செல்லிடத்து பேசியில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் பயன்பாடுகள் மேஜைக் கணினியில் செயல்படுமா?

செல்லிடத்து பேசியில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையானது லினக்ஸ் இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற செய்தி பொதுவாக நாமனைவரும் அறிந்ததே . அவ்வாறாயின் இரண்டும் சமமானதுதானே அதனால் கணினியின் லினக்ஸில் செயல்படும் பயன்பாடுகள் செல்லிடத்து பேசியின் ஆண்ட்ராய்டு இயக்கமுறையிலும் ஆண்ட்ராய்டின் செயல்படும் பயன்பாடுகள் லினக்ஸின் மேஜைக்கணினியிலும் செயல்படுத்திடமுடியுமா என்ற ஒருபெரிய சந்தேகம் எனக்கு திடீரென உருவாயிற்று
இதற்கான விடையை காண்கின்றேன் என நீங்கள் யாரும் உங்களுடைய மூளைய கசக்கி பிழிய வேண்டாம் இங்கு “முடியாது” என்ற ஒரேயொரு எளிய பதிலை மட்டும் அறிந்து கொள்க ஏனெனில்
இவ்விரண்டிலும் ஒருசில செயல்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும் வேறுசிலசெயல்கள் வித்தியாசமாக இருப்பதால் அவ்வாறு பயன்பாடுகளை இவ்விரண்டிற்கு இடையே இடம்மாற்றி பயன்படுத்தி கொள்ளமுடியாத சூழலில் நாம் தற்போது உள்ளோம் என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க அதற்கான விவரம் பின்வருமாறு
இவ்விரண்டு இயக்கமுறைமைகளும் செயல்படுவதற்கான அடிப்படையாக விளங்கும் கெர்னல் ஆனது ஒன்றாக இருந்தாலும் அதன்மீது செயல்படும் பயன்பாடுகளுக்கான அமைவு மட்டும் இரண்டிலும் வெவ்வேறாக மாறுபட்டுள்ளன அதாவது அவை செயல்படும் சாதனங்களுக்கு ஏற்ப அவை செயல்படுமாறு மாற்றியமைக்கப்பட்டு இவைகளின் இயக்கமுறைமையின் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன இதனை நம்முடைய செல்லிடத்து பேசியின் Software information என்பதன்கீழ் Kernel versionஎன்ற கெர்னலின் பதிப்பெண்ணை பார்த்து அறிந்து கொள்க
பொதுவாக அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளின் வெளியீடுகளும் GNUஎனும் நூலகங்கள் அல்லது X எனும் சேவையாளர் ஆகிய செந்தர தொகுதியான மென்பொருட்கள் உள்ளிணைந்ததாக இருக்கும் ஆனால் ஆண்ட்ராய்டில் அவ்வாறானதாக இல்லை
மேலும் லினக்ஸ் இயக்கமுறைமை வெளியீடானது லினக்ஸின் கெர்னெல் சரியான இயக்க முறைமையாக செயல்படுவதற்காக செந்தரமானGNU வின் Cஎனும் நூலகத்தை பயன்படுத்தி கொள்கின்றது ஆனால் இதற்காக ஆண்ட்ராய்டில் Bionic என அழைக்கப்படும் c எனும் சொந்த நூலகத்தை பயன்படுத்தி கொள்கின்றது
ஆண்ட்ராய்டில் செல்லிடத்து பேசியின் துனைச்சாதனங்களான alarmr, kernel debugger, logger, power management போன்றவை செயல்படுமாறு அதற்கான மென்பொருட்கள் உள்ளிணைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது ஆனால் லினக்ஸ் கெர்னெல்லில் அவ்வாறான வசதி எதுவும்இல்லை
ஆண்ட்ராய்டில் செயல்படும் பயன்பாடுகள் Dalvik virtual machine அல்லது ART ஆகியவற்றை பயன்படுத்தி செயல்படுமாறு கட்டமைக்கப் பட்டுள்ளது ஆனால் லினக்ஸ் கெர்னெல்லில் அவ்வாறாக கட்டமைக்கப்படவில்லை
லினக்ஸின் கணினியிலும் செல்லிடத்து பேசியிலும் shell என அழைக்கப்படும் கட்டளை வரிகளை உள்ளீடு செய்திடும் முனைமங்கள் ஒன்றாக இருந்தாலும் லினக்ஸ் போன்று அனைத்து கட்டளை வரிகளையும் ஆண்ட்ராய்டில் செயல்படுத்திடமுடியாது இதனை சரிசெய்வதற்காக அதாவது விடுபட்ட செயலிகளை ஆண்ட்ராய்டில் செயல்படுமாறு செய்வதற்காக BusyBox app எனும் பயன்பாடு பேருதவியாக உள்ளது
மேலும் உபுண்டு லினக்ஸில் செல்லிடத்து பேசியில் செயல்படுமாறான மேம்படுத்திடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன அதனை கொண்டு செல்லிடத்து பேசியில் கணினியை போன்று செயல்படுமாறு செய்யப்பட்டு வருகின்றன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: