நம்முடைய செல்லிடத்து பேசியில் பொது வொய்ஃபி வலைபின்னல் தொடர்பை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்வது

இதுவே நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்விகுறியாகும் .இணைய இணைப்பு பெறுவதற்காக குழுவான உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான இணைப்பு பெறுவதற்கு பதிலாக பொதுவாக அனைவருக்கும் சேர்ந்த ஒரேயொரு இணைப்பில் வொய்ஃபி வாயிலாக அனைவரும் இணைய இணைப்பு பெறலாம் என்ற வசதி இருந்தாலும் நம்மையறியாமல் மூன்றாவது நபரும் இந்த இணைப்பை பெற்று நம்முடைய தகவல்களை திருடிஅபகரித்து செல்வதற்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளன அதனை எவ்வாறு தவிர்ப்பதுஎன இப்போது காண்போம்
1.public Wi-Fi எனும் இணைய இணைப்பில் online banking அல்லது shopping போன்ற பணிகளை தவிர்த்து செய்திகளை படித்தல் போன்ற பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்க
2 இரண்டாவதாக இணையபக்கங்களில் உள்நுழைவு செய்திடும்போது abc,123,போன்ற அனைவரும் மிகஎளிதாக யூகிக்ககூடிய கடவுச் சொற்களை அறவே தவிர்த்திடுக அதற்கு பதிலாக பெரியஎழுத்துகள், சிறிய எழுத்துகள்,குறியீடுகள், எண்கள் ஆகியவை கலந்து உருவாக்கப்படும் மிக சிக்கலான கடவுச்சொற்களை பயன்படுத்திக்கொள்க இந்த கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கவும் மேலும் கடவுச்சொற்களை கையாளுவதற்கென்றே தனியான இணையபக்கங்கள் ஏராளமாக உள்ளன அவைகளின் சேவைகளை பெற்று பாதுகாப்பாகpublic Wi-Fi இணைய இணைப்பினை பயன்படுத்தி கொள்க
3 மூன்றாவதாக நாம் எந்தவொரு இணையஇணைப்பை பெற்றிருந்தாலும் பாதுகாப்புக்கென தனியாக உள்ள Security Warrior எனும் பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பாதுகாப்பாக உலாவருக
4 நான்காவதாக Cyber Ghost எனும் மெய்நிகர் தனிப்பட்ட வலைபின்னல் virtual private network (VPN)எனும் வசதியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கூடுதலான பாதுகாப்பு அடுக்கினை அமைத்துக்கொள்க ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூட இதனை நிறுவகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்என்ற செய்தியை மனதில்கொள்க.
5ஐந்தாவதாக நாம் பயன்படுத்தவுள்ளpublic Wi-Fi இணைய இணைப்பினை வழங்குபவர் பாதுகாப்பு ஏற்பாட்டினை மிகச்சரியாக செயல்படுத்துகின்றனரா என சரிபார்த்து கொள்க 6 ஆறாவாதாக நாம்இணைய இணைப்பினை பயன்படுத்தி முடிந்ததும்மிகச்சரியாக இந்த public Wi-Fi இணைய இணைப்பினை துண்டி்த்துவிடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: