பயன்பாடுகளும் பல்வேறு வகையில் இருந்தாலும் இவைகளைகொண்டு குறிமுறைவரிகளின் வாயிலாக இணைய பக்கங்களை வடிவமைத்திடும் செயலைமுற்றாக தவிர்க்க முடியாத நிலையில் இருந்துவருகின்றோம் இவ்வாறானபல்வேறு வசதி வாய்ப்புகளை வழங்கிடும் Dreamweaver எனும் தனியுடைமை கருவிப்பயன்பாட்டிற்கு மாற்றாக கட்டற்ற பயன்பாடுகள் உள்ளனவா என தேடுபவர்களுக்கு உதவுவதற்காகவே பின்வரும் கட்டற்ற பயன்பாடுகளும் இணையபக்கங்களை வடிவமைப்பதற்கு தயாராக உள்ளன என்ற செய்தியை மனதில் கொள்க
1 Aptana Studio என்பது ஒரு கட்டற்ற இணைய வடிவமைப்புகருவியாகும் இது இணைய பக்கங்களை வடிவமைப்பதில் மேம்ப்பட்ட IDEஐபயன்படுத்தி கொள்கின்றது இது HTML , CSS ஆகியவற்றின் துனையுடன் code coloring , completion, debugging, outlining ஆகிய பல்வேறு பணிகளை எளிதாக செயற்படுத்திடுகின்றது இது சிக்கலான இணைய பயன்பாடுகளையும் இணைய பக்கங்களையும் வடிவமைப்பதற்காக ஜாவாஸ்கிரிப்டின் அடிப்படையில் செயல்படுகின்றது
2 BlueGriffon என்பது WYSIWYG என்ற அடிப்படையில் செயல்படும் கட்டற்ற இணைய வடிவமைப்பு கருவிப் பயன்பாடாகும் இது மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் பொறியின் அடிப்படையில் செயல்-படுகின்றது இது புதிய HTML5 , CSS ஆகியவற்றின் துனையுடன் MPL, GPL, LGPL,ஆகிய அனுமதியின் அடிப்படையில் அனைத்து தளங்களிலும் செயல்படுகின்றது
3 Seamonkey என்பது மெஸில்லாவின் இணைய பயன்பாடாக தன்னுடைய முதல் பயனத்தை துவங்கியது பின்னர் மொஸில்லா தன்னுடைய எல்லையை குறுகியதாக ஆக்கிகொண்டதால் WYSIWYG என்ற அடிப்படையில் செயல்படும் கட்டற்ற இணைய வடிவமைப்பு கருவிபயன்பாடாக மாறி பயனுடன் செயல்பட்டு வருகின்றது HTMLஐபுதியதாக கற்பவர்களுக்கு இது ஒரு சிறந்த இணைய வடிவமைப்பு கருவியாக விளங்குகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: