Evernote எனும் பயன்பாட்டினை பற்றி அறிந்துகொள்வோம்

நம்முடைய அன்றாட செயல்திட்டங்களையும் பணிகளையும் நிருவகிப்பதற்காக Evernote எனும் பயன்பாடு பெரிதும் பயன்படுகின்றது இதனை பதிவிறக்கம் செய்திட https://evernote.com/ எனும் இணையபக்கத்தில் நம்முடைய மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்களுடன் உள்நுழைவு செய்திடுக பின்னர் இதிலுள்ள SIGN UP FOR FREE எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கிடுக அதன் பின்னர் இதனுடைய http://evernote.com/download எனும் இணைய முகவரிக்கு சென்று இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் சேமித்துகொள்க பின்னர் இதனுடைய evernote.exe எனும் செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் User Account Control எனும் சாளரம் தோன்றிடும் அதில் Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இது செயல்படுவதை ஆமோதித்திடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில் I accept the terms in the License Agreement எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பிறகு இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடும் பணிமுடிவுறும் திரை தோன்றிடும் அதில் Finish எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் இந்த Evernote எனும் பயன்பாட்டின் உருவப்பொத்தான் திரையில் நாம் இதனை பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக அமர்ந்திருக்கும்
12.1
அதன்பின்னர் இந்த Evernote எனும் பயன்பாட்டின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Evernote எனும் பயன்பாட்டின் திரை தோன்றிடும் அதன் தலைப்பு பகுதியின் உரைபெட்டியில் To-do list அல்லது நாம் விரும்பும் பெயரை உள்ளீடு செய்திடுக தொடர்ந்து அதன் கீழ்பகுதியான உள்ளடக்கப்பகுதியில் மேம்படுத்தி காண்பிக்கபட்ட உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் CTRL-SHIFT-C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் ஒரு சரிபார்ப்பு பட்டி (checklist) உருவாக்கபடும் அதில் நாம் செய்யவேண்டிய செயலை உள்ளீடு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து இவ்வாறே நம்முடைய அனைத்து பணிகளையும் ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து உள்ளீட்டு விசைகளை அழுத்தி அனைத்து பணிகளையும் முடிவுறும்போது Finishஎனும் பொத்தானை அழுத்தி முடிவுக்கொண்டுவருக இதன்பின்னர் நம்முடைய கணினி அல்லது ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்டில் இந்த To-do list ஐ பட்டியலாக காண்பிக்கும்
12.2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: