செல்லிடத்து பேசியின் அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிட உதவும் கருவிகள்

இன்று உலகில் ஸ்மார்ட் ஃபோன்களும் ,டேப்ளெட்களும் நாளுக்கு நாள் அவைகளை பயன்படுத்திடும்எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் செல்லிடத்து பேசிக்கான பயன்பாட்டினை உருவாக்கிடும் தொழில்நுட்ப வல்லுனர்கள், மேம்படுத்துநர்கள், நிறுவனங்கள் பயன்படுத்துபவர்கள் ஆகிய அனைவருடைய பணியானது மிககவர்ச்சிகரமாக முதன்மை இடத்தை வகிக்கின்றது இந்த ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய இரு இயக்க-முறைமைகளும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பொதுவாக இன்று நிறுவனங்களின் நோக்கம் அனைத்தும் மிகத்திறனுடைய எளிதாக கையாளும் வண்ணம் இருக்கும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்குவதில் மட்டுமே உள்ளது அதனால் தற்போதைய செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே மிக அடிப்படை நிபந்தனையாகும் ஆயினும் இதற்காக ஏராளமான அளவில் கருவிகள் யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி தமக்குத்தேவையான பயன்பாடுகளை உருவாக்கி கொள்ளுமாறு தயாராக இருக்கின்றன அவைகளுள் Sencha Touch, Appcelerator Titanium,Qt,XamarinSDKஆகிய வற்றை பற்றிய மேலோட்டமான பார்வை இந்த கட்டுரையில் வழங்கப்படுகின்றன
1 Sencha Touch என்பது கட்டற்ற செல்லிடத்து பேசியின் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட செல்லிடத்து பேசி பயன்பாடுகளை உருவாக்க உதவும் ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்ட தொரு கருவியாகும் இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி,கிண்டில்,விண்டோபோன்,டிஜ்ஜான் ஆகிய அனைத்து செல்லிடத்து பேசிகளின் இயக்குமுறைமைகளில் செயல்படும் திறன்கொண்டதாகும். செ்ல்லிடத்து பேசியின் வரைகலை பயனாளர் இடைமுகவசதியுடன் இணையதள பக்கத்தில் பயன்பாடுகளை உருவாக்குவதற்காகவே இந்த கருவி அமைந்துள்ளது. மிகவிரைவாக கட்டமை உருவாக்கிடவும் குறிப்பிட்ட செல்லிடத்து பேசியின் இயக்குமுறைமையில் செயல்படுவதற்காகவே உருவாக்கபட்ட பயன்பாடாக அதன் கட்டமைவு இருந்திடுமாறும் உருவாக்கிடும் வசதியை அளிக்கின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.sencha.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
2 Appcelerator Titanium என்பது ஒருஒற்றையான ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படையில் உருவாக்கிடும் பயன்பாடானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி, கிண்டில், விண்டோ-போன், ஆகிய எந்தவொரு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் வல்லமை கொண்ட பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்கான வரைச்சசட்டமாக விளங்குகின்றது எந்தவொரு செல்லிடத்து பேசி சாதனத்திலும் அதனுடைய எந்தவொரு செல்லிடத்து பேசிகளின் இயக்குமுறைமைகளில் செயல்படும் திறன்கொண்டதாகும் பயன்பாட்டினை ஆய்வு செய்வது பின்புலமாக செயல்படும் சேவை போன்ற பல்வேறு வசதிகளை இது பயனாளர்களுக்கு வழங்குகின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.appcelerator.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
3 Qtஎன்பது மிகமுக்கியமான அனைத்து செல்லிடத்து பேசிகளின் இயக்கமுறை தளங்களிலும் செயல்படும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளின் குறிமுறைவரிகளில் அதிகமாக மாறுதல் செய்திடாமலேயே செயல்படுத்திடும் வல்லமைகொண்ட வரைச்சட்டமாகும் இது சி++ இன் செயல்முறைகளை தம்முடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திகொள்கின்றது இது மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோவை ஆதிரிக்கின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.qt.io/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
4 XamarinSDK என்பது செல்லிடத்து பேசிகளின் அனைத்து தளங்களிலும் செயல்படும் சக்தி வாய்ந்த செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடஉதவும் ஒரு கட்டற்ற கருவியாகும் இதனை மைக்ரோசாப்ட், ஐபிஎம்,ஃபேர்ஸ்குயர் போன்ற தகவல்தொழில் ஜாம்பவான் நிறுவனங்கள் தங்களின் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக பயன்படுத்தி கொள்கின்றன. இது ஆப்ஜெக்ட்டிவ் சி, சிஷார்ப் ஆகிய கணினி மொழிகளை ஆதரிக்கின்றது இது மிகமுக்கியமான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோ-போன் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிடும் வல்லைமைகொண்டது இதில் உருவாக்கபடும் செல்லிடத்து பேசியின் குறிமுறைவரிகளை மற்ற செல்லுடத்து பேசி இயக்கமுறைமையில் 90 சதவிகிதம் அப்படியே பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும் மேலும் விவரங்களுக்கு https://www.xamarin.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: