கணிதத்தில் ஆர்வுமுள்ளமாணவர்களுக்கான Underground Mathematics எனும் இணையதளம் ஒரு அறிமுகம்

Underground Mathematics என்பது கணிதபாடத்தில் மிகஉயர்ந்த மதிப்பெண்களுடன் வெற்றிபெற விழையும் மாணவர்களுக்கான ஒரு அருமையான இணையதளமாகும் இதில் எண்கணிதம், இயற்கணிதம், தொடர்-இயற்கணிதம், ,வகைநுன்கணிதம், தொகை நுண்கணிதம்,வரைபடம், போன்ற அடிப்படை கணிதப் பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வண்ணம் என பல்வேறு வண்ணங்களுடனான தகவல் வரைகலையை (infographic) இதன்முகப்பு பக்கமாக கொண்டுள்ளது அவரவர் விருப்பப்பட்ட கணித துறைக்கு செல்வதற்காக இந்த முகப்பு பக்கத்தின் சுத்தியல் போன்ற அல்லது வட்டம் போன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது இவ்விரண்டும் திரையில் இல்லை-யெனில் வண்ணப் பகுதிகளில் hyperlinked conceptsஎனும் மேல்மீட்பு பட்டியை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக நாம் காணவிழையும் கணிதத்துறைக்கு சென்று வகுப்பறையில் வழிகாட்டியின் மூலம் விளக்கம் பெறுவதை போன்று இதன்மூலம் தெளிவுபெறமுடியும்
உடன் விரியும் தொடர்புடைய கணிததுறையினுடைய திரையின் மேல்பகுதியில் மிகமுக்கியமான கேள்விகளும் (Key Questions) தொடர்புடைய கருத்துகளும் (concepts) இணைப்பும் பட்டியலாக இருக்கும் அவற்றுள் தேவையான கேள்வியை மட்டும் தெரிவு செய்து உடன் விரியும் திரையில் தொடர்புடைய விவரங்களையும் விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம் அல்லது நாம் தேடிடும் கணித கேள்வி அங்கு இல்லையெனில் தேடிடுடம் பெட்டியில்அந்த கணித புதிரை அல்லது கேள்வியை உள்ளீடுசெய்து தொடர்புடைய விவரங்களையும் விளக்கங்களையும் தேடி அறிந்து கொள்ளலாம் பெரும்பாலும் கணித புதிருக்கான தீர்வினை எவ்வாறு காண்பது என்பதற்கான வழிகாட்டிகளே இதில் உள்ளன மேலும் இதில் அவ்வப்போது புதிய கேள்வி அதற்கான தீர்வுகளை நிகழ்நிலை படுத்தப்படும்போது அதனை பற்றிய செய்திகளை நாம் தெரிந்து கொள்வதற்காக தேவையெனில் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைத்திடுமாறு பதிவுசெய்துகொள்க இந்த தளமானது இலண்டனில் உள்ள கேம்ப்பிரிட்ஜ் பல்கலைகழகம் உருவாக்கி பராமரித்து வருகின்றது மேலும் விவரம் அறிந்து கொள்ள https://undergroundmathematics.org/எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: