GitHub எனும் தளத்தில் புதிய செயல்திட்டம் உருவாக்குவதற்கான ஆலோசனைகள்

பல்வேறு கட்டற்ற பயன்பாடுகளின் மிகமுக்கிய மையமாக இந்த GitHub எனும் இணைய பக்கம் புகழ்பெற்று விளங்குகின்றது பொதுவாக கட்டற்ற பயன்பாட்டின் குறிமுறைவரிகளை உருவாக்குபவர்கள் அனைவரும் கட்டற்ற பயன்பாடுகளுக்கு குறிமுறைவரிகளை எழுதினோமா செயல்படுத்தி பார்த்தோமா உடன் இந்த GitHub எனும் இணைய பக்கத்தில் பலருக்கும் பயன்படுமாறு இணைப்பு கொடுத்தோமா அவ்வளவு தான் பணிமுடிந்தது என தவறாக எண்ணிவிடுகின்றனர்
இந்த கட்டற்ற பயன்பாட்டிற்கு என்னவகையான அனுமதியை அனுமதிப்பது இந்த கட்டற்ற பயன்பாட்டினை புதியவர்கள் அனைவரும் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்ற விளக்க குறிப்புகள் இதனுடன் சேர்த்து வழங்குவது இதில் பிரச்சினை ஏதேனும் எழுந்தால் அதனை எவ்வாறு தீர்வுசெய்வது மேலும் விவரம் தேவைப்படுவோருக்கான விக்கி செய்திகளை எவ்வாறு வெளியிடுவது இந்த GitHub இணையத்தில் நமக்கான இணைய பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது ஆகியவற்றை கவணத்தில் கொள்ளவேண்டும்என்பதே பலருக்கு தெரியாது செய்தியாகும்அவ்வாறான விவரங்கள் பின்வருமாறு
1.முதலில் நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளிற்கு என்ன வகையான அனுமதியை வழங்கவிருக்கின்றோம் என முடிவுசெய்து அதனை LICENSE எனும் கோப்பில் வைத்திடுக
2. அடுத்ததாக நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளினை எந்த வழிமுறையில் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற வழிகாட்டி ஆவணத்தையும் அடிக்கடி எழும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் சேர்ந்த ஆவணத்தையும் README.md எனும் கோப்பில் வைத்திடுக
3. முன்றாவதாக நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளினை உருவாக்கிடும் பணியில் பங்கெடுத்து கொள்ளவிரும்புவோர் களை அழைத்து அனுமதிப்பதற்கான CONTRIBUTING.md எனும் கோப்பினை உருவாக்கி பராமரித்திடுக
4. அடுத்ததாக நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளினை உருவாக்கிடும் பணியின்போது எழும் சின்ன சின்னபிரச்சினைகள் அவைகளுக்கான தீர்வுகள் போன்றவிவரங்களுக்காக Bitesize label என்பதை உருவாக்கி பராமரித்திடுக
5. ஐந்தாவதாக இந்த பணியின் போது திரும்ப திரும்ப வரும் செயல்களை சிறுசிறு குழுவாக பிரித்து அவைகளுக்கு தனித்தனியான தேர்வுசெய்பெட்டிகளை checkboxes உருவாக்கி அவைகளை முடித்தவுடன் தெரிவுசெய்திருந்தால் அதேபணியை திரும்ப செய்யதேவையில்லை அடுத்த பணியை தொடரலாம்
6. அடுத்ததாக புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளின் செயல்திட்டத்திற்கு பொதுவாக மாதிரி பலகத்தை பின்பற்றுவது குழப்பமெதுவும் இல்லாமல் நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளினை உருவாக்கிடும் பணியினை தொய்வில்லாமல் முடித்திடமுடியும் அதற்காக ISSUE_TEMPLATE.md எனும் கோப்பினை இந்த தளத்திலிருந்து Issue Templates என்ற வசதியின் வாயிலாக உருவாக்கி பயன்படுத்தி கொள்க
7. ஏழாவதாக நம்முடைய புதிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளினை பயனாளர்கள் எளிதாக பயன்படுத்தி கொள்வதற்கான படிப்படியான வழிகாட்டி செந்த குறிமுறைவரிகள் என்பன போன்ற விவரங்களை விக்கி செய்தியாக தனியான விக்கி பக்கத்தை உருவாக்கி வைத்திடுக
8. அடுத்ததாக இந்த விக்கி மட்டும் போதாது இந்த GitHub எனும் மையத்தில் நம்முடைய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளை பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து பயனாளர்களுக்கு வழங்குவதற்காக நமக்காக தனியான ஒருஇணைய பக்கத்தை இந்த GitHub தளத்தில் கட்டமைத்து பராமரித்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: