ஆண்ட்ராய்டில் வினாடி வினா நிகழ்ச்சி பயன்பாடுகளை அப்இன்வென்ட்டர்2 ஆல் உருவாக்கிடமுடியும்

ஆண்ட்ராய்டு இயக்கமுறைமைகளில் தொகுதியான கேள்விகளும் அதற்கு குரலொலியுடனான பதில்களும் சேர்ந்ததொரு வினாடி வினா நிகழ்ச்சி தொகுப்புபயன்பாட்டினை அப்இன்வென்ட்டர்2 இல் எளிதாக உருவாக்கிடமுடியும் இதற்காக தரவுகளை உருவாக்குவதற்கானApp1 அந்த தரவுகளை பயன்படுத்தி ஒருசில செயல்களை செயல்படுத்திடுவதற்கானApp2 ஆகிய இவ்விரண்டிற்கு இடைய தொடர்பாளராகவும் தரவுகளை தேக்கிவைப்பவையாகும் செயல்படும்TinyDB ஆகியவற்றுடன் Screen(செயல் நடைபெறும் அமைவிடம் )Speech Recognizer(பதில் கூறுபவர்களின் குரலொலியை அங்கீகரிப்பது )Horizontal arrangements( படுக்கை வசமாக அனைத்து உறுப்புகளையும் அமைக்கபடுவது ) Vertical Arrangement( நெடுக்கைவசமாக உறுப்புகளை அமைக்கப்படுவது) ஆகியபொருள்கூறுகள்(Components) நமக்கு தேவையாகும் முதலில் கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும்கொண்ட QuestionSetList எனக்குறிப்பிடும் வினாடிவினாக்களின் தொகுதியான பட்டியலில் Q எனக்குறிப்பிடும் வினா, Aஎனக்குறிப்பிடும் விடை, TotlaQ எனக்குறிப்பிடும் மொத்த வினாவிடைகள் ஆகியவை குறியொட்டு(Tag)களாகும்
ஆண்ட்ராய்டிஇயக்கமுறைமையின் முதன்மைத்திரையில் create Questions or Answer Questions எனும் தலைப்புடன் இந்த பயன்பாடு தோன்றிடவேண்டும் அதன்கீழ் Create Questions எனும் உருவப்பொத்தானும் Answer Questions எனும் உருவப்பொத்தானும் நிகழ்வுமுடிந்தவுடன் அடுத்தநிகழ்விற்கு செல்வதற்கானClearAll எனும் உருவப்பொத்தானும் பிழைஏதும் உருவானால் அதனை சரிசெய்வதற்கானDebug எனும் உருவப்பொத்தானும் தேவையாகும்
இங்கு CRUD என சுருக்கமாக அறியபடும் உருவாக்குதல் படித்தல் நிகழ்நிலைபடுத்துதல் நீக்கம் செய்தல் (Create,Read,Update,Delete) ஆகிய செயல்களை செயல்படுத்தஉதவிடும் எளியசாதாரண இடைமுகமாக இந்தTinyDB என்பது செயல்படுகின்றது
அடுத்ததாக தயார்நிலையில் உள்ள Create Questions எனும் தலைப்புடன் கேள்விகளின் தொகுதிகளுக்கானQuestions Set: எனும் உருவப்பொத்தானும் கேள்விகளுக்காகQuestion: எனும் உருவப்பொத்தானும் அதன் விடைக்காகAnswer எனும் உருவப்பொத்தானும் இதனை சேமிப்பதற்காகSave Question எனும் உருவப்பொத்தானும் அடுத்தநிகழ்விற்கு செல்வதற்காகDone(Go Back) எனும் உருவப்பொத்தானும் தேவையாகும்
இதற்கடுத்ததாக திரையில் தோன்றிடும் கேள்விக்கான பதிலை குரலொலி வாயிலாக உள்ளீடு செய்திடுவதற்காகAnswer Questions என்ற தலைப்புடன் தேவையான கேள்வித்தொகுதிகளை தெரிவுசெய்வதற்காகSelect QuestionSetஎனும் உருவப்பொத்தானும் அந்த தொகுதியான கேள்வியை தெரிவுசெய்வதற்கானQuestion எனும் உருவப்-பொத்தானும் அந்த கேள்விக்கான பதிலை குரலொலிமூலம் உள்ளீடுசெய்வதற்கானAnswer எனும் உருவப்பொத்தானும்முந்தையதற்கு செல்லPrevios எனும் உருவப்-பொத்தானும்அடுத்ததற்கு செல்லNext எனும் உருவப்பொத்தானும் அடுத்தநிகழ்விற்கு செல்வதற்காகGoBack (Done) எனும் உருவப்பொத்தானும்(Button) தேவையாகும்இங்கு Microphone.png, validiting Answer ,Speach Recognizer input ஆகியவை கூடுதல் தேவையாகும்
முதலில் தலைப்புகளுக்காகLabel என்பதை Palette=>User Interface=>Label=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி இழுத்து கொண்டுவந்துவிடுக
பின்னர் பொத்தான்களுக்காகButtonஎன்பதை Palette=>User Interface=>Button=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி இழுத்து கொண்டுவந்துவிடுக
இவைகளை கிடைமட்டமாக அடுக்கிடுவதற்காக Horizontal Arrangements என்பதை Palette=>LAyout=>Horizontal Arrangement=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி இழுத்து கொண்டு வந்துவிடுக
நெடுவரிசையாக அடுக்கிடுவதற்காக Vertical Arrangement என்பதை Palette=>LAyout=> Vertical Arrangement => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி இழுத்து கொண்டுவந்துவிடுக
பிறகு இதனுடைய லேபிளிற்கும் பொத்தான்களுக்குமான பண்பியல்களை சரிசெய்து அமைத்துகொள்க அதன்பிறகு பிளாக் எடிட்டரில் பொருள்கூறுகளை(Components) தெரிந்து கொள்வதற்கேற்ப இவைகளின் பெயரினை மாற்றி யமைத்திடுக
இவைகளில் காட்சியாக ஒருசில பொருள்கூறுகள்(Components) திரையில் தோன்றிடும் வேறுசில பொருள்கூறுகளானவை non-visible என்பதன்கீழ் மறைந்து இருக்கும் மிகமுக்கியமாக இந்த TinyDB ஆனது இடைமுகவராக தரவுதளநிருவாகியாக கண்ணிற்கு புலப்படாமல் அமைந்திருக்கும் திரையில் தேன்றிடும் கேள்விகளுக்கான பதிலை குரலொலி மூலம் உள்ளீடு செய்வதற்காக Microphone.png எனும் ஏற்பாடும் குரலொலியை பதிலாக புரிந்துகொள்வதற்காகSpeach Recognizer input என்பதையும் உள்ளீடு செய்யப்படும் பதிலானது சரியானதா என சரிபார்ப்பதற்காக validiting Answerஎன்பதையும் அமைத்து கொள்க
இதன் பின்னர் பிழையேதும் உள்ளதாவென சரிபார்த்து சரியாக இருந்தால் Build எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படும் கோப்பாக மாற்றியமைத்து கொள்க இறுதியாக ப்ளூடூத் அல்லது யூஎஸ்பிவாயிலாக இந்த பயன்பாட்டினை நம்முடைய செல்லிடத்து பேசிக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: