யூட்யூப் கானொளி காட்சி திரையின் வேகத்தை எளிதாக கட்டுபடுத்தலாம்

இந்த யூட்யூப் இணையதளபக்கத்தில் மிகமுக்கியமான கானொளி காட்சிகளை அதன் திரையில் நாம் நம்முடைய கண்களால் காணும்போது எந்த காட்சியையும் நம்மால் பார்த்து புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு அந்த படக்காட்சிகளானது மிகவேகமாக ஓடிக்கொண்டிருந்தால் உடன் அதனை சரிசெய்து தெளிவான படக்காட்சி திரையில் தோன்றிடுமாறு செய்திடமுடியும் அதற்காக அந்த கானொளி காட்சிதிரையின் கீழே வலதுபுறம் உள்ள Settings எனும் பற்சக்கரம் போன்ற உருவப்பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில் Speed என்பதையும் பின்னர் விரியும் துனைப்பட்டியில் படம்இயங்கும் வேகஅளவுகளான 0.5 அல்லது 0.25 ஆகியவற்றில் நாம் விரும்பும் வேகத்தின் அளவையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Play எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கானொளிகாட்சியின் படக்காட்சிகளின் இயங்கும் வேகமானது நாம் தெரிவுசெய்த அளவிற்கேற்ப மெதுவாக நம்மால் காட்சிகளை கண்டு புரிந்து கொள்ளும் வேகஅளவில் இயங்கிடும்
இதே போன்று படக்காட்சி இயங்கும்வேகம் அதிகமாக இருக்க வேண்டுமெனில் இதே Speed எனும் துனைப்பட்டியில் 2 அல்லது நாம்விரும்பும் வேக அளவை தெரிவுசெய்துகொண்டு Play எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இந்நிலையில் வேறு கானொளி காட்சியை காண்பதற்காக மாறினால் படக்காட்சியின் இயங்கும் வேகமானது மாறாமல் அப்படியே நாம் அமைத்திருந்த வேகத்தில் இயங்கும் அதனால் நம்முடைய இணையஉலாவியை நிறுத்தம் செய்து மறுபடியும் செயல்படுமாறு செய்க பின்னர் இந்த யூட்யூப் இணைய தளபக்கத்திற்கு வந்து முன்பு போலவே கானொளி காட்சித்திரையின் கீழே வலதுபுறம் உள்ள Settings எனும் பற்சக்கரம் போன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில் Speed என்பதையும் பின்னர் விரியும் துனைப்பட்டியல் படம்இயங்கும் வேகஅளவு Normal என்பதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Play எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் படக்காட்சியானது வழக்கமான வேகத்திற்கு மாறிவிடும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: