ஜாவாஸ்கிரிப்ட் ஜெகொரி ஆகியவற்றின் அடிப்படையை தெரிந்துகொள்க

ஜாவாஸ்கிரிப்ட் ஆனது ஹெச்டிஎம்எல்லிற்காகவும் இணையத்திற்காகவும் பயன்படுவதற்கான நிரல்தொடர் எழுதிடஉதவும் ஒரு கணினி மொழியாகும். மேலும் இந்த ஜாவாஸ்கிரிப்ட் ஆனது பெரும்பாலும் எளிய பல்துறைசிறப்புமிக்க இணைய பக்கங்களின் செயலை விரிவாக்கம் செய்திடஉதவும் ஒரு திறன்மிகுந்த கணினிமொழியாகும் அடுத்துதாக ஜெகொரிஎன்பது வாடிக்கையாளர் பக்கத்திற்கான எளிய நிரல்எழுதுவதற்கு உதவிடும் ஜாவாஸ்கிரிப்ட்டின் நூலகவடிவமைப்பாகும் சுருக்கமாக கூறுவதென்றால் இவ்விரண்டும்அருமையான காட்சிதிறன் ,செயல்திறன் , தரவுகளின் கணக்கிடும் திறன் ஆகியவற்றை இணையத்திற்கு எளிதாக ஒருங்கே அமைந்திட உதவும் வல்லமை கொண்டவையாகும்
தற்போது எந்தவொரு நபரும் எந்தவொரு இணைய பக்கத்தினையும் இடைமுகம் செய்து அனுகியபின்னர் அந்த இணைய பக்கத்தின் படிவங்களில் தரவுகளை உள்ளீடு செய்தவுடன் அல்லது இணைய பக்கத்தில் உள்ள எந்தவொரு பொத்தானை அழுத்தியவுடன் அடுத்த நொடியே உடனடியாக மிகவும் விரைவாக நாம் செய்த செயலின் பதில் விளைவு தெரியவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்
இந்த எதிர்பார்ப்பினை நிறைவுசெய்யக்கூடிய திறன் ஜாவாஸ்கிரிப்ட் ஜெகொரி ஆகியவற்றிற்கு உண்டு என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் எந்தவொரு இணையபக்கத்திற்கான இயக்கநேர பாவணையும் அசைவூட்டுதலும் ஜாவாஸ்கிரிப்ட் ஜெகொரி ஆகியவற்றினால் மட்டுமே செயல்படுத்தமுடியும் இந்த ஜாவாஸ்கிரிப்ட் ஆனது ஹெச்டிஎம்எல் ,சிஎஸ்எஸ் ஆகியவற்றுடன்இணைந்து இணைய பக்கத்தினை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த அடிப்படை தொழில்நுட்பமாக விளங்குகின்றது இந்த ஜாவாஸ்கிரிப்டில் மாறிகள். செயலிகள் ஆகிய இரண்டுமட்டுமே அடிப்படையாகும்
பொதுவாக இதில் மாறிகளானது(Variable) var எனும் திறவுச்சொல்லுடன் முழுஎண், எழுத்துகளின்சரம் அல்லது ஏதேனும் ஒன்றினை இதன் மதிப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்வாறே இது செயல்படும் தன்மைகொண்டதாகும்
var ourFirstvariable; என்றவாறு var எனும் திறவுச்சொல்லுடன்
ourFirstVariable =10;என்றவாறு இந்த மாறிகளுக்கு முழுஎண் ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது
ourfirstVariable = ‘Our First String’;என்றவாறு இந்த மாறிகளுக்கு எழுத்துகளின்சரம் ஒதுக்கீடு செய்யபடும்
செயலிகள்(Functions) என்பது எந்தவொரு செயலியின் தொகுதியையும் பயன்பாடுகளில் திரும்ப திரும்ப பயன்படுத்திடும்போது ஒவ்வொருமுறையும் குறிமுறைவரிகளை எழுதிடாமல் நமக்கு தேவையான இடத்தில் தேவையான போது இந்த செயலியின் தொகுதியை அழைத்து அந்த செயலை செயல்படுத்தி கொள்வதாகும்
// How to define a function
function multiply_two number(a,b)
{
var c = a*b
return c;
}
// How to call a function
multiply_two_number(2,5)

என்பது ஒரு செயலியாகும்.

ஜெகொரி என்பது நம்முடைய ஹெச்டிஎம்எல்லிற்கு இணைய பயன்பாடுகளை மிகவிரைவாக முன்கூ்ட்டியே கட்டமைக்கப்படுவதற்கு செயல்படுத்திடமுடியும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட்டின் மூன்றாவது நபரின் நூலகவடிவமைப்பாகும் இந்த ஜாவாஸ்கிரிப்ட்டின் நூலகவடிவமைப்பை
என்றவாறு எளிதாக நம்முடைய இணைய பயன்பாட்டில் உள்ளிணைத்து கொள்ளமுடியும்
இதன்பின்னர் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட செயலிகளை நம்முடைய இணைய பயன்பாடுகளை மேம்படுத்திகொள்ள விரைவாக பயன்படுத்தி கொள்ளமுடியும்
இந்த ஜெகொரியில் தெரிவுசெய்பவர் (jQuery Selectors)ஆனது ஒரு ஹெச்டிஎம்எல்லிற்கு உறுப்பு ஒன்றினை தெரிவுசெய்தபின்னர் எளிதாக எந்தவொரு செயலையும் அல்லது நிகழ்வையும் செயல்படுத்திடமுடியும் இதில் $(“p”) என்றவாறு உறுப்பின் பெயர் , ($(“elementIdName”) என்றவாறு உறுப்பினுடைய சுட்டியின் பெயர், $(elementClassName”) என்றவாறு அந்த உறுப்பின் இனத்தின்பெயர் ஆகிய மூன்று வழிகளில் உறுப்புகளை தெரிவுசெய்திடமுடியும்
ஜெகொரியின்நிகழ்வுகள்(jQueryevents) என்பது ஒருஉறுப்பின்மீது சுட்டிநகர்ந்து செல்வது , ஒரு படிவத்தை சமர்ப்பிப்பது, ஒரு உறுப்பினை சொடுக்குதல் செய்வது ஆகியநிகழ்வுகள் அல்லது செயல்களாகும் உதாரணமாக
$(“button”)click(function(){
// code goes here …
}
என்றவாறு குறிப்பிடுவதாகும்
$(“button”)click(function()
{
var url_to_hit = “https://www.google.co.in/:
$get(url_to_hit, function(data, status)
(
$( ‘#anyElementId’), html(data): // update any div you want with relaoding
}):
}):
என்றவாறு ஜெகொரியால் ஒரு அஜாக்கின் வேண்டுதலையும் அதன் பதில் செயலையும் வாடிக்கையாளர் சேவையாளர் ஆகிய இருவரிடமும் $.get(): , $.post(): ஆகிய இருவழிகளில் உருவாக்கிடமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: