லிபர் ஆஃபிஸின் பல்வேறு பயன்களை கொண்ட விரிவாக்க வசதிகளை பயன்படுத்தி கொள்க

லிபர் ஆஃபிஸானது ஒரு சிறந்த கட்டற்ற இலவசமான பயன்பாடாக விளங்குகின்றது இதில் ஏராளமான வசதிகள் முன்கூட்டியே கட்டப்பட்டு பயனாளர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக தயார்நிலையில் இருந்தாலும் பயனாளர்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை அளிப்பதற்காக தேவையெனில் கூடுதல் கருவிகளாக சேர்த்து பயன்படுத்திக் கொள்வும் தேவையில்லையெனில் நீக்கிக்கொள்ளவும் கூடிய பின்வரும் விரிவாக்க வசதிகளானவை நாம் எப்போது வேண்டுமாணாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன
1. MultiFormatSave எனும் கூடுதல் விரிவாக்க வசதியை பயன்படுத்தி மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸ் பபயன்பாட்டினை விட்டுவெளியேற தயங்கி மயங்கி இருப்பவர்கள் தாம் உருவாக்கிடும் கோப்புகளை PDF, ODF ஆகிய வடிவமைப்புகளிலும் எம்எஸ் ஆஃபிஸின் பழைய அல்லது புதியவடிவமைப்புகளிலும் சேமித்திடமுடியும்
2. AltSearch இந்த கூடுதல் விரிவாக்க வசதியை கொண்டு ரைட்டரின் Find & Replace எனும் உரையாடல் பெட்டிக்கு மாற்றாக Bookmarks, Notes, Text fields, Cross-references ஆகியவற்றை தேடுதல், மேற்கோள்களின் content, name or mark references ஆகியவற்றை தேடிஉள்ளிணைத்தல் , Footnote and Endnote ஆகியவற்றை தேடுதலும் உள்ளிணைத்தலும் Table, Pictures , Text ஆகியவற்றின் பெயரின் அடிப்படையில் தேடுதல் manual page and column break ஆகியவற்றை தேடுதல் போன்ற எண்ணற்ற செயல்கள் பயனாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன
3. Pepito Cleaner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்களின் ஆவணங்களை வருடுதல் , PDF கோப்பினை பதிவிறக்கம் செய்தல் PDF கோப்பினை ODF வடிவமைப்பிற்கு மாற்றியமைத்திடும்போது ஏற்படும் சிக்கல்களை தீர்வுசெய்தல் என்பன போன்ற செயல்களக்கு பெரிதும் பயன்படுகின்றது
4. ImpressRunner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் படவில்லை காட்சி பயன்பாடான இம்ப்ரஸ் கோப்பினை கூட்டஅரங்கிலும் நிகழ்வுகளிலும் இடையிடையே நின்றுவிடாமல் படவில்லைகளை தொடர்ந்து தானியங்கியாக திரையில் காண்பிக்குமாறு செய்வதற்காக பயன்படுகின்றது
5. Export as Images எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , ட்ரா ஆகிய பயன்பாடுகளின் கோப்புகளை பதிவேற்றம் செய்திடும்போது JPG, PNG, GIF, BMP, and TIFF ஆகிய வடிமைப்புகளில் உருவப்படமாக பதிவேற்றம் செய்திட உதவுகின்றது
6. Anaphraseus எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்கள் கணினியின் உதவியுடன் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் CAT (Computer- Aided Translation) செய்திடும்போது அதற்கான கோப்பினை உருவாக்கிடவும் பராமரித்திடவும் மொழிமாற்ற நினைவகத்தினை நிருவகித்திடவும் சொற்களை அங்கீகரித்தல் TMX எனும் வடிவமைப்பில் கோப்பினை பதிவேற்றம் செய்தல் பதிவிறக்கம் செய்தல் ஆகிய செயல்களை செய்திட உதவுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: