அறிந்துகொள்க WPSஎனும் கட்டணமற்ற புதிய அலுவலக பயன்பாட்டினை பற்றி

பல்வேறு வசதிகளை கொண்ட புதிய கணினி அல்லது மடிக்கணினியை அதிக விலைகொடுத்து வாங்கியவுடன் தொடர்ந்து அதனை செயல்படுத்திடுவதற்காக அதில் கட்டணத்துடனான விண்டோ இயக்கமுறைமை போன்ற இயக்கமுறைமையை மேலும் செலவிட்டு நிறுவுகை செய்திடுவோம் இதுமட்டும் போதுமா மேலும் நம்முடைய தேவையை நிறைவுசெய்வதற்கான பயன்பாடுகளை அதற்குமேலும் கூடுதலாக செலவிட்டு நிறுவுகை செய்திடவேண்டும் இவ்வாறு மேலும் மேலும் அதிக பணத்தை செலவிட்டு கணினியில் நம்முடைய தேவையை நிறைவுசெய்திடுவோம் அதனால் மேலும் செலவிடுவதற்கு தயங்கி ஒருசிலர் பயன்பாடுகள் மட்டும் கட்டணமில்லாதவை ஏதேனும் இருக்கின்றதாவென இணயத்தில் தேடிப்பிடித்து அவைகளின் அனுமதியற்ற பதிப்புகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வார்கள் அதிலும் நம்மில்பெரும்பாலானோர் எம்எஸ் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டின் இவ்வாறே அனுமதியற்ற பதிப்பினை பயன்படுத்தி வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்த செய்தியே இந்த எம்எஸ் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாடுதான் இன்று தனிநபர் பயன்பாடுமுதல் அரசுஅலுவலம் வரை அனைத்திலும் எங்கெங்கு நோக்கினும் நீக்கமற நின்று கோலோச்சிவருகின்றது ஆயினும் இதற்கு இணையாக கட்டணமில்லாத கட்டற்ற அலுவலக பயன்பாடுகளான ஓப்பன் ஆஃபிஸ் , லிபர் ஆஃபிஸ் போன்ற பயன்பாடுகள் நம்மில் ஒரு சிலரால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன ஆனாலும் ஒருசிலர் இந்த எம்எஸ் ஆஃபிஸ் அலுவலக பயன்பாட்டினை விட்டிட்டு வேறு மாற்று அலுவலக பயன்பாடுகளுக்கு மாறிச்செல்வது என்றால் அந்த மாற்று அலுவலக பயன்பாட்டில் எம்எஸ் ஆஃபிஸ் கட்டமைப்பில் உள்ள கோப்புகளை திறந்து படிக்கவும் பயன்படுத்திடவும் இறுதியாக சேமிக்கவும் முடியுமோ முடியாதோ என்ற தயக்கமும் மயக்கமும் கொண்டு தயங்கிகொண்டே உள்ளனர் அவ்வாறானவர்களுக்கு உதவ வருவதுதான WPSஎனும் அலுவலக பயன்பாடாகும் இந்தபயன்பாட்டில் உள்ள பட்டியல், பொத்தான்கள் , செயல்முறைகள் ,திரைத் தோற்றங்கள் ஆகியவை அச்சுஅசல் எம்எஸ் ஆஃபிஸை போன்றே உள்ளதால் இந்த WPSஎனும் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்திடும்போது எம்எஸ் ஆஃபிஸை பயன்படுத்திகொண்டிருப்பதை போன்றே உணர்வு நமக்கு ஏற்படும் இதில் எம்எஸ் ஆஃபிஸை போன்ற வேர்டு, விரிதாள் படவில்லை ஆகிய அனைத்து பயன்பாடுகளும் உள்ளன .எம்எஸ் ஆஃபிஸின் வடிவமைப்பான .docx முதல் எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் நாம் திறந்து பயன்படுத்தி கொள்ளவும் அதேவகை கோப்பாக இந்த பயன்பாட்டிலிருந்து சேமித்துகொள்ளவும் முடியும் இந்த பயன்பாடானது விண்டோ, ஆப்பிளின்ஐஓஎஸ், லினக்ஸ் ஆண்ட்ராய்டு போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://www.wps.com/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க
5.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: