நாம் பயன்படுத்திடும் மேஜைக்கணினியின் செயல்திறனை அதிகபடுத்துவது எவ்வாறு ?

பொதுவாக இதுவே நம் அனைவரின் முன் எழும் மிகப்பெரிய கேள்வியாகும் ஆயினும் கணினியின் செயல்திறனை மேம்படுத்திட பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றிடுக என அறிவுறுத்தப்படுகின்றது
1.வன்தட்டின் நினைவகத்தை மாதந்தோறும் சரிபார்த்திடுக இதற்காக உலாவி சாளரத்தினை திரையில் தோன்றிட செய்து அதன்இடதுபுற பலகத்தில் உள்ள mycomputer என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் இயக்ககங்களில் C: இயக்ககத்தை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Properties எனும் திரையில் Tools எனும் தாவியின் திரையை தோன்றிடுசெய்திடுக அதில் Error Checkingஎனும் பகுதியில் Checkஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Start, Schedule disk check எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தியபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுத்திடுக
2தேவையற்ற கோபபுகளை மாதந்தோறும் நீக்கம் செய்திடுக கணினியை பயன்-படுத்திடும்போது உருவாகிடும் தற்காலிக கோப்பகள் நீக்கம் செய்திட்ட கோப்புகள் பயன்பாடுகள் இயங்கிடும்போது தானாகவே உருவாகும் இதர கோப்புகள் போன்ற அனைத்தையும் மாதம் ஒருமுறையாவது அறவே நீக்கம் செய்து வன்தட்டினை சுத்தம் செய்து கொள்வது நல்லது இதற்காக Start=> AllPrograms=>Accessories=>Systems Tools=>DiskCleanup=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படுத்திடுக அல்லது இந்த DiskCleanup என்பதை ஒரு உருவப்பொத்தானாக முகப்புத் திரையில் அமைத்துகொண்டு அதனை தெரிவுசய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் எந்தெந்த கோப்பகளை-யெல்லாம் நீக்கம் செய்திடலாம் என பட்டியிலிடும் அவைகளை தெரிவுசெய்து கொண்டு Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அறவே நீக்கம் செய்து கொள்க
3வாரம் ஒருமுறை சிதறிகிடக்கும் கோப்புகளை ஒருங்கினைத்து கொள்க பொதுவாக நாம் பயன்படுத்திடும்போது உருவாகும் கோப்புகள் ஆங்காங்க பரவலாக இரைந்து கிடக்கும் அவைகளை ஒரேஇடத்தில் ஒன்றுசேர்த்து அடுக்கிவைத்திடுவது நல்லது இதற்காக Start=>All Program,=>Accessories=> System Tools=> Disk Defragment=> என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வன்தட்டில் இரைந்து கிடக்கும் கோப்புகளை ஒருங்கிணைத்துவிடும் இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்திடு-வதற்காக Change settingsஅல்லதுConfigure schedule தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் schedule-Weekly என்பதை தெரிவுசெய்து அமைத்து கொள்க
4 நச்சுநிரல்கள் நம்முடைய கணினியில் வராமல் மாதம் ஒருமுறை ஆய்வுசெய்திடுக இதற்காகStart=> Control Panel => small icons => Windows Defender=> என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் வாரம் ஒருமுறை எனில் Quick=> Scan now=> என்றவாறும் மாதம் ஒருமுறைஎனில் Full=>Scan now=> என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கணினியின் வன்தட்டினை சுத்தபடுத்தி கொள்க
இயக்கமுறைமையை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக Start=> Control Panel => small icons =>Windows Update=> என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துசொடுக்குகஉடன் விரியும் திரையில் Change settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Install updates automatically என்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாவென உறுதி படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: