புதியவர்களும் செல்லிடத்து பேசி பயன்பாட்டினை அப்பாச்சியின் கோர்டோவா வாயிலாகஎளிதாக உருவாக்கலாம்

இந்த அப்பாச்சியின் கோர்டோவா என்பது ஒரு கட்டற்ற செல்லிடத்து பேசியின் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்திட உதவும் வரைச்சட்டமாகும். இது ஹெச்டிஎம்எல்5 சிஎஸ்எஸ்3 ஜாவாஸ்கிரிப்ட் போன்ற செந்தர இணையதொழில் நுட்பங்களை பயன்படுத்தி செல்லிடத்து பேசிகளில் செயல்படும் பல்வேறு தளங்களிலும் செயல்படும் திறன்-மிக்கதொரு கட்டற்ற பயன்பாடுகளை நிரல்தொடர் உருவாக்குபவரால் உருவாக்க அனுமதிக்கின்றது இதன்மூலம் உருவாக்கப்படும் கட்டற்ற பயன்பாடுகள் செல்லிடத்து பேசி பயன்பாடுகள் அல்லது இணைய பயன்பாடுகள் ஆகியவற்றைவிட மிக-மேம்பட்டதாக விளங்குகின்றது. இந்த அப்பாச்சியின் கோர்டோவா ஆனது ஆண்ட்ராய்டு, ப்ளாக்பெர்ரி,ஃபயர்ஃபாக்ஸ் ஓஎஸ், ஐஓஎஸ், செம்பியன், உபுண்டுடச், வெப்ஓஎஸ், விண்டோஸ்ஃபோன் போன்ற அனைத்து செல்லிடத்து பேசியின் இயக்கமுறைமை தளங்களையும் ஆதரிக்ககூடியதாக விளங்குகின்றது.. மேலும் இந்த அப்பாச்சியின் கோர்டோவாவில் இணைய உலாவியின் காட்சியை போன்ற webview, பயன்பாட்டின்குறிமுறைவரிகளை சேமித்திட பயன்படும் webapp,மற்ற பயன்பாடுகளுடன் இடைமுகம் செய்யப் பயன்படும் Plugins ஆகியமூன்று முக்கிய உறுப்புகளால் இது கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த அப்பாச்சியின் கோர்டோவாவை நிறுவுகை செய்வதற்காக முதலில் https://nodjs.org/ எனும் தளத்திலிருந்து Node.jsஎன்பதையும் npmஎன்பதையும் நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் C:\npm install -g cordova என்ற கட்டளை வரியின் வாயிலாக விண்டோ பயன்படுத்திடும் கணினியிலும் $sudo npm install -g cordova என்ற கட்டளைவரியின் வாயிலாக லினக்ஸ் பயன்படுத்திடும்கணினியிலும் அப்பாச்சியின் கோர்டோவாவை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க இதன் பின்னர் சாதாரண உரைவடிவிலான கட்டளைவரியின் வாயிலாக இந்த அப்பாச்சியின் கோர்டோவாவை செயல்படுத்தி கொள்ளமுடியும் இதன்பின்னர் C:\project\cordova create torchapp com.app.torch Torch எனும் கட்டளைவரியின் வாயிலாக ஒருபுதிய கோர்டோவா செயல்திட்டத்திற்கான torchapp எனும் கோப்பகத்தை உருவாக்கிகொள்க இந்த கோப்பகமானது .hooks\ .platform\ .plugins\ .www\ 0 css\ 0 img\ 0 js\ 0 index.html .config.xml என்றவாறான கட்டமைப்பில் இருக்கும் பின்னர் C:\project\torchapp\cordova platform add android -save எனும் கட்டளைவரியை உள்ளீடு செய்து நம்முடைய புதிய பயன்பாடு செயல்படுவதற்கான இயக்கமுறை தளத்தினை சேர்த்திடுக அதன்பின்னர் C:\project\torchapp\cordova requirementsஎனும் கட்டளைவரியை செயல்படுத்தி நாம் உருவாக்கபோகும் பயன்பாட்டிற்கு தேவையான அனைத்தும் தயார்நிலையில் உள்ளனவா என சரிபார்த்து கொள்க இதன்பின்னர் http://www.flati.com/ எனும் தளத்திலிருந்து நம்முடைய பயன்பாட்டிற்கான 64x64pixels என்ற அளவில் உள்ள .png எனும் வடிவமைப்பின் உருவப்பொத்தானை பதிவிறக்கம் செய்தபின்னர் அதற்கு power.png என மறுபெயரி்ட்டுகொண்டு www\img\ எனும் கோப்பகத்தில் சேமித்திடுக அதன்பின்னர் நம்முடைய விருப்பமான குறிமுறை பதிப்பானில் பின்வரும் குறிமுறைவரியை நகலெடுத்து ஒட்டிகொள்க
1

Torch Light

http://”cordova.js”
http://”js/index.js”

பின்னர் torchapp\ww\css\எனும் கோப்பகத்தில் index.cssஎனும் கோப்பினை திறந்து கொண்டு body { background – color: white; } எனும் கட்டளைவரியை நகலெடுத்து ஒட்டுவதன் வாயிலாக CSSஎனும் பாவணையை சேர்த்து கொள்க. அதன்பின்னர் C:\project\torchapp\cordova\ plugin add cordova-plugin-flashlight எனும் கட்டளைவரிவாயிலாக pluginஎன்பதை சேர்த்து கொள்கதொடர்ந்து torchapp\www\js\ எனும் கோப்பகத்தில் index.js எனும் கோப்பினை திறந்து பின்வரும் குறி்முறை வரிகளை நகலெடுத்து ஒட்டிகொள்க.
Var app = {
// Application Constructor
initialize; function() {
this.bindEvents();
},
bindEvents; function ( ) {
documents.addEventsListener(‘deviceready’, this.onDeviceReady, False);
};
onDeviceReady: function ( ) {
app.receivedEvent(‘deviceready’);
document.detEventById(“torch”),
addEventsListener(“click”, function ( ) {
window.plugins.flashlisght.toggle( ) ;
});
},
receivedEvent: function(id) {
console.log(id);
};
app.initialize( ) ;

அதன்பின்னர் C:\project\torchapp\cordova build android எனும் கட்டளைவரிவாயிலாக நம்முடைய செயல்திட்ட குறிமுறை வரிகளை ஒரு பயன்பாடாக C:\project\torchapp\platforms\android\build\outputs\apk\ எனும் கோப்பகத்தில் .apk வடிவமைப்பில் கட்டமைவு செய்திடுக பின்னர் android-debug.apkஎனும் இந்த பயன்பாட்டு கோப்பினை ப்ளூடூத் அல்லது யூஎஸ்பி கம்பியின் வாயிலாக நம்முடைய செல்லிடத்து பேசியில் நகலெடுத்து நிறுவுகை செய்திடுக உடன் விரியும் செல்லிடத்து பேசியின் திரையில் settings என்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Unknown Sources எனும் வாய்ப்பினை சரிபார்த்து கொண்டு OKஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Install எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிறுவுகை செய்து கொள்க நிறுவுகை பணிமுடிந்தவுடன் திரையின் மேலே மையத்தில் அமைந்திருக்கும் நம்முடைய பயன்பாட்டின் கருப்பு வண்ண Powerஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து flashlight on/off என்பதை செயல்படுத்திடுக பின்னர் அதன் செயலை நிறுத்தம் செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: