அந்நிய செலாவணியை கையாளஉதவும் MetaTrader 4எனும் பயன்பாட்டினை பயன்படுத்திடுவதற்கான வழிகாட்டி

இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ்வந்துள்ளது அதாவது ஒருநாட்டில் உற்பத்தியாகம் பொருட்கள் தேவைப்படும் எந்தவொரு நாட்டிற்கும் ஏற்றுமதி செய்திடவும் ஒருநாட்டில் வாழும் மக்கள் வேறு எந்தவொரு நாட்டில் பணிபுரியவும் சுற்றுலாவாக சென்றுவரவும் முடியும் இதனால் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் பணநடமாட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன இவ்வாறு மற்ற நாடுகளுடன் பணநடமாட்டத்தை கையாளுவதற்கு உதவுவதுதான் MetaTrader4எனும் பயன்பாடாகும் இந்த பயன்பாட்டினை எவ்வாறு நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம் இந்த பயன்பாடானது இணையத்தின் வாயிலாக நேரடியாக அந்நிய செலாவணியை கையாள உதவுகின்றது இதனை http://www.metatrader4.com/ எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இதனுடைய செயலி கோப்பினை செயல்படுத்திடுக
9.1
1
முதலில் தோன்றிடும் திரையில் இந்த பயன்பாட்டினை பயன்படுத்திடுவதற்கான நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக அதற்கான தேர்வுசெய்பொத்தானை தெரிவுசெய்துகொண்டு Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் இயல்புநிலை கோப்பகத்தில் நிறுவுகை செய்வதை ஏற்றுக்கொள்க அல்லது நாம் விரும்பும் கோப்பகத்தில் நிறுவுகை செய்திடுமாறு குறிப்பிடுக தொடர்ந்து இதில் திரையில் இந்த பயன்பாட்டினை செயற்படுத்திடுவதற்கான உருவப்பொத்தான் அமையும் வாய்ப்பினை தேவையில்லை எனில் தெரிவுசெய்ததை நீக்கம் செய்துகொண்டு Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
9.2
2
அடுத்துதோன்றிடும் திரையில் இந்த பயன்பாடு நிறுவுகை செய்யபடும் செயல் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறும்அதில்Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
9.3
3
இறுதியாக இந்த MT4 எனும் பயன்பாடு நம்முடைய கணினியில் வெற்றிகரமாக நிறுவுகை செய்யப்பட்டுவிட்டதாகவும் நாம் நம்முடையபெயர் இதரவிவரங்களை உள்ளீடு செய்து நமக்கென கணக்கு ஒன்றினை துவங்கிடுமாறு மேல்மீட்பு சாளரம் ஒன்று கோரி தோன்றிடும் அதில் நம்முடைய name, country, state, city, zip code, address, phone , email போன்ற விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு பின்னர் நாம் துவங்கவிருக்கும் கணக்கின் வகையையும் (account type) எந்தநாட்டின் பணம் என பணத்தின் (currency) வகையையும் தெரிவுசெய்துகொள்க அடுத்துLeverage என்பதில் கீழிறங்கு பட்டியலில் தேவையானதை தெரிவுசெய்துகொள்க பொதுவாக கணக்கின் வகையானது demo account என்றே தெரிவுசெய்யபட்டிருக்கும் நாம் அந்நியசெலாவணி தரகரிடம்(broker) பதிவுசெய்திருந்தால் மட்டும் நாம் விரும்பும் கணக்கின் வகையை தெரிவுசெய்திடவேண்டும் மேலும் I agree to subscribe to your newsletters என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் நிகழ்நிலை படுத்தபட்ட தற்போதைய தரவுகளுடன் அந்நிய செலாவணிக்கான நான்கு வரைபடங்களானது திரையில் நான்கு “Market Watch” எனும் சாளரத்துடன் அருதில் அதனதன் bid askஆகியவிலையுடன் தோன்றிடும் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பணத்தின் குறியீடுகள்அவைகளை கையாளுவதற்கான கருவிகளின் பட்டைகள் ஆகியவை பல்வேறு உருவப்பொத்தான்களும் திரையில் தோன்றிடும் இந்த “Market Watch” எனும் சாளரம் ஒவ்வொன்றிலும் Symbols எனும் அந்தந்த நாட்டினுடைய பணக்குறியீ்டடு தாவிபொத்தானும் Tick Charts எனும் தற்போதைய அந்த நாட்டின் பணத்திற்கான விலையின் தாவிப்பொத்தானும் தோன்றிடும் இந்த “Market Watch” எனும் சாளரத்தின் கீழ்பகுதியில் Navigator எனும் சாளரம் இருக்கும் இதில் வாடிக்கையாளருடைய ஏற்கனவே துவங்கப்பட்ட கணக்குகளின் விவரங்களும் அதனோடு “Expert Advisors” , “Scripts.”போன்ற ஏராளமான விவர சுட்டிகளும் இருக்கின்றன
திரையின் கீழே Trade, Account History, Alerts, Mailbox, Experts , Journal ஆகிய ஆறு தாவிப்பொத்தான்களுடன் Terminal எனும் முனைமம் இருக்கின்றது இந்த ஒவ்வொரு தாவிப்பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தொடர்புடைய தாவியின் திரையில் அதற்கான முழுவிவரத்துடன் தோன்றிடும்
9.44

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: