லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-58-கால்க்கில் வாய்ப்பாடுகளையும் செயலிகளையும் பயன்படுத்துதல்

லிபர் ஆஃபிஸ் கால்க்கின் கலண்களில் எண்கள் எழுத்துகள் ஆகிய இரு அடிப்படை வகை தரவுகளை எவ்வாறு உள்ளீடு செய்து பயன்படுத்திகொள்வது என இதுவரை பார்த்து வந்தோம் பொதுவாக லிபர் ஆஃபிஸ் கால்க்கின் கலண்களின் தரவுகளானது மற்றொரு கலண்களை சார்ந்திருக்கும் இவ்வாறான நிலையை கையாள உதவுவதுதான் மூன்றாவது வகைதரவுகளான வாய்ப்பாடும்(Formula) செயலியும்(function) ஆகும். லிபர் ஆஃபிஸ் கால்க்கின் கலண்களில் எண்களையும் மாறிகளையும் பயன்படுத்தி கணக்கீடுசெய்து கிடைக்கும் விளைவான சமன்பாட்டினையே வாய்ப்பாடு என அழைப்பார்கள் அவ்வாறே லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளின் கலண்களில் உள்ள தரவுகளை கொண்டு முன்கூட்டியே வரையறுக்கபட்ட கணக்கீட்டின்படி தரவுகளை ஆய்வுசெய்து அதன் விடையை தருவதே செயலியாகும்
முதலில் இந்த வாய்ப்பாட்டை பற்றியும் அதன்பின்னர் செயலி பற்றியும் அறிந்துகொள்வோம் விரிதாளின் கலண்களில் பின்வரும் இருவழிகளில் வாய்ப்பாட்டினை நேரடியாக அல்லது செயலி வழிகாட்டி துனையுடன் உள்ளீடு செய்திடலாம் எந்தவொரு கலணிலும் நேரடியாக வாய்ப்பாட்டினை உள்ளீடு செய்திடுவதற்காக முதலில் =, + , – ஆகிய குறிமுறைகளுடன் துவங்கிட வேண்டும்
உதாரணமாக இருகலண்களில் மதிப்புகளின் கூடுதலைகணக்கிடுவதற்காக அதேவிரிதாள் எனில் =SUM(B3+B4) என்றவாறும் வெவ்வேறு விரிதாள் எனில் =SUM(Sheet2.B12+Sheet3.A11)என்றவாறும் கூடுதல் காணும் வாய்ப்பாடு அமையும்.
இந்த வாய்ப்பாடுகளில் மதிப்புகளை செயல்படுத்தி விளைவை காண உதவும் + , – , என்பன போன்ற குறிமுறைகளை இயக்குபவர்(operator) என அழைப்பர். பொதுவாக லிபர் ஆஃபிஸ் கால்க்கின் எந்தவொரு வாய்ப்பாடுகளிலும் arithmetic, comparative, text, referenceஆகிய பல்வேறுவகையான இயக்குபவர்களை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது இவற்றுள் + , – , * , / , % , ^ ஆகிய குறிமுறைகள் கணித இயக்குபவர்கள் (arithmetic operators)ஆகும். = , > , = , <= , ஆகியவை ஒப்பீட்டு இயக்குபவர்கள் (comparative operators)ஆகும். & என்பது உரைஇயக்குபவர் (text operators) ஆகும். கலண்களை குறிப்பிட்டு ஒப்பிடுவது மேற்கோள் இயக்குபவர்(reference operators)ஆகும்.
அதுமட்டுமல்லாமல்reference upper left : reference lower right , (A2:B4):C9 , Sheet1.A3:Sheet3.D4 என்றவாறு முக்காற்புள்ளியுடன் குறிப்பிடுவது Range operator ஆகும்.
மேலும்SUM(A1:C3,B2:D2) எனும் வாய்ப்பாட்டில் 2 அளபுருக்களுடனும் SUM(A1:C3~B2:D2) எனும் வாய்ப்பாட்டில் ஒரு அளபுருவுடனும் செயல்படுத்தபடுவை Reference concatenation operatorஆகும். இவையன்றி A2:B4 ! B3:D6 , (A2:B4~B1:C2) ! (B2:C6~C1:D3)என்றவாறு குறிப்பிடுவது இடைநிலைஇயக்குபவர் (intersection operator)ஆகும்
இவ்வாறு கலண்களின் எண்களை குறிப்பிடுவதற்கு பதிலாக அவைகளுக்கு பெயரிட்டு அந்த பெயரினை வாய்பாடுகளில் குறிப்பிடுவது வாய்ப்பாட்டினை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். அதற்காக பெயரிடவிரும்பும் கலண்களை தனிக்கலணையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவை எனில் நெடுக்கைவசமாக அல்லது படுக்கைவசமாக உள்ள கலண்களையோ தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert=> Names=> Define=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
1
1

உடன் விரியும் Define Name எனும் உரையாடல் பெட்டியில் நாம் விரும்பும் மிகப்பொருத்தமானபெயரை உள்ளீடு செய்துகொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் நாம் உள்ளீடு செய்தபெயர் வாய்ப்பாடுகளில் உள்ளீடு செய்திட தயராகிவிடும்
இந்த மேற்கோளானது தொடர்புடையமேற்கோள்(Relative reference), முழுமையான மேற்கோள் (absolute references)என இருவகைபடுத்தலாம்
உதாரணமாக c2 ,c3 ஆகிய இரண்டு கலண்களில் உள்ள மதிப்புகளை கலண்எண்c4 இல் = c2+c3என்றவாறு வாய்ப்பாட்டுடன் கூடுதல் காண குறிப்பிட்டபின்னர் கலண்களின் எண்கள் d2,d3: e3,e4 ஆகியவற்றின் கூடுதல் காண கலண்எண் c4 இன் வாய்ப்பாடான = c2+c3என்பதனை நகலெடுத்து d4, e4 ஆகியவற்றில் ஒட்டியவுடன் அந்தந்த கலண்களுக்கு ஏற்ப =d2+d3 என்றும் =e2+e3 தானாகவே வாய்ப்பாடானது மாறிசரிசெய்துகொள்ளும் இதனையே தொடர்புடையமேற்கோள்Relative reference என அழைப்பர்
மேலும் கலண் எண் a4இல் 2 என்ற மதிப்பு உள்ளதாக கொள்வோம் கலண்எண்c4 இல் = (c2+c3)*2 என்றவாறும்
கலண்எண்d4 இல் = (d2+d3)*2 என்றவாறும் கலண்எண்e4 இல் = (e2+e3)*2 என்றவாறும் கணக்கீடு செய்திடுமாறு குறிப்பிடுவதற்கு பதிலாக கலண்எண்c4 இல் = (c2+c3)*$a4$ என்றவாறும் கலண்எண்d4 இல் = (d2+d3)*$a4$ என்றவாறும் கலண்எண்e4 இல் = (e2+e3)*$a4$ என்றவாறும் ஒரேமதிப்பினை வெவ்வேறு இடங்களில் திரும்பதிரும்ப கணக்கீடு செய்திடுமாறு குறிப்பிடுவதை முழுமையான மேற்கோள் (absolute references)ஆகும்
பொதுவாக வாய்ப்பாடுகளில் வழக்கமான கூட்டல் குறிபோன்று பல்வேறு குறிமுறைகளையும் பயன்படுத்திடும்போது கணக்கீடு செய்வதற்காக முதலில் வகுத்தலும் பின்னர் பெருக்கலும் அதன்பின்னர் கழித்தலும் இறுதியாக கூட்டலும் என்றவாறு வரிசைகிரமமாக எடுத்துகொள்ளும். மேலும் இந்த வாய்ப்பாட்டின் உள்ளடக்கங்களில் உள்ளவைகளை எப்போதும் இடதுபுறத்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக வரிசையாக வலதுபுறம் வரை கணக்கீடு செய்திடும் என்ற செய்தியையும் மனதில் கொண்டு வாய்ப்பாட்டினை சரியான விடை வருமாறு அமைத்துகொள்க
மேலும் லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் ஒன்றில் உள்ள கணக்கீடுகளையும் தரவுகளையும் மற்றொரு விரிதாளுடன் இணைத்திடவும் மேற்கோள்செய்திடவும் முடியும்
அதனோடு அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட விரிதாள்களை பயன்படுத்திடும்போது அவைகளுக்கு பெயரிட்டு அந்த பெயர்களை இணைப்பதற்கும் மேற்கோள்செய்திடவும் செய்திடலாம் அதுமட்டுமல்லாது அதே கணக்கீடுகளை மற்றொரு தாளிற்கு கொண்டுசெல்ல நகலெடுத்து ஒட்டுவதன்வாயிலாக செயல்படுத்திடலாம்
இவ்வாறு பெயரிடவிரும்பும் விரிதாளின் கீழ்பகுதியிலுள்ள தாவிபொத்தானின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Rename Sheetஎன்ற கட்டளையைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் தேவையானவாறு பெயரினை உள்ளீடு செய்துகொள்க
2.
2
அதன்பின்னர் இதேவிரிதாளின் கீழ்பகுதியிலுள்ள தாவிபொத்தானின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Move/Copy Sheetஎன்ற கட்டளையைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் Move/Copy Sheet எனும் உரையாடல் பெட்டியில் Copyஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் -move to end position- in the Insert before window என்பதை தெரிவுசெய்துகொண்டு New nameஎன்பதில்புதியவிரிதாளிற்கான பெயரை உள்ளீடு செய்துகொள்க இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நாம் பெயரிட்டபுதியவிரிதாளானது அதற்குமுந்தைய தாளின் அனைத்து உள்ளடக்கங்களும் நகலெடுத்துகொண்டு தோன்றிடும்.

ஒரு கலணின் வாய்ப்பாட்டை மற்றொரு கலணிற்குஒட்டுவதற்காக நகலெடுத்தபின்னர் மற்றொரு கலணில் இடம்சுட்டியை வைத்து திரையின் மேலே கட்டளைபட்டையில் Edit => Paste Special=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி ஒட்டிடும்போது உடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் Paste all Formatsஆகியவை தெரிவுசெய்யபட்டுள்ளாதாவென சரிபார்தது OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் எச்சரிக்கை உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் Yesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் ஒட்டப்பட்டுவிடும்
3
3.

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. kolly
    ஆக 19, 2016 @ 03:41:59

    super information

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: